தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
திண்டுக்கல்லில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை திண்டுக்கல் MVM மகளிர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு மேளாவில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை சார்ந்த சேவை மற்றும் தொழில் நிறுவனங்கள் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களிலிருந்து டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி மற்றும் கட்டுமானத்துறை சார்ந்த நிறுவனம் போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுடைய இளைஞர்களை (ஆண் / பெண்) தேர்வு செய்து வேலை வாய்ப்புகள் வழங்கவுள்ளனர்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம மற்றும் நகராட்சி / பேரூராட்சிப் பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள் (ஆண் / பெண் ) கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் பட்டயப்படிப்பு (Diploma), பட்டப்படிப்பு (Degree), ஐ.டி.ஐ (ITI), பொறியியல் படிப்பு (Engg) படித்தவர்களும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமின் மூலம் தகுதியான இயைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவரவர் தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களுடைய
கல்விச் சான்றிதழ்கள்
குடும்ப அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்கள்)
சுயவிபரக்குறிப்பு (BIO -DATA) மற்றும்
2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் இம்முகாகமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Leave Comments
Post a Comment