Ads Right Header

ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 1.

 


1.1 எங்கள் தமிழ்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நெறி ‘ என்னும் சொல்லின் பொருள் ………………..
அ) வழி
ஆ) குறிக்கோள்
இ) கொள்கை
ஈ) அறம்
Answer:
அ) வழி

Question 2.
குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) குரல் + யாகும்
ஆ) குரல் + ஆகும்
இ) குர + லாகும்
ஈ) குர + ஆகும்
Answer:
ஆ) குரல் + ஆகும்

Question 3.
வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) வான் ஒலி
ஆ) வானொலி
இ) வாவொலி
ஈ) வானெலி
Answer:
ஆ) வானொலி

நயம் அறிக

Question 1.
‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
அருள்நெறி-  ……………………..
பொருள் பெற – ……………………..
கொல்லா – ……………………..
Answer:
மோனை:
அருள்நெறி – அதுவே
பொருள் பெற – போற்றா
கொல்லா – கொள்கை

Question 2.
‘எங்கள் தமிழ்’ பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
அருள் –  ……………………..
கொல்லா –  ……………………..
அன்பும் –  ……………………..
Answer:
எதுகை :
அருள் – பொருள்
கொல்லா – எல்லா
அன்பும் – இன்பம்

Question 3.
‘எங்கள் தமிழ்’ பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
தரலாகும் – ……………………..
புகழாது – ……………………..
குறியாக – ……………………..
ஊக்கிவிடும் – ……………………..
Answer:
இயைபு :
தரலாகும் – குரலாகும்
புகழாது – இகழாது
குறியாக – நெறியாக
ஊக்கிவிடும் – போக்கிவிடும்

குறுவினா

Question 1.
தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
Answer:

  • தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.
  • அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

Question 2.
தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
Answer:

  • தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
  • தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார். இவையே கற்றவரின் இயல்புகளாகும் என நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
‘எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
தமிழ்மொழியின் பண்புகள்:

  • தமிழ்மொழி , அருள்நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.
  • அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகள்:

  • தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்கள்.
  • தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்கள்.

எல்லா மனிதர்களும் இன்புற்று வாழும் நெறிகள்:

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

தமிழ்மொழி தேன் போன்றது:

  • நம் தமிழ் மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்.
  • அஃது அச்சத்தைப் போக்கி இன்பத்தைத் தரும்.
  • எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும். 

Question 1.
“எங்கள் தமிழ்” – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
இப்பாடலை இசையுடன் பாடிப் பழக வேண்டும்.

Question 2.
பின்வரும் நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க.
Answer:
கத்தி யின்றி ரத்தமின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!….. (கத்தியின்றி…)
கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட…… (கத்தியின்றி ….)


இப்பாடல் விடுதலை வேட்கையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. இவர் பாடலில் இயல்பாகவே சொல் நயம், பொருள் நயம், தொடைநயம் அமையப் பெற்ற ஓர் அற்புத பாடலாகும்.

மோனை: செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனையாகும்.

த்தியின்றி – ண்டதில்லை, ண்டு – லித்த

எதுகை : செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.

த்தியின்றி – யுத்தமொன்று,
ண்டதில்லை – சண்டையிந்த

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. அருள் – கருணை
2. நெறி – வழி
3. விரதம் – நோன்பு
4. ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
5. குறி – குறிக்கோள்
6. பொழிகிற – தருகின்ற
7. வானொலி – வான்மொழி

நிரப்புக :

Question 1.
குறி என்பதன் பொருள் ………
Answer:
குறிக்கோள்

Question 2.
விரதம் என்பதன் பொருள்……………..
Answer:
நோன்பு

விடையளி :

Question 1.
தமிழ்மொழியைக் கற்றோர் எதனை விரும்பமாட்டார்?
Answer:

  • தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
  • தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

Question 2.
எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ எவை உதவும்?
Answer:
கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்பமாக வாழ அன்பும் அறமும் பெரிதும் உதவும் என நாமக்கல் கவிஞர் தம் பாடல் மூலம் அறிவுறுத்துகிறார்.

Question 3.
தமிழ்மொழி எதனைத் தூண்டும்?
Answer:
நம் தாய்மொழியாம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும் என நாமக்கல் கவிஞர் தம் பாடல் மூலம் தெரியப்படுத்துகிறார்.

