நடப்பு நிகழ்வுகள் (அக்டோபர் 2021)
மக்கள் பள்ளித் திட்டம்
1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்குப் பொது முடக்கத்தின் போது கற்றலில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் இழப்பு ஆகியவற்றைக் குறைக்கும் ஒரு முயற்சியாக தமிழக அரசானது ஒரு புதிய கற்பித்தல் திட்டத்தைச் செயல்படுத்துகிறது .
தற்போது ஆசிரியர்கள் மாணவர்களை அணுகி அவர்களுக்குப் பாடம் கற்பிப்பர் .
மக்கள் பள்ளித் திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கமானது மாணாக்கர்களின் வீட்டின் அருகில் உள்ள பள்ளியல்லாத சிறிய கூடார அமைப்பில் கல்வியை வழங்குவதாகும் .
உள்கட்டமைப்புத் திட்டங்களை கண்காணிப்பதற்கான தமிழக அரசின் இணைய தளம்.
தமிழகத்தின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தினை ஆய்வு செய்வதற்காக தகவல் தொழில்நுட்பத் துறையினால் உருவாக்கப்பட்ட இணைய தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் .
இந்த வலைதளமானது ஒரு குறிப்பிட்ட கால அடிப்படையில் ஒப்பந்த தேதி தொடக்க தேதி , செலவு மதிப்பீடு , மாதாந்திர அடிப்படையில் நிதி மற்றும் கட்டமைப்புப் பரிமாணங்களில் திட்டப் பணிகளின் முன்னேற்றம் , இடத்தினைக் குறித்த தகவல் மற்றும் அந்த இடத்தின் புவிசார் தகவல் அமைப்பு நிலைகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியனவற்றைக் கொண்டிருக்கும் .
மேலும் இவை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் நிறுவனங்களும் மாநில அரசுடன் தொடர்பு கொள்ளவும் அதன் கொள்கை உருவாக்கத்தில் பங்களிக்கவும் உதவுகிறது .
தமிழ்நாடு மின்னாளுமை நிறுவனமானது ' இ - முன்னேற்றம் ' என்ற ஒரு தளத்தினை உருவாக்கியுள்ளது .
தமிழ்நாடு மின்னாளுகை நிறுவனமானது 1 தளத்தினையும் உருவாக்கியுள்ளது .இது தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து செயல்படுவதோடு தமிழகத்தின் அனைத்துத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மாநில அரசின் கொள்கை உருவாக்கத்தில் மாநில அரசுடன் தொடர்பு கொண்டு பங்காற்ற வழிவகை செய்கிறது . தமிழ்நாடு மெய்நிகர் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய இரண்டு தமிழ் கணினி மென்பொருட்களையும் திரு ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார் .
கீழடி - தமிழிணைய விசைப்பலகை ஆனது தமிழ் 99 விசைப்பலகை , ஒலியியல் விசைப் பலகை மற்றும் பழைய தட்டச்சு சார்ந்த விசைப்பலகை ஆகிய 3 வகை விசைப் பலகையுடன் செயல்படும் . தமிழி - தமிழிணைய ஒருங்குறி மாற்றி எனும் மென்பொருளானது உரை , கோப்பு மற்றும் கோப்புறை ஆகியவற்றை மாற்றி வழங்கும் .
Leave Comments
Post a Comment