Ads Right Header

ஆறாம் வகுப்பு தமிழ் இயல் - 2.1. சிலப்பதிகாரம்.



சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கழுத்தில் சூடுவது …….
அ) தார்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
Answer:
அ) தார்

Question 2.
கதிரவனின் மற்றொரு பெயர் ………………
அ) புதன்
ஆ) ஞாயிறு
இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
Answer:
ஆ) ஞாயிறு

Question 3.
‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) வெண் + குடை
ஆ) வெண்மை + குடை
இ) வெம் + குடை
ஈ) வெம்மை + குடை
Answer:
ஆ) வெண்மை + குடை

Question 4.
‘பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) பொன் + கோட்டு
ஆ) பொற் + கோட்டு
இ) பொண் + கோட்டு
‘ஈ) பொற்கோ + இட்டு
Answer:
அ) பொன் + கோட்டு

Question 5.
கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) கொங்கு அலர்
ஆ) கொங்அலர்
இ) கொங்கலர்
ஈ) கொங்குலர்
Answer:
இ) கொங்கலர்

Question 6.
அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) அவன்அளிபோல்
ஆ) அவனளிபோல்
இ) அவன்வளிபோல்
ஈ) அவனாளிபோல்
Answer:
ஆ) அவனளிபோல்

நயம் அறிக

Question 1.
பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
மாமழை – மேரு – மேல்
கொங்கு – காவேரி

Question 2.
பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
திங்கள் – கொங்கு
மாமழை – நாம

குறுவினா

Question 1.
சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
Answer:
சிலப்பதிகாரக் காப்பியம் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது.


Question 2.
இயற்கை போற்றத்தக்கது ஏன்?
Answer:
(i) நாம் இயற்கையோடு இயைந்து வாழ்கிறோம். இயற்கை என்று சொல்லக்கூடிய சூரியன், சந்திரன், மழை இவையெல்லாம் நாம் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளைக் கொடுத்து உதவுகிறது.
(ii) சூரியன் ஒளியைத் தருவதால்தான் மரங்கள் வளர்கின்றது. இதனால் நமக்கு மழை பொழிகிறது. மழை நமக்கு உணவைக் கொடுக்கும்.
(iii) உணவாகவும் அமையும். இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எனவே இயற்கை போற்றத்தக்கதாகும்.

நூல் வெளி
சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம். சிலம்பின் செயலை மையமாகக் கொண்டு கதையைக் கூறுவதால் சிலப்பதிகாரம் என்னும் பெயர் பெற்றது. மூன்று காண்டங்கள் முப்பது காதைகளைக் கொண்டது. புகார் காண்டம் – 10 காதைகள், மதுரைக் காண்டம் -13 காதைகள், வஞ்சிக் காண்டம் – 7 காதைகள். காண்டம் – பெரும் பிரிவு, காதை – கதை தழுவியப்பாட்டு காண்டத்தின் உட்பிரிவு – காதை. தொடர்நிலைச் செய்யுள், முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் ஆகியவை இவற்றின் வேறு பெயர்களாகும். திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.

பொருளுரை
தேன் நிறைந்த அத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன். அவனுடைய வெண்கொற்றக்குடை குளிர்ச்சி பொருந்தியது. அதைப் போல வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம்.

காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன் போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது. அதனால் கதிரவனைப் போற்றுவோம்!

அச்சம் தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான். அதுபோல, மழை, வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது. அதனால் மழையைப் போற்றுவோம்!

விளக்கவுரை
உலகத்தில் உள்ளவர்களுக்கு எக்காலத்திலும் பொதுவாக விளங்கி நலன்களைப் புரிந்து வரும் சந்திரன், சூரியன், மாமழை ஆகியவற்றைப் போற்றியுள்ளார். இது தனிப்பெருஞ்சிறப்புடையதாகும்.

சோழனின் வெண்கொற்றக் குடையானது வணக்கத்திற்குரியது, தண்மை நிறைந்தது. அது வெயிலை மறைப்பதற்கு என்று அமைவது அன்று. அதனைப் போன்று சந்திரனும் குளிர்ச்சித் தன்மையுடையது. அதனால் திங்களைப் போற்றி வணங்குவோம்.

காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரமானது எல்லா இடங்களிலும் பரந்து விரிந்துள்ளது அதனைப்போல கதிரவனும் உலகம் முழுவதிலும் பரந்து விரிந்து தனது ஒளியைத் தருகிறது. அதனால் கதிரவனைப் போற்றி வணங்குவோம்.

அச்சம் தருகின்ற கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் மக்களுக்கு மன்னன் கருணை அளிக்கின்றான். அதனைப்போல மழை என்பது உலகத்தில் தன்மையினை விளங்கச் செய்கிறது. அமுத மழையாகப் பொழிந்து மக்களைக் காக்கின்றது. இதனை அன்பின் தன்மையினைக் குறிக்கும் வகையில் அளி எனக் கூறியுள்ளார். இதன் சிறப்பினை உணர்த்தவே மாமழையைப் போற்றுகிறார்.

சொல்லும் பொருளும்
1. திங்கள் – நிலவு
2. கொங்கு – மகரந்தம்
3. அலர் – மலர்தல்
4. திகிரி – ஆணைச்சக்கரம்
5. பொற்கோட்டு – பொன்மயமானசிகரத்தில்
6. மேரு – இமயமலை
7. நாமநீர் – அச்சம் தரும் கடல்
8. அளி – கருணை


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY