Ads Right Header

ஆறாம் வகுப்பு தமிழ் இயல் - 3.3. கணியனின் நண்பன்..


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நுட்பமாகச் சிந்தித்து அறிவது …………..
அ) நூலறிவு
ஆ) நுண்ண றிவு
இ) சிற்றறிவு
ஈ) பட்டறிவு
Answer:
ஆ) நுண்ண றிவு

Question 2.
தானே இயங்கும் இயந்திரம் …………..
அ) கணினி
ஆ) தானியங்கி
இ) அலைபேசி
ஈ) தொலைக்காட்சி
Answer:
ஆ) தானியங்கி

Question 3.
‘நின்றிருந்த என்னும்’ சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) நின் + றிருந்த
ஆ) நின்று + இருந்த
இ) நின்றி + இருந்த
ஈ) நின்றி + ருந்த
Answer:
ஆ) நின்று + இருந்த

Question 4.
‘அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) அவ்வு + ருவம்
ஆ) அ + உருவம்
இ) அவ் + வுருவம்
ஈ) அ + வுருவம்
Answer:
ஆ) அ + உருவம்

Question 5.
மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) மருத்துவம்துறை
ஆ) மருத்துவதுறை
இ) மருந்துதுறை
ஈ) மருத்துவத்துறை
Answer:
ஈ) மருத்துவத்துறை

Question 6.
செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) செயலிழக்க
ஆ) செயல் இழக்க
இ) செய இழக்க
ஈ) செயலிலக்க
Answer:
அ) செயலிழக்க

Question 7.
நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ………….
அ) போக்குதல்
ஆ) தள்ளுதல்
இ) அழித்தல்
ஈ) சேர்த்தல்
Answer:
ஈ) சேர்த்தல்

Question 8.
எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் …………..
அ) அரிது
ஆ) சிறிது
இ) பெரிது
ஈ) வறிது
Answer:
அ) அரிது

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ……………..
2. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ………………
3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் …………..
4. ‘சோபியா’ ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு …………..
Answer:
1. (விடை: எந்திரங்கள்)
2. (விடை: செயற்கை நுண்ணறிவு)
3. (விடை: டீப் புளூ)
4. (விடை: சவுதி அரேபியா)

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. தொழிற்சாலை …………………………………………….
விடை : எங்கள் பகுதியில் தொழிற்சாலை மூலம் வெளியேறும் கழிவுகள் மிகுந்து விட்டன.

2. உற்பத்தி ………………………………………………
விடை : நம் நாட்டில் விளையும் உணவு தானியங்களை மேலும் உற்பத்தி செய்து தன்னிறைவை அடையவேண்டும்.

3. ஆய்வு ……………………………………………………
விடை : அறிவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வு தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவர்.

4. செயற்கை ……………………………………………
விடை : நாம் நமது மண்ணில் இருந்தே செயற்கைக் கோள்களை அனுப்பும் திறனைப் பெற்றுள்ளோம்.

5. நுண்ண றிவு …………………………………………….
விடை : இயந்திர மனிதர்கள் தங்கள் நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்தி வேலையை முடிக்கின்றன.

குறுவினா

Question 1.
‘ரோபோ’ என்னும் சொல் எவ்வாறு உருவானது?
Answer:
ரோபோ உருவாக அடிப்படை நிகழ்வு :
(i) செக் நாட்டைச் சேர்ந்த காரல் சேபெக் என்ற நாடக ஆசிரியர், 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார்.
(ii) அதில் ‘ரோபோ’ என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு அடிமை என்று பொருள்.
(iii) அந்நாடகத்தில் ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாகக் காட்சிகளை அமைத்திருந்தார். இந்நிகழ்வே, ரோபோ என்னும் சொல் என்ற சொல் உருவாக அடிப்படை நிகழ்வானது.

Question 2.
‘டீப் புளூ’ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.
Answer:
‘டீப் ப்ளூ’ – ரோபோ :
(i) ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினிதான் டீப் ப்ளூ’.
(ii) இது 1997 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சதுரங்கப் போட்டியில் கேரி கேஸ்புரோவ் என்பவருடன் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY