CURRENT AFFAIRS
2021 November Month Current Affairs (Tamilnadu Govt ).
எழுத்தாளர்களுக்கு பொற்கிழி விருதுகள்
* 2020-2021 - ஆம் ஆண்டுகளுக்கான ' கலைஞர் மு . கருணாநிதி பொற்கிழி " விருதுகளை எழுத்தாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் .
* தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ( பபாசி ) சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நான்கு தமிழ் எழுத்தாளர்களுக்கும் , பிற இந்திய மொழிகளில் ஒரு எழுத்தாளருக்கும் ஆங்கிலமொழி எழுத்தாளர் ஒருவருக்கும் மறைந்த முதல் கருணாநிதி பெயரிலான விருது வழங்கப்பட்டு வருகிறது .
* அந்த வகையில் 2005 - ஆம் ஆண்டு முதல் நிகழாண்டு வரை 84 எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன . விருதுடன் ரூ .1 லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் 2020 , 2021- ஆம் ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது .
விழாவில் 2020 - ஆம்
ஆண்டுக்கான விருதுகள் ந.முருகேசபாண்டியன் ( உரைநடை ) அ.மங்கை ( நாடகம் ) ,
அறிவுமதி ( கவிதை )
பொன்னீலன் ( நாவல் ) , ( ஆங்கிலம் ) , ஆர்.பாலகிருஷ்ணன் சித்தலிங்கையா பிற இந்திய மொழி ( கன்னடம் ) ஆகியோருக்கு வழங்கப்பட்டன .
அதேபோன்று 2021 - ஆம் ஆண்டுக்கான விருதுகள் அபி ( கவிதை ) , இராசேந்திரசோழன் ( புனைவிலக்கியம் ) எஸ் . ராமகிருஷ்ணன் ( உரைநடை ) , வெளிரங்கராஜன் ( நாடகம் ) , மருதநாயகம் ( ஆங்கிலம் )
நதித் சாகியா ( பிற இந்திய மொழி , காஷ்மீரி ) ஆகியோருக்கும் வழங்கப்பட்டன .
விருதுகளை வழங்கி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மு.க.ஸ்டாலின் பேசுகையில் , முதல்வர் தலைமையிலான திமுக ஆட்சியில் எழுத்தாளர்களுக்கும் , தமிழ் இலக்கியத் துறைக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன .
பதிப்பாளர்கள் , புத்தக விற்பனையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது . அந்த வகையில் புத்தகப் பூங்கா உள்ளிட்ட பபாசி வைத்துள்ள பிரதான கோரிக்கைகளை முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார் என்றார் அவர் . விழாவில் பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் , துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் , செயலாளர் எஸ் . கே . முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார் .
நவம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்
முழுவதும் படிக்க...
Previous article
Next article
Leave Comments
Post a Comment