TNPSC MATERIAL
உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்!!
- தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் எனும் புதிய பொருளாதாரக் கொள்கை (LPG) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1991
- உலகமயமாக்கல் என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் யார்? பேராசிரியர் தியோடர் டெவிட்.
- சுமர் மற்றும் சிந்து சமவெளி நாகரீகத்தின் இடையேயான வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல் என்ற வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளில் உருவாக்கியது என்று கூறியவர் யார்? ஆன்ட்ரோ குந்தர் பிராங்க்.
- பட்டு சாலையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்திய பேரரசுகள் யாவை? ரோம் பார்த்தியா மற்றும் ஹன் பேரரசு
- பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு எது? 1600
- டச்சு கிழக்கிந்திய நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு எது? 1602
- பதினாறாம் நூற்றாண்டில் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா மற்றும் பிரேசில் வரை வர்த்தக நிறுவனங்களை நிறுவியவர்கள் யார்? போர்ச்சுகீசியர்கள்
- சிவப்பு வண்ண கல் அலங்கார பொருட்களை வர்த்தகத்திற்கு கொண்டுவந்தவர்? கலிங்க வர்த்தகர்கள் AD 1053
- ஆலய வளாகத்தில் மட்டும் சந்தித்து வர்த்தகத்தை மேற்கொண்டு வர்த்தகக் குழுவினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? தொகராஸ் மற்றும் கோவாரஸ்
- ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் பாதையை கண்டுபிடித்தவர் யார்? வாஸ்கோடகாமா
- வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் வந்து இறங்கிய ஆண்டு எது? கிபி 1498 மே 17
- கிபி 1500 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்? பெட்ரோ ஆல்வாரோஸ்
- வாஸ்கோடகாமா இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்த ஆண்டு எது? கிபி.1502
- இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் தலைநகரம் எது? கொச்சின்
- மசூலிப்பட்டினம் நிஜாம் பட்டினம் தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தை நிறுவியவர் யார்? அட்மிரல் வான் டெர் ஹகேன்
- கிபி 1610 ஆம் ஆண்டு சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி புலி காட்டில் தொழிற்சாலையை நிறுவியவர் யார்? அட்மிரல் வான் டெர் ஹகேன்
- இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைமையிடம் எது? புலிகாட்
- டச்சுக்காரர்கள் போர்ச்சுகீசியர்களிடமிருந்து நாகப்பட்டினத்தை கைப்பற்றிய ஆண்டு எது? கி.பி1659
- ஆங்கிலேயர்களுக்கு கோல்டன் ஃபயர் மேன் என்ற பட்டத்தை வழங்கிய இந்திய மன்னர் யார்? கோல்கொண்டா சுல்தான்
- சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு எது? கிபி 1639
- இந்தியாவில் ஆங்கிலேயர்களின் தலைமையகமாக இருந்தது எது? மசூலிப்பட்டினம்
- டேனிஷ்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு எது? கிபி 1616
- டேனிஷ்காரர்களின் தலைமையிடமாக அமைந்த இடம் எது? டிராங்குபார்
- டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை கைப்பற்றிய ஆண்டு எது? கிபி.1693
- எந்த ஆண்டு பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் தலைமை இடமாக மாற்றப்பட்டது? கிபி 1701
- தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன? நாங்குநேரி எண்ணூர் கோயம்புத்தூர்
- டங்கல் வரைவு கையெழுத்திடப்பட்ட ஆண்டு எது? 1994 ஏப்ரல் 15
- இந்தியா தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய ஆண்டு எது? 1991 ஜூலை
- அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் எது? 1974 ஜனவரி 1
- அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது? 1999
- சுங்கவரி வாணிபம் குறித்த பொது உடன்பாடு (காட் ஒப்பந்தம்) கையெழுத்திடப்பட்ட ஆண்டு எது? 1947
- காட்டின் GATT முதலாவது சுற்று எங்கு நடைபெற்றது? ஜெனீவா ஸ்விட்சர்லாந்து 1947
- காட் இரண்டாவது சுற்று எங்கு நடைபெற்றது? அன்னிசி பிரான்ஸ்
- காட் ஒப்பந்தத்தின் மூன்றாவது சுற்று எங்கு நடைபெற்றது? டார்க்குவே இங்கிலாந்து
- காட் ஒப்பந்தத்தின் ஏழாவது சுற்று எங்கு நடைபெற்றது? டோக்கியோ ஜப்பான்
- காட் ஒப்பந்தத்தின் எட்டாவது மற்றும் இறுதிச்சுற்று எங்கு நடைபெற்றது? பண்டாடெல் எஸ் டீ , உருகுவே. இது உருகுவே சுற்று என்றும் அழைக்கப்படுகிறது.
- உலக வர்த்தக அமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது? 1995 ஜனவரி 1
- உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? ஜெனீவா சுவிட்சர்லாந்து
- ஜி7 நாடுகள் என்று அழைக்கப்படுபவை எவை? கனடா பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஜப்பான் இங்கிலாந்து அமெரிக்கா
- உலக வர்த்தக அமைப்பில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? 5 பேர்(4+1)
Previous article
Next article
Leave Comments
Post a Comment