Question 4.
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் எனப் போற்றப்பட்டவர் யார்?
Answer:
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் எனப் போற்றப்பட்டவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.

Question 5.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் காந்தியக் கவிஞர் என ஏன் அழைக்கப்பட்டார்?
Answer:
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தைப் பின்பற்றியதால் ‘காந்தியக் கவிஞர்’ என்று அழைக்கப்பட்டார்.

Question 6.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் படைத்த நூல்களைக் குறிப்பிடுக.
Answer:
மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என் கதை, சங்கொலி முதலியன நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் படைத்த நூல்கள்.

பொருத்துக :

1. ஊக்கிவிடும் – அ) நோன்பு
2. பொழிகிற – ஆ) ஊக்கப்படுத்தும்
3. குறி – இ) தருகின்ற
4. விரதம் – ஈ) குறிக்கோள்
Answer:
1-  ஆ
2-  இ
3-  ஈ
4- அ

பாடலின் பொருள்

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேச மாட்டார். தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்; எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

1.2 ஒன்றல்ல இரண்டல்ல

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்………
அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்தாதி
Answer:
இ) பரணி

Question 2.
வானில் ………………. கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்
Answer:
ஆ) முகில்

Question 3.
‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல
Answer:
ஈ) இரண்டு + அல்ல

Question 4.
‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்
Answer:
அ) தந்து + உதவும்

Question 5.
ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………..
அ) ஒப்புமை இல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்பு இல்லாத
Answer:
இ) ஒப்புமையில்லாத

குறுவினா

Question 1.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும் எனக் கவிஞர் கூறுகிறார்.

Question 2.
‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
Answer:
முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள் போல் புகழ்பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு பலவாகும்.

சிறுவினா

Question 1.
தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். இசைப்பாடலான பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, வான்புகழ் கொண்ட திருக்குறள். அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்கள் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

Question 1.
தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
Answer:
அதியமான் நெடுமான் அஞ்சி (அதியமான்), வேள் ஆய் ஆண்டிரன் (ஆய்), வல்வில் ஓரி ஓரி), மலையமான் திருமுடிக்காரி(காரி, கண்டீரக் கோப்பெருநள்ளி நள்ளி), பாரி, வையாவிக் கோப்பெரும் பேகன் (பேகன்)

(i) அதியமான் : தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவன். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது “கோமகன்” என்பதன் மரூஉ. அதியமான் என்பது அதியர் கோமான்’ என்பதன் மரூஉ. அஞ்சி என்பது இவரது இயற்பெயர். இவருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் ஆகும். ஒளவையாரின் நெருங்கிய நண்பர் ஆவார்.

(ii) ஆய் : பொதிகை மலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர்குல மன்னன் ஆவான்.

(iii) ஓரி : கடையெழுவள்ளல்களுள் ஒருவரான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பட்டார்.

Question 2.
தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
(i) இதிகாசம்
(ii) உரைநடை
(iii) உவமை
(iv) கட்டுரை
(v) கலந்துரையாடல்
(vi) கலை
(vii) கவிதை
(viii) காப்பியம்
(ix) சிறுகதை
(x) தொடர்கதை
(xi) சொலவடை
(xii) நாடகம்
(xiii) பழமொழி
(xiv) பாட்டு
(xv) புனிதம்
(xvi) விடுகதை

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. ஒப்புமை – இணை
2. முகில் – மேகம்
3. அற்புதம் – விந்தை
4. உபகாரி – வள்ளல்

நிரப்புக :

Question 1.
பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் …………
Answer:
உடுமலை நாராயணகவி

Question 2.
முகில் என்பதன் பொருள் …………….
Answer: மேகம்

Question 3.
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவர் ……..
Answer:
குமண வள்ளல்

விடையளி :

Question 1.
முல்லைக்கு தேர் தந்தவர் யார்?
Answer:
முல்லைக்குத் தேர் தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றவர் வள்ளல் வேள்பாரி.

Question 2.
பாணி இலக்கி பரணி இலக்கியம் என்றால் என்ன?
Answer:
பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம்.

பாடலின் பொருள்

தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றிரண்டல்ல பலவாகும். அவை வேறு எவற்றோடும் இணைசொல்ல முடியாத விந்தைகளாகும். இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். அத்தோடு இசைப் பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான்புகழ் கொண்ட திருக்குறளும் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்கள் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள் போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மொழியின் முதல்நிலை பேசுதல், …………………. ஆகியனவாகும்.
அ) படித்தல்
ஆ) கேட்டல்
இ) எழுதுதல்
ஈ) வரைதல்
Answer:
ஆ) கேட்டல்

Question 2.
ஒலியின் வரிவடிவம் …….. …… ஆகும்.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) குரல்
ஈ) பாட்டு
Answer:
ஆ) எழுத்து

Question 3.
தமிழின் கிளைமொழிகளில் ஒன்று ………….
அ) உருது
ஆ) இந்தி
இ) தெலுங்கு
ஈ) ஆங்கிலம்
Answer:
இ) தெலுங்கு

Question 4.
பேச்சுமொழியை ………………….. வழக்கு என்றும் கூறுவர்.
அ) இலக்கிய
ஆ) உலக
இ) நூல்
ஈ) மொழி
Answer:
ஆ) உலக

சரியா தவறா என எழுதுக

Question 1.
மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.
Answer:
சரி

Question 2.
எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
Answer:
சரி

Question 3.
பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
Answer:
தவறு

Question 4.
எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
Answer:
தவறு

Question 5.
பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம். Answer:
சரி

ஊடகங்களை வகைப்படுத்துக

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்

Answer:

குறுவினா

Question 1.
மொழியின் இரு வடிவங்கள் யாவை?
Answer:
(i) ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்குப் பேச்சுமொழித் தேவைப்படுகிறது.
(ii) காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்துமொழித் தேவைப்படுகிறது. (iii) எனவே பேச்சுமொழி, எழுத்துமொழி இவ்விரு வடிவங்களும் மொழியின் இரு கண்களாகும்.

Question 2.
பேச்சுமொழி என்றால் என்ன?
Answer:

  • வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சுமொழியாகும்.
  • மொழியின் உயிர் நாடியாக விளங்குவது பேச்சுமொழியே என்பர்.

Question 3.
வட்டாரமொழி எனப்படுவது யாது?
Answer:

  • பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும்.
  • மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும்.
  • இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

Question 2.
கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
Answer:

  • ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
  •  அவர்கள் வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத் தடைகள் போன்றவற்றின் காரணமாக பேசும் மொழியில் சிறிது சிறிது மாற்றங்கள் ஏற்படும்.
  • அவர்களுக்கு இடையேயான தொடர்பு குறையும் பொழுது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அவ்வாறு உருவாகும் புதிய மொழிகள் கிளைமொழிகள்’ எனப்படும்.
  • கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் ஆகும்.

Question 1.
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சு வழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்துவழக்குத் தொடர்களை எழுதி வருக.
Answer:
பேச்சுமொழி : அம்மா பசிக்குது எனக்குச் சோறு வேணும்.
எழுத்துமொழி : அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும். பேச்சுமொழி : நல்லாச் சாப்ட்டான்.
எழுத்துமொழி : நன்றாகச் சாப்பிட்டான்
பேச்சுமொழி : நல்லா படிச்சான்.
எழுத்துமொழி : நன்றாகப் படித்தான்.
பேச்சுமொழி : சந்தியா சாப்ட்டியா.
எழுத்துமொழி : சந்தியா சாப்பிட்டாயா.
பேச்சுமொழி : வீட்டுப் பாடம் எழுதிட்டியா.
எழுத்துமொழி : வீட்டுப்பாடம் எழுதிவிட்டாயா.

Question 2.
பேசும் போது சில நேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவதும் உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்து வழக்குச் சொற்களையும் எழுதுக.
Answer:
எடுத்துக்காட்டு :
(i) சொல்லு – சொல்
(ii) வில்லு – வில்
(iii) நில்லு – நில்
(iv) வந்தியா – வந்தாயா?
(v) எழுந்தியா – எழுந்தாயா?
(vi) சாப்ட்டியா – சாப்பிட்டாயா?

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது ………………. மொழியாகும்.
அ) பேச்சுமொழி
ஆ) எழுத்துமொழி
இ) இரட்டை வழக்கு மொழி
ஈ) இவை ஏதும் இல்லை
Answer:
ஆ) எழுத்துமொழி

Question 2.
சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் பொருள் வேறுபடும் என்பதை உணர்த்தும் இலக்கண நூல் ..
அ) நன்னூல்
ஆ) தண்டியலங்காரம்
இ) புறப்பொருள் வெண்பா
ஈ) தொல்காப்பியம்
Answer:
அ) நன்னூல்


Question 3.
பேச்சுமொழியில் உணர்ச்சிக் கூறுகள்……………..
அ) அதிகமாக இருக்கும்
ஆ) குறைவாக இருக்கும்
இ) அளவாக இருக்கும்
ஈ) இவை ஏதும் இல்லை
Answer:
அ) அதிகமாக இருக்கும்

நிரப்புக :

Question 1.
பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகள் ……..
Answer:
உடல்மொழி , ஒலிப்பதில் ஏற்ற இறக்கம்)

Question 2.
பேசப்படும் சூழலைப் பொருத்துப் பேச்சுமொழியின் பொருள் ……….
Answer:
வேறுபடும்

Question 3.
பேச்சுமொழி இடத்திற்கு இடம் ……….
Answer:
மாறுபடும்


Question 4.
சூழலுக்கு ஏற்றவாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை என்பர்.
Answer:
வட்டார மொழி

Question 5.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலியவை ………. மொழிகளாகும்.
Answer:
கிளை

விடையளி :

Question 1.
இரட்டை வழக்குமொழி என்றால் என்ன?
Answer:
தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால், தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர்.

Question 2.
இரட்டை வழக்கு மொழியை தொல்காப்பியர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
Answer:
இரட்டை வழக்கு மொழியை தொல்காப்பியர் உலக வழக்கு , செய்யுள் வழக்கு என்று குறிப்பிடுகிறார்.

Question 3.
மொழியின் முதல் நிலை எவை?
Answer:
பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை ஆகும்.

Question 4.
இரண்டாம் நிலை என்று மொழியில் எதனை குறிப்பிடுகின்றோம்? Answer:
படித்தல், எழுதுதல் என்பவை மொழியின் இரண்டாம் நிலை எனக் குறிப்பிடுகின்றோம்.

Question 5.
மொழி இல்லையேல் மனித சமுதாயம் முன்னேற்றம் அடைந்திருக்காது இக்கூற்றை மெய்ப்பிக்க.
Answer:

  • மொழியின் மூலமாக மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
  • மொழி இல்லையேல் மனித சமுதாயம் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தை எட்டியிருக்க முடியாது என்பது முற்றிலும் உண்மையே.

Question 6.
மொழிகள் பல தோன்றக் காரணங்கள் யாவை?
Answer:

  • ஆரம்ப காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர்.
  • அவர்கள் தங்களுக்குள் தனித்தனியான ஒலிக்குறியீடுகளை உருவாக்கிக்
    கொண்டனர்.
  • இதன் விளைவாகவே மொழிகள் பல தோன்றின.

Question 7.
மொழியைப் பற்றி மு. வரதராசனார் கூறுவன யாவை?
Answer:

  • பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு.
  • எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் என மு. வரதராசனார் மொழியைப் பற்றி கூறுகிறார்.

Question 8.
மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமாக இருப்பது ஏன்?
Answer:

  • மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமாக இருப்பது எழுத்து மொழியே.
  • நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க எழுத்துமொழி உதவுகிறது.

Question 9.
மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது? ஏன்?
Answer:

  • மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியே.
  • பேச்சுமொழி உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும்.
  • அது கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.
  • பேசுபவரின் உடல்மொழியும் ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியவையும் பேச்சுமொழியின் சிறப்புக்கூறுகள் ஆகும்.

Question 10.
வட்டார மொழிக்குச் சான்று தருக.
Answer:

  • பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும்.
  • மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். (iii) இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

எடுத்துக்காட்டு :

‘இருக்கிறது’ என்னும் சொல் இருக்கு’, ‘இருக்குது’ ‘கீது’ என்று தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாகப் பேசப்படுகிறது.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


1.4 சொலவடைகள்


Question 1.
உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.
Answer:

  • வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்மப் பகைங்கிற மாதிரி படிக்காத பையனை போராடித்தான் படிக்க வைக்கணும்.
  • அடை மழைவிட்டாலும் செடி மழை விடாதுங்கிற மாதிரி படிக்கலனா அப்பாவிட்டாலும் அம்மா விட மாட்டாங்க.
  • கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
  •  “அப்பன் குதிருக்குள்ள இல்ல.”

Question 2.
பரடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் எவையேனும் ஐந்தனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.
Answer:

  • குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா என்பது போல் என் நண்பன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தான்.
  • தட்டிப்போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லே என்பது போல வறுமையிலே வாடுகிறவங்களுக்கு கை கொடுக்க ஆள் இல்லாமல் திண்டாடுவாங்க.
  • அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்னு சொல்லுற மாதிரி நிழலில் படுத்து தூங்கினதால ஆமையிடம் தோற்று போச்சாம் முயலு!
  • ஆயிரம்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும் உழைக்கிறவன் மத்தியிலே உதவாக்கரை ஒருத்தன் இருந்தால் அந்தக் கூட்டமே கெட்டுவிடும்.
  • புண்ணுக்கு மருந்து போட முடியும் புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா? வீண் விதண்டாவாதம் செய்கிறவனிடம் பேசி ஜெயிக்க முடியாது.


கூடுதல் வினாக்கள்

நீரப்புக :

Question 1.
உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள ……… போகும்.
Answer:
விலை

Question 2.
அடைமழை விட்டாலும் ……….. மழை விடாது.
Answer:
செடி

Question 3.
ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு ………….. பூச்சி போதும்.
Answer:
அந்துப்பூச்சி

Question 4.
பாடிப்பாடிக் குத்தினாலும் ……………. அரிசி ஆகுமா?
Answer:
பதரு

Question 5.
அதிர அடிச்சா ……… விளையும்.
Answer:
உதிர

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்

Question 1.
‘குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
Answer:
குறுமை + இயல் + உகரம் – குற்றியலுகரம். வல்லின எழுத்துக்கள் ஆறின் மீதும் ஏறி (சேர்ந்து வரும் உகரம் தனக்கு உரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். இதற்குக் குற்றியலுகரம் என்று பெயர். எடுத்துக்காட்டு: காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு.

Question 2.
குற்றியலிகரம் என்றால் என்ன?
Answer:
(i) குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்.
(ii) வரகு + யாது = வரகியாது.
(iii) குற்றியலுகரச் சொற்களின் முன் யாது என்னும் சொல் வருமொழியாக வந்து சேரும் போது, நிலைமொழியீற்று ‘உ’ கரம் இகரமாகத் திரிந்து தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். இது ‘குற்றியலிகரம் எனப்படும்.

கற்பவை கற்றபின்

Question 1.
ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப் பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள்; அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள்.
1. ஒன்று
2. இரண்டு
3. மூன்று
4. நான்கு
5. ஐந்து
6. ஆறு
7. ஏழு
8. எட்டு
9. ஒன்பது
10. பத்து
Answer:
குற்றியலுகரச் சொற்கள் :

1. ஒன்று – மென்தொடர்க் குற்றியலுகரம்
2. இரண்டு – மென்தொடர்க் குற்றியலுகரம்
3. மூன்று – மென்தொடர்க் குற்றியலுகரம்
4. நான்கு – மென்தொடர்க் குற்றியலுகரம்
5. ஐந்து – மென்தொடர்க் குற்றியலுகரம்
6. ஆறு – நெடில்தொடர்க் குற்றியலுகரம்
8. எட்டு – வன்தொடர்க் குற்றியலுகரம்
9. ஒன்ப து – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
10. பத்து – வன்தொடர்க் குற்றியலுகரம்


Question 2.
குற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
Answer:
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து

  1. நெடில் தொடர்க் குற்றியலுகரம் – ஆறு
  2. உயிர் தொடர்க் குற்றியலுகம் – ஒன்பது
  3. வன்தொடர்க் குற்றியலுகரம் – எட்டு, பத்து
  4. மென்தொடர்க் குற்றியலுகரம் – ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து

Question 1.
குறில் எழுத்துகளைக் குறிக்க …………. என்ற அசைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
அ) கரம்
ஆ) கான்
இ) கேனம்
ஈ) கோடை
Answer:
அ) கரம்

Question 2.
நெடில் எழுத்துகளைக் குறிக்க ……….. என்ற அசைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
அ) கேனம்
ஆ) கரம்
இ) கான்
ஈ) கோடை
Answer:
இ) கான்

Question 3.
குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ………….. வகையாகப் பிரிக்கப்படும்.
அ) 3
ஆ) 5
இ) 6
ஈ) 1
விடை :
இ) 6

Question 4.
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் …………..
அ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
ஆ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
இ) இடைத்தொடர் குற்றியலுகரம்
ஈ) மென்தொடர்க் குற்றியலுகரம்
Answer:
அ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

Question 5.
ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும் குற்றியலுகரம் எது?
அ) மென்தொடர்க் குற்றியலுகரம்
ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
இ) இடைத்தொடர் குற்றியலுகரம்
ஈ) உயிர்தொடர்க் குற்றியலுகரம்
Answer:
ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

Question 6.
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் …………….
அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆ) வன்தொடர்க் குற்றியலுகரம்
இ) நெடில்தொடர்க் குற்றியலுகரம்
ஈ) இடைத்தொடர் குற்றியலுகரம்
Answer:
அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

Question 7.
தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் இகரம் ………….. எனப்படும்.
அ) குற்றியலுகரம்
ஆ) குற்றியலிகரம்
இ) முற்றியலுகரம்
ஈ) ஐகாரக்குறுக்கம்
Answer:
ஆ) குற்றியலிகரம்

Question 8.
குற்றியலிகரம் …………… இடங்க ளில் மட்டும் வரும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
அ) இரண்டு

Question 9.
மியா’ என்பது ஓர் அசைச்சொல். இச்சொல்லில் வரும் மி’யில் உள்ள இகரம் …..
அ) குற்றியலிகரம்
ஆ) குற்றியலுகரம்
இ) முற்றியலுகரம்
ஈ) மகரக்குறுக்கம்
Answer:
அ) குற்றியலிகரம்

நிரப்புக :

Question 1.
சால்பு – இது ………….. ஆகும்.
Answer:
இடைத்தொடர்க் குற்றியலுகரம்

Question 2.
கயிறு – இது …………… ஆகும்.
Answer:
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

Question 3.
……… என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை .
Answer:
வ்

விடையளி :

Question 1.
‘மூதல் எழுத்து என்றால் என்ன?
Answer:
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் , மெய் எழுத்துகள் பதினெட்டும் ஆக முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் எனப்படும்.

Question 2.
சார்பெழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
சார்பெழுத்து பத்து வகைப்படும்.
அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும்.

Question 3.
முற்றியலுகரம் என்றால் என்ன?
Answer:

  • தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.
  • வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்.
  • இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.
    எடுத்துக்காட்டு: புகு , பசு , விடு, அது, வறு

Question 4.
குற்றியலுகரத்தின் வகைகளைப் பற்றி கூறுக.
Answer:
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை,

  • நெடில் தொடர்க் குற்றியலுகரம்
  • ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
  • உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
  • வன்தொடர்க் குற்றியலுகரம்
  • மென்தொடர்க் குற்றியலுகரம்
  • இடைத்தொடர்க் குற்றியலுகரம்

Question 5.
நெடில்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:

  • தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
  • இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
    எடுத்துக்காட்டு: பாகு, மாசு, பாடு, காது

Question 6.
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:
ஆய்தத் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: எஃகு, அஃது.

Question 7.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
அரசு (ர – ர் + அ), கயிறு (J – ய்+இ, ஒன்பது (ப – ப்+அ), வரலாறு (லா – ல் + ஆ)

Question 8.
வன்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:
வல்லின க், ச், ட், த், ப், ற் மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று

Question 9.
மென்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:
மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று.

Question 10.
இடைத்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.
Answer:
இடையின ய், ர், ல், வ், ழ், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: எய்து, மார்பு, சால்பு, மூழ்கு.

Question 11.
தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்குமா?
Answer:
தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.

Question 12.
ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பது எது?
Answer:
ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பது முற்றியலுகரம். எடுத்துக்காட்டு : புகு , பசு , விடு, அது, வறு.

மொழியை ஆள்வோம்

கேட்க :

Question 1.
தமிழின் சிறப்பைப் பற்றிய அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்க. உயர்திரு. ச.பாலன் அவர்களின் சொற்பொழிவு:
Answer:

  • மிக மிக உயர்ந்த மொழி தமிழ்மொழி.
  • பேரறிஞர்கள் பலர் தங்கள் நூல்கள் வாயிலாக தமிழ்மொழியின் சிறப்பை விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
  • ”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் மகாகவி பாரதியார்.
  • ‘கம்பனை போல் வள்ளுவரைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்ஙனுமே பிறந்தது இல்லை என்றார் பாரதியார்.
  • பெருமை மிக்க நூல்களும் அறிஞர்களும் சிறப்பித்து பாடிய தமிழ் உலக அளவிலே மிகச் சிறந்த ஒரு மொழியாகப் போற்றப்படுகின்றது.
  • செம்மொழி என்றால் பிறமொழிகளின் தாக்கம் இல்லாமலும் சில மொழிகளுக்கு தாயாகவும் இலக்கண இலக்கிய வளமுடையதாகவும் இருக்க வேண்டும்.
  • கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகியவற்றிற்கு தாய்மொழியாக இருக்கிறது நம் தமிழ்மொழி.
  • தமிழின் பெருமையை விளக்கும் வண்ணம் அறிஞர்கள் பலர் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

கவிக்கோ அப்துல்ரகுமானின் உரை :

  • தமிழ்மொழி பேசுவதற்கு அதிகம் மூச்சு விடவேண்டியது இல்லை
  • தமிழ் உலகத்திலேயே உயர்ந்தமொழி.
  • ஆதி மொழி தொன்மை மொழி தமிழ் மொழியாகும்.
  • இரண்டு நாடுகளின் அரசாங்கமொழி ஸ்ரீலங்கா, சிங்கப்பூர்.
  • மலேசியாவில் ஒரே கல்விமொழி.
  • செம்மொழிகளில் முழுமையான இலக்கண வடிவம் கொண்டது தமிழ்மொழி தொல்காப்பியம்.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

Question 1.
நான் அறிந்த பழமொழிகள் வணக்கம் :

அன்னைத் தமிழில் வணங்குகிறேன்! நான் அறிந்த பழமொழிகளைப் பற்றி இங்கு பேச வந்துள்ளேன்.

1. முயற்சி திருவினையாக்கும் :
பழமொழி விளக்கம் : முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து எந்தவொரு செயலையும் செய்து வந்தால் வாழ்வில் உயர்வு அடையலாம் என்பதே இப்பழமொழியின் விளக்கம். ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதை உணர்ந்து தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதே இப்பழமொழி உணர்த்தும் நீதி.

2. இளமையில் கல் :
பழமொழி விளக்கம் :
மனித வாழ்வில் கல்வி இன்றியமையாதது. ஆனால் கற்க வேண்டிய இளம் வயதில் கல்வி கற்க வேண்டும். இளமையில் மட்டுமே கல்வியை கற்க முடியும், கற்க வேண்டும் என்பது இப்பழமொழியின் நீதியாகும்.

3. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் :
பழமொழி விளக்கம் :
வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அந்த சந்தர்ப்பதை தவறவிடாமல் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்.

4. உப்பிட்டவரை உள்ளளவும் நினை :
பழமொழி விளக்கம் : நாம் பசியால் வாடிய பொழுது நமக்கு உணவளித்தவரை என்றுமே மறக்கக்கூடாது. நம்முடைய உள்ளத்தில் என்றுமே அவர்களை நினைக்க வேண்டும்.

5. கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு :
பழமொழி விளக்கம் :
எனக்கு எல்லாம் தெரியும் என்று செருக்கு கொள்ளக்கூடாது. ஏனெனில் நாம் கற்றுக் கொண்டது நமது கையினைப் போன்ற சிறிய அளவே. கல்லாதது உலகளவு உள்ளது என்பதே இப்பழமொழியின் விளக்கம். எல்லாம் தெரியும் என்ற செருக்கு ஒருவனுக்கு இருக்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இப்பழமொழியின் நீதியாகும்.

திணை இரண்டு வகைப்படும். அவை, 1. உயர்திணை, 2. அஃறிணை ஆறு அறிவுடைய மனிதர்களை உயர்திணை என்பர். பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருள்களை அஃறிணை என்பர்.




















































Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY