CURRENT AFFAIRS
2021 Nov Dec - Current Affairs - நவம்பர் டிசம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்!!!
தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடத்தும் போட்டித்தேர்வுகள் அனைத்திலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் - தமிழக அரசு
நாட்டிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையில் " தமிழகத்துக்கு முதல் மாநில விருது " - குடியரசுத் தலைவர் வழங்கினார் .
அகமதாபாத்தில் உள்ள " சைடஸ் கேடிலா " நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் டிஎன்ஏ நுட்ப அடிப்படையிலான " சைகோவ் - டி " தடுப்பூசிக்கு ஒப்புதல் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
டிசம்பர் 4 - தேசிய கடற்படை தினம் சர்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைமை பொருளாதார நிபுணரான இந்திய வம்சாவளி " கீதா கோபிநாத் " அந்த அமைப்பின் துணை நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு .
இந்திய நீளம் தாண்டுதல் வீராங்கனை " அஞ்சு பாபி ஜார்ஜுக்கு " உலக தடகள சம்மேளனம் சார்பில் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது
" இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியை விரைவு படுத்தல் " திட்டத்தின் கீழ் 22,000 > பெட்ரோல் நிலையங்களில் வாகன மின்னேற்ற நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரம்- மத்திய அரசு .
தமிழ்நாடு , உத்திரப்பிரதேசத்தில் அமைக்கப்படும் பாதுகாப்பு தளவாட வழித்தடங்கள் 20,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் - மக்களவையில் அமைச்சர்
மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக " சேலம் மாவட்டம் " தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது .
இந்தியாவிலிருந்து வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை , உயிர்காக்கும் மருந்துகளை அனுப்புவதற்கு பாகிஸ்தான் ஒப்புதல்.
டெலகிராமில் எங்களோடு படிக்க
தேர்வெழுத இணைவீர்
( Note: We do not create any study materials, we just sharing this material from the internet to students. All the credits go to the respective creators. please help to students who preparing for TNPSC, RRB, POLICE exams... )
Previous article
Next article
Leave Comments
Post a Comment