Ads Right Header

முகலாயர்கள் ( part 1 )முக்கிய வினாவிடை!

 


1. முகலாயப் பேரரசை நிறுவியவர் யார் ? பாபர் 

2. எந்த ஆண்டு முகலாய பேரரசு நிறுவப்பட்டது ? 1526 

3. முகலாயப் பேரரசு நிறுவப்பட காரணமாக இருந்தபோர் எது ? பானிபட் போர் 

4. முகலாயப் பேரரசின் காலகட்டம் என்ன ? 1526 முதல் 1857 வரை 

5. முகலாயப் பேரரசு அதனுடைய அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த பொழுது எங்கு வரை பரவியிருந்தது ? ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளம் வரை , காஷ்மீர் முதல் தெற்கே தமிழகம் வரை 

6. பாபரின் இயற்பெயர் என்ன ? ஜாகிருதீன் முகமது பாபர் 

7. மத்திய ஆசியாவில் இருந்த துருக்கிய இனக்குழுவின் பெயர் என்ன ? உஸ்பெக்குகள் 

8. ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார் ? சபாவி

9. பாபர் எத்தனை வயது சிறுவனாக இருந்தபோது தனது தந்தையிடமிருந்து சாமர்கண்ட்டை பெற்றார் ?            பதினோரு வயது 

10. பாபர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர் ? தைமூர் 

11. பாபர் எந்த காலகட்டத்தில் பேரா மற்றும் சியால்கோட் லாகூர் ஆகியவற்றின் மீது படையெடுத்தார் ? 1519 க்கும் 1524 க்கும் இடையே 

12. பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வர வேண்டும் என்ற வேண்டுதலோடு பாபருக்கு தூதுக் குழுக்களை அனுப்பியவர் யார் ? தௌலத்கான் லோடி மற்றும் ராணா சங்கா 

13. பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது முதலில் யாருடன் போர் புரிந்தார் ? தௌலத்கான் லோடி 

14. பாபர் தௌலத்கான் லோடியை எந்த இடத்தில் வென்றார் ? லாகூர் 

15. முதலாம் பானிபட் போர் நடைபெற்ற நாள் எது ? ஏப்ரல் 21 , 1526

16. வெடிமருந்து முதன் முதலில் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? சீனர்களால் 

17. வெடிமருந்து எப்போது ஐரோப்பாவை அடைந்தது கிபி 13 ம் நூற்றாண்டு 

18. கான்வாபோர் நடைபெற்றது    எப்போது ? 1527 

19. கான்வா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது ? சித்தூரின் ராணா சங்கா மற்றும் பாபர் 

20. ராணா சங்கா எந்த இடத்தினுடைய அரசன் ? மேவார் 

21. ராணுவ சங்காவின் படைகள் பாபரை எதிர்த்து யாருடன் கூட்டணி அமைத்தன ? ஆப்கான் முஸ்லிம்கள் , இப்ராஹிம் லோடியின் சகோதரர் முகமது லோடி , மேவாட்டின் அரசனான ஹசன்கான் மேவாட்டி 

22. சந்தேரி போர் நடைபெற்ற ஆண்டு ? 1528 

23. சந்தேரி போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது ? மேதினி ராய் மற்றும் பாபர்

24.ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் எது ? காக்ராப் போர் 

25. காக்ரா போர் நடைபெற்ற ஆண்டு ?  1529 

26. காக்ரா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது ? பாபர் மற்றும் இப்ராஹிம் லோடியின் சகோதரனான முகமது மோடி மற்றும் அவரது மருமகனான சுல்தான் நஸ்ரத் ஷா 

27. காக்ரா ஆறு எந்த நதியின் துணை நதி ? கங்கை 

28. பாபர் எப்போது காலமானார் ? 1530 

29. பாபர் எந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார் ? பாரசீகம் மற்றும் அரேபிய மொழிகள் 

30. பாபரின் நினைவு குறிப்புகள் பற்றிய நூலின் பெயர் என்ன ?                             துசுக் - இ- பாபுரி ( பாபர் நாமா ) 

31. எப்போது சுனார் கோட்டையை ஹுமாயுன் முற்றுகையிட்டார் ? 1532

32. சுனார் கோட்டை எந்த இடத்தில் அமைந்திருந்தது ? தௌரா 

33. ஹுமாயூன் டெல்லியில் எந்த புதிய நகரை உருவாக்கினார் ? தீன்பனா 

34. ஹுமாயுன் குஜராத்தையும் மாளவத்தையும் கைப்பற்றி அவற்றை தனது சகோதரரான யாரிடம் பொறுப்பில் விட்டார் ? அஸ்காரி 

35. சௌசா போர் நடைபெற்ற    ஆண்டு எது ?  1539 

36. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது ? ஷேர்ஷா மற்றும் ஹுமாயூன் 

37. கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு ? 1540 

38. கன்னோசி போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது ? ஷேர்ஷா மற்றும் ஹுமாயூன் 

39. ஷெர்ஷாவின் இயற்பெயர் என்ன ? ஃபரீத்

40. எந்தக் கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்ற  முயற்சியில் ஷெர்ஷா இறந்தார் ? கலிஞ்சார் கோட்டை 

41. ஷெர்ஷா எந்த ஆண்டு இறந்தார் ? 1545 வெடிகுண்டு விபத்தின் காரணமாக 

42. ஷேர்சாவிற்கு பின் பதவி    ஏற்றவர் யார் ? ஷெர்ஷாவின் இரண்டாவது மகன் இஸ்லாம் ஷா 

43.தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் களவுபோகும் பொருட்களுக்கு கிராம தலைவரே பொறுப்பு என சட்டம் கொண்டு வந்தவர் யார் ? ஷெர்ஷா 

44. " விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான் " என நம்பியவர் யார் ஷேர்சா 

45. யாருடைய காலத்தில் தங்க வெள்ளி செப்புக்காசுகளில் இடம்பெறும் உலோகங்களின் தரஅளவு வரையறை செய்யப்பட்டது ? ஷெர்ஷா 

46. ஜாகிர்தாரி முறை எந்த வம்ச காலத்தில் வளர்ச்சி பெற்றது ? தில்லி சுல்தானியர் காலம்

 47. குறிப்பிட்ட பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும் அப்பகுதியை நிர்வகிக்கும் அதிகாரமும் அரசாங்கத்தை சார்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் இந்த முறைக்கு பெயர் என்ன ? ஜாகிர்தாரி முறை 

48. பாரசீக மொழியில் ஜமீன்தார் என்ற வார்த்தையின் பொருள் என்ன ? நிலத்தின் உரிமையாளர்  

49.சிந்து பகுதியில் இருந்து வங்காளத்தில் சோனார்கான் வரையிலான முக்கிய பெருவெழியை செப்பனிட்டவர் யார் ? ஷேர்ஷா சூரி 

50. ஷெர்ஷா குஜராத் கடற்கரை துறைமுகங்களை எந்த நகரோடு இணைக்கும் புதிய சாலைகளை அமைத்தார் ? ஆக்ரா மற்றும் ஜோத்பூர் 

51. அனைத்து சாலைகளிலும் அமைக்கப்பட்ட சத்திரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன ? சராய் 

52.ஷெர்ஷா எந்த முஸ்லிம் பிரிவைச் சார்ந்தவர் ஆவார் ? வைதீக சன்னி முஸ்லிம் 

53. ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையை அடித்தளமாக கொண்டவர்கள் யார் ? அக்பர் மற்றும் தோடர்மால் 

54. ஷெர்ஷா எங்கு புதிய நகரத்தை நிர்மாணிக்க தொடங்கினார் ? தில்லி 

55. ஷெர்ஷா நிர்மாணிக்க தொடங்கிய புதிய நகரம் எவ்வாறு அழைக்கப்பட்டது ? புராணகிலா 

56.ஷெர்ஷாவின் கல்லறை மாடத்தை எங்கு கட்டினார் ? சசாரம் 

57. ஹூமாயூன் எந்தப் படை உதவியுடன் மீண்டும் காந்தகாரையும் காபூலையும் கைப்பற்றினார் ? பாரசீகப் படைகள் 

58. " வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹுமாயுன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார் " என கூறியவர் யார் ? லேன்பூல் 

59. அக்பர் எப்போது பிறந்தார் ?       நவம்பர் 23,1542 

60. அக்பரின் எத்தனையாவது வயதில் அவருக்கு முடிசூட்டப்பட்டது ? 14 

61. அக்பர் யாருடைய பாதுகாப்பில் ஆட்சி செய்தார் ? பைரம்கான் 

62. இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது ? 1556 

63. இரண்டாம் பானிபட் போர் அக்பர் மற்றும் யாருடன் நடைபெற்றது ? அடில்ஷாவின் இந்து படைத்தளபதியான ஹெமு 

64. அக்பரின் முதல் நான்காண்டு ஆட்சி காலத்தில் பகர ஆளுநராக இருந்தவர் யார் ? பைரம்கான் 

65. பைராம் கானின் மகன் அப்துர் ரஹீம் என்ன பட்டத்துடன் அக்பரின் அவையில் இருந்தார் ? கான் இ கானான் 

66. எப்போது மாளவம் பாஜ்பகதூரிடமிருந்து கைப்பற்றப்பட்டு அவர் அக்பரின் அரசவையில் ஒரு மான்சப்தாராக ஆக்கப்பட்டார் ? 1562 

67. அக்பர் ஆக்ரா கோட்டையின் பிரதான வாசலில் யாருடைய சிலைகளை நிறுவினார் ? ஜெய்மால் மற்றும் பட்டா 

68. அக்பர் முசாபர்ஷாவிடமிருந்து எப்போது குஜராத்தை கைப்பற்றினார் ? 1573 

69. பீகார் வங்காளம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த தாவுத் கான் அக்பரால் எப்போது தோற்கடிக்கப்பட்டார் ? 1576 

