Ads Right Header

₹10,000/- ஊக்கத்தொகை அளிக்கும் திருக்குறள் !!!

 


தமிழ்நாடு அரசு திருக்குறளுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கி வருவது பாராட்டுக்குரியது.  அதன்படி 1050 திருக்குறள்களை பாடத்திட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்புவரை வைத்து அதில் 240 குறள்களை  கட்டாயம் படிக்கவேண்டிய நிலையில் பாடத்திட்டம் உள்ளது வரவேற்கத்தக்கது. 


1330 திருக்குறளை ஒப்பித்து திருக்குறள் முற்றோதல் முடித்தால் அரசு சான்றிதழும் , 10000 ரூபாய் ஊக்கத்தொகையும் தமிழக அளவில் 70 பேருக்கு மட்டுமே என்று இருந்த கட்டுப்பாட்டை நீக்கி எத்தனைபேர் முற்றோதல் முடித்தாலும் ரூபாய் 10000 மற்றும் அரசு சான்றிதழ் கிடைக்கும் என்று புதிய அரசு பொறுப்பேற்று  முதல்வர் அறிவித்துள்ளது மிகப்பெரிய முன்னெடுப்பு.  


இதை தமிழக மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.  இது எளிதானதல்ல, குறைந்தது ஆறு மாதம் முதல் ஓர் ஆண்டுக்கு கடும் பயிற்சியின் மூலம் நம் மாணவர்கள் இதை படித்துவருகிறார்கள். இதற்கு உரிய பயிற்சியாளர்கள் உள்ளார்கள்.   


இந்த வசதிகள் அனைத்தும் தமிழ்நாட்டு மாணவர்களுக்குத்தான்.  இதுவரை வெளிநாடு வாழ் தமிழ்க்குழந்தைகள் திருக்குறள் முற்றோதல் செய்தாலும் அரசு சான்றிதழும் , ரூபாய்10000 வழங்கப்படும் என்று தெளிவுபடுத்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை, பிற நாட்டு தமிழ்ச்சங்கங்கள் வெளிநாடு வாழ் துறை அமைச்சருக்கும், தமிழ் வளர்ச்சித்துறைக்கும் கோரிக்கை வைத்து சாத்தியமாக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


உலகப்பொதுமறையை உலகம் முழுதும் பரவி வாழும் தமிழ்மக்களின் பிள்ளைகள் கற்பதற்கு இது பெரும் ஊக்கமாக அமையும்.  திருக்குறள்  கற்பதற்கும், உரிய வயது அனுபவம் வரும்போது கற்றதை பயன்படுத்தி அறம் சார்ந்த சமூகமாக நிற்பதற்கும் பயன்படும்.


நன்றி திரு. ச.பார்த்தசாரதி

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY