யூபிஎஸ்சி தேர்வும் சரி TNPSC தேர்வும் சரி இரண்டும் ஒன்றுதான் - ஆட்சியர் கல்வி.
அனைவருக்கும் வணக்கம்,
2021 யூபிஎஸ்சி தேர்வில் கிட்டத்தட்ட 70 ற்கும் மேற்பட்ட கேள்விகள் பழைய வினாத்தாளில் இருந்து வந்துள்ளது என்பதை தெரிவித்தோம்..
மேலும் 50க்கு மேற்பட்ட கேள்விகள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் வந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாக தெரிவித்தோம்..
அப்படி இருந்தும் சிலருக்கு சந்தேகம். அதற்கான தெளிவான விளக்கத்தை மேலும் தெரிவிக்கிறோம்..
யூபிஎஸ்சி தேர்வும் சரி TNPSC தேர்வும் சரி இரண்டும் ஒன்றுதான் . ஒரே தலைப்பில் இருந்த மட்டுமே திரும்பத்திரும்ப கேள்விகள் இடம்பெறும்.. நாம் படிக்க வேண்டியது மிக மிக மிக குறைவானது. அதை நாம் படிக்காமல் தேவையில்லாத தேடிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறோம்..
யூபிஎஸ்சி , TNPSC தேர்வுக்கு எதைப் படிக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் :-
காணொளியை தவறாமல் பாருங்கள்
UPSC
உங்களுக்கான சரியான வழிகாட்டலை பழைய வினாத்தாள் கொடுக்கும். எதை படிக்க வேண்டும் எதை படிக்கக்கூடாது என்பதை தெளிவாக வழிகாட்டுவது பழைய வினாத்தாள் மட்டுமே..
ஆகவே கல்வி வணிக நிறுவனங்கள் நடத்தும் கேள்வித்தாள்களைத் தேடித் தேடி உங்களது வருடங்களை இழந்து விடாதீர்கள்..
இங்கே யுபிஎஸ்சி 2021 கேள்விகளும் ,UPSC பழைய வினாத்தாள் மற்றும் டிஎன்பிஎஸ்சி பழைய வினாத்தாளை ஒப்பிட்டு பகிர்கிறோம்..
இதற்கு அடிப்படைக் காரணம் டிஎன்பிஎஸ்சி எழுதுபவர்களும் யுபிஎஸ்சி தேர்வு எழுத முடியும் என்பதற்காகவும். கல்வி வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகாமல் உங்களை மட்டும் நம்பி தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதற்காக..
மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்..
கல்வி என்பது எப்பொழுதும் எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும்..
அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியைக் கொண்டு செல்வோம்..
என்றும் உங்களுடன் ஆட்சியர் கல்வி
Leave Comments
Post a Comment