70. காஷ்மீர் மற்றும் சிந்து அக்பரால் எப்போது கைப்பற்றப்பட்டது 1586,1591 

71. எப்போது அக்பரால் சாந்த்பீபியிடமிருந்து பெரார் கைப்பற்றப்பட்டது ? 1596 

72. எப்போது அக்பர் நோய்வாய்ப்பட்டு இறந்தார் ? அக்டோபர் 27,1605 

73. இந்து புனித யாத்திரைகளின் மீது விதிக்கப்பட்டிருந்த எந்த வரியை அக்பர் நீக்கினார் ? ஜிசியா வரி 

74. ஆம்பர் நாட்டு அரசர் ராஜா பார்மால் எவ்வாறு அழைக்கப்பட்டார் ? பீகாரிமால் 

75. ஹர்க்காபாய் பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டார் ? ஜோதா அக்பர் 

76. ஹால்டிக்காட் போர் எப்போது நடைபெற்றது ? 1576 

77. ஹால்டிக்காட் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது ? ராணா பிரதாப் சிங் மற்றும் முகலாயர்கள் 

78. தொடக்கத்தில் அக்பரின் தலைநகரமாக இருந்த நகரம் எது ? ஆக்ரா  

79.அக்பர் உருவாக்கிய புதிய தலை நகரம் எது ? பதேபூர் சிக்ரி 

80. அக்பர் அறிமுகம் செய்த நிர்வாக முறையின் பெயர் என்ன ? மன்சப்தாரி முறை 

81. மன்சப்தாரி - இரு வகைப்பட்ட தகுதிகள் என்னென்ன ? ஜாட் மற்றும் சவார்

82. ஒவ்வொரு மன்சப்தாரி பெறும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறிக்கும் சொல் ? ஜாட் 

83. ஒவ்வொரு மன்சப்தாரின் கீழ் இருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையை குறிக்கும் சொல் ? சவார் 

84. அக்பர் இஸ்லாமை புறக்கணித்தார் என குற்றம் சாட்டிய வரலாற்று அறிஞர் யார் ? பதானி 

85.இபாதத் கானா விவாதங்களை அக்பர் எப்போது நிறுத்தினார் ? 1582 

86. கீழ்க்கண்ட ஞானிகளின் மதங்களை குறிப்பிடுக : 1. தேவி , புருஷோத்தம் -இந்துமதம் 2.மெகர்ஜிராண ஜொராஸ்திரிய மதம் 3.அக்வாவிவா , மான்சரட் எனும் போர்த்துகீசியர் - கிறிஸ்துவ மதம் 4.ஹிர விஜய சூரி- சமண மதம்

87. அக்பருடைய ஒரே ஒரு கடவுள் கொள்கை மதத்தின் பெயர் என்ன ? தௌகித் - இ.இலாகி / தீன் இலாகி 

88. தௌகித் - இ - இலாகிஎன்ற சொல்லின் நேரடிப் பொருள் என்ன ? தெய்வீக ஒளி கடவுள் கோட்பாடு 

89. எந்த அரசருடைய காலத்தில் இந்திய மொழி நூல்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக ஒரு பெரிய மொழியாக்க துறை உருவாக்கப்பட்டது ? அக்பர் 

90 . ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன ?  சலீம்

91. ஜஹாங்கீர் என்ன பட்டப் பெயருடன் அரியனை ஏறினார் ? நூருதீன் ஜஹாங்கீர் 

92. ஜஹாங்கீரின் மூத்தமகன் குஸ்ரு எந்த சீக்கிய குருவின் ஆதரவோடு கலகத்தில் இறங்கினார் ? குரு அர்ஜுன் தேவ் 

93. ஜஹாங்கீர் , ராணா அமர் சிங்கிற்கு எதிராக யார் தலைமையில் படையெடுப்பு நடத்தி அவரை வென்றார் ? இளவரசர் குர்ரம்

94. ஜஹாங்கீரின் காலத்தில் , எப்போது யாருடைய தலைமையின் கீழ் அகமதுநகர் தன்னை சுதந்திர அரசாக அறிவித்து ? 1608 மாலிக் ஆம்பரின் தலைமையில் 

95. அகமது நகரின் காங்கிரா கோட்டையை கைப்பற்றியவர் யார் ? இளவரசர் குர்ரம் 

96. ஜஹாங்கீரின் ஆட்சியின்போது வருகைதந்த ஆங்கிலேயர்கள் யார் ? வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ 

97. மாலிக் ஆம்பர் எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு ஒரு அடிமையாக கொண்டுவரப்பட்டார் ? எத்தியோப்பியா 

98.மாலிக் ஆம்பர் அரசியல் விவேகம் ராணுவம் மற்றும் நிர்வாக விஷயங்களை யாரிடம் இருந்து கற்றுக் கொண்டார் ? செங்கிஸ்கான் 

99.மாலிக்ஆம்பர் எப்போது இறந்தார் ?  மே 14 1626

100. எந்த ஆங்கிலேயர் ஜஹாங்கீரிடமிருந்து சூரத் நகரில் ஒரு வணிக குடியேற்றத்தை அமைத்துக் கொள்வதற்கான அனுமதி பெற்றார் ? தாமஸ் ரோ.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Join our Whatsapp Group

Touch Here

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥



























Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY