ஆறாம் வகுப்பு தமிழ் இயல் - 3.1. அறிவியல் ஆத்திசூடி.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
உடல் நோய்க்கு ……….. தேவை
அ) ஔடதம்
ஆ) இனிப்பு
இ) உணவு
ஈ) உடை
Answer:
அ) ஔடதம்
Question 2.
நண்பர்களுடன் ………….. விளையாடு
அ) ஒருமித்து
ஆ) மாறுபட்டு
இ) தனித்து
ஈ) பகைத்து
Answer:
அ) ஒருமித்து
Question 3.
‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) கண் + அறி
ஆ) கண்டு + அறி
இ) கண்ட + அறி
ஈ) கண் + டறி
Answer:
ஆ) கண்டு + அறி
Question 4.
‘ஓய்வற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) ஓய்வு + அற
ஆ) ஓய் + அற
இ) ஓய் + வற
ஈ) ஓய்வு + வற
Answer:
அ) ஓய்வு + அற
Question 5.
ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) ஏன்என்று
ஆ) ஏனென்று
இ) ஏன்னென்று
ஈ) ஏனன்று
Answer:
ஆ) ஏனென்று
Question 6.
ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) ஒளடதமாம்
ஆ) ஔடதம் ஆம்
இ) ஓளடதாம்
ஈ) ஔடத ஆம்
Answer:
அ) ஔடதமாம்
எதிர்ச்சொற்களைப் பொருத்துக
அணுகு × தெளிவு
ஐயம் × சோர்வு
உண்மை × பொய்மை
உண்மை × விலகு
விடை :
அணுகு × விலகு
ஐயம் × தெளிவு
ஊக்கம் × சோர்வு
ஊக்கம் × பொய்மை
Question 1.
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
Answer:
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது அனுபவம்.
நூல் வெளி
‘தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்’ என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதிஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவறைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
சொல்லும் பொருளும்
1. இயன்றவரை – முடிந்தவரை
2. ஒருமித்து – ஒன்றுபட்டு
3. ஔடதம் – மருந்து.
Leave Comments
Post a Comment