Ads Right Header

குரூப்4 - இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அறிவிப்பு!!!


எண் : 69/2021 நாள் : 07.12.2021 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எண் .3 , தேர்வாணைய சாலை , சென்னை - 03 செய்தி வெளியீடு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு- IV 

( தொகுதி IV- ல் அடங்கிய ) 2018-2019 மற்றும் 2019-2020 | Combined Civil Sanvices Examination - IV ( Group - IV Servkces ] ] - இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் , 14.06.2019 ஆம் நாளிட்ட அறிவிக்கை எண் : 192019 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது . 

இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 01.09.2019 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 12.11.2019 அன்று வெளியிடப்பட்டது . இத்தெரிவு தொடர்பான இரண்டாம்கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை -3 , தேர்வாணைய சாலை ( பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில் ) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் தட்டச்சர் பதவிக்கு 18.12.2021 மற்றும் 20.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது . 

மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண்ட இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலத்தாய்விற்கான தேதி , நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய “ அழைப்புக்கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து  ( www.tnpsc.gov.in ) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் . விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது . 

மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இட ஒதுக்கீட்டு விதிகள் ! விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர் . எனவே அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது . 

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு உரிய நாட்களில் / நேரத்திற்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது . 

திருமதி . பி.உமா மகேஸ்வரி , இ.ஆ.ப. , செயலாளர்.




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY