Ads Right Header

Tnpsc Important Notes...


புதைபடிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவுக்குப் பெயரென்ன?

விடை: தொல்லுயிரியல்.

தொல்லுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: லியோனார்டோ டாவின்சி.

தொல் தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: கேஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க் (Kaspar Maria Von Sternberg).

சிற்றினங்களின் தோற்றம் (Origin of Species) என்ற புத்தகத்தை  வெளியிட்டவர் யார்?

விடை: சார்லஸ் டார்வின் (Charles Darwin).

இந்திய தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

விடை: பீர்பால் சஹானி (Birbal Sahani).

பாறைகளில் புதை உயிர்ப் படிவங்கள் உருவாவவதற்கு என்ன பெயர்

விடை: படிவமாதல்.

இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

விடை: டாக்டர் மா.சா. சுவாமிநாதன் (Dr. M.S. Swaminathan).

மரபொத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் முறைக்குப் பெயரென்ன?

விடை:   குளோனிங்.

ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் (Restriction Enzymes), டி.என்.ஏ (DNA) இழையின் குறிப்பிட்ட இடங்களில் துண்டிக்கின்றன. இதனால் இவை வேறு விதமாகவும் அழைக்கைப்படுகின்றன. இவற்றின் மற்றொரு பெயர் என்ன?

விடை: மூலக்கூறு கத்திரிக்கோல்.

துண்டிக்கப்பட்ட டி.என்.ஏ துண்டுகளை இ்ணக்கப்பயன்படும் நொதியின் பெயர் என்ன?

விடை: லைகோஸ் நொதி.

சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அமைந்துள்ள சுரப்பியின் பெயர் என்ன

விடை: அட்ரினல் சுரப்பி.

நாளமில்லாச்சுரப்பி மண்டலத்தின் தந்தை யார்?

விடை: தாமஸ் அடிசன்

தலைமை சுரப்பி என்று அழைக்கப்படும் சுரப்பி ஏது?

விடை: பிட்யூட்டரி

இரவு நேரத்தினை உணர்த்தும் பணியை செய்யும் ஹார்மோன் எது?

விடை: மெலட்டோனின்

காலத் தூதுவர்கள் என்று அழைக்கப்படும் ஹார்மோன் எவை?

விடை: மெலட்டோனின்.

உடல் வெப்ப நிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?

விடை: தைராய்டு ஹார்மோன். 

எந்த திரவத்தில் மூலை மிதந்த நிலையில் உள்ளது?

விடை: மூளைத் தண்டுவடத் திரவம்.

மூளையில் உருவாகும் கழிவுகளை சேகரித்துவெளியேற்றும் பணியினை மேற்கொள்வது எது?

விடை: மூளைத் தண்டுவடத் திரவம். 

நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் ரீதியிலான அடிப்படை அலகு எது?

விடை: நியூரான்கள்.

மனித மூளையின் 60% பகுதி எவற்றாலானது?

விடை: கொழுப்பாலானது.

வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம் எது?

விடை: முகுளம்

இரத்தம் எடுத்துச் செல்ல இயலாத பகுதிகளுக்கு ஊட்டப்பொருட்களையும் மற்றும் ஆக்சிஜனையும் வழங்குவது எது?

விடை: நிணநீர்

இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் மருத்துவ கருவி எது?

விடை: ஸ்பிக்மோமானோ மீட்டர்

ஆரோக்கியமான மனிதன் ஓய்வாக உள்ள நிலையில் சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தம் என்ன?

விடை: 120 mmHg / 80 mmHg

இதய சுழற்சி எத்தனை வினாடிகளில் முடிவடையும்?

விடை: 0.8 வினாடி

இரத்த தட்டுகள் அல்லது திராம்போசைட்டுகளின்  வாழ்நாள் எவ்வளவு காலம்?

விடை:  8-10 நாட்கள்.

இரத்தச் சிவப்பணுக்கள்  அல்லது எரித்ரோசைட்டுகளின்  வாழ்நாள் என்ன?

விடை: 120 நாட்கள்

கதிரியக்கத்தின் பன்னாட்டு (SI) அலகு என்ன?

விடை: பெக்கொரல் 

யுரேனியத்தை கண்டறிந்தவர் யார்?

விடை: மார்ட்டின் கிலாபிராத்

புவியின் நிறை, ஆரம், புவிஈர்ப்பு முடுக்கம் முதலியனவற்றை துல்லியமாக கணக்கிட உதவும்  விதி எது?

விடை: நியூட்டனின் ஈர்ப்பியல் விதி.

ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதிகள் யாவை?

 விடை: நியூட்டனின் மூன்றாம் விதிமற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி

மிகக் குறைந்த காலஅளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை எது?

விடை: கணத்தாக்கு(Impulse) விசை.

பறவைகள் பறக்க பயன்படும் விதி எது?

விடை: நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி

காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் என்ன?

விடை: 3 × 108 மீ/வி

கண்ணுறு ஒளியில் அதிக அலை  நீளம் கொண்ட நிறம் எது?

விடை: சிவப்பு.

மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சியளிக்க காரணம் எது?

விடை: மீ-சிதறல் 

ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத் துகள்களால், ஒளிக்கதிர்கள் சிதறலடிக்கப்படுகின்ற நிகழ்வு எது?

விடை: டிண்டால் ஒளிச்சிதறல் அல்லது டிண்டால் விளைவு

குவிலென்சு என்பது யாது?

விடை: குவிக்கும் லென்சு

நுண்ணோக்கிகள் பயன்படும் லென்சு எது?

விடை: குவி்லென்சு.

தூரப்பார்வை பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யப்பயன்படும் லென்சு எது?

விடை: குவி்லென்சு. 

குழிலென்சு என்பது யாது?

விடை: விரிக்கும் லென்சு

வெளியாட்களைத் தெரிந்துகொள்ள வீட்டின் கதவுகளில் ஏற்படுத்தப்படும் உளவுத்துளைகளில் பொருத்தப்படும் லென்சு எது?

விடை: குழிலென்சு.

லென்சின் திறனின் SI அலகு எது?

விடை: டையாப்டர்.

மையோபியாவின் மற்றொரு பெயர் என்ன?

விடை: கிட்டப்பார்வை

தூரப்பார்வை என்று அழைக்கப்படும் (ஹைப்பர் மெட்ரோபியா) குறைபாடு எதனால் ஏற்படுகிறது?

விடை: விழிக்கோளம் சுருங்குவதால்.

எந்த வகையான மின் இணைப்பில் ஒரு மூடிய சுற்று திறந்திருந்தாலும் மற்ற மூடிய சுற்றுக்களின் வழியாக மின்னோட்டம் பாயும்?

விடை: பக்க இணைப்பு.

ஒரு குதிரைத் திறனின் அளவு என்ன?

விடை: 746 வாட்.

காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் என்ன?

விடை: அதிகரிக்கிறது.

எதிரொலிக் கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு என்ன?

விடை: 17.2 மீ 

ஒலியின் திசைவேகம் காற்றில் என்ன?

விடை: 344 மீ/வி

முன் கழுத்துக் கழலையைக் குணப்படுத்த உதவும் கதிரியக்க ஐசோடோப்பு எது?

விடை: கதிரியக்க அயோடின்-131 (I131)

தோல் புற்று நோயைக் குணப்படுத்தப்பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?

விடை: கதிரியக்கக் கோபால்ட்-60 (Co60) மற்றும் தங்கம்-198 (Au198)

பாதுகாப்பானகதிர்வீச்சின் அளவு ஒரு வாரத்திற்கு என்ன?

விடை: 100 மில்லி ராண்ட்ஜன்

தொடர்வினையை நிலை நிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையைத் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் கழி எது?

விடை: போரான் மற்றும் காட்மியம்

ஹைட்ரஜன் குண்டு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?

விடை: அணுக்கரு இணைவு

காப்பரின் முக்கிய தாது எது?

விடை: காப்பர் பைரைட்.

இரும்பின் முக்கிய தாது எது?

ஹேமடைட் (Fe2O3)

இரும்பின் முக்கிய தாது எது?

விடை: ஹேமடைட் (Fe2O3)

ஜிங்க் மற்றும் காப்பரை உருக்கிச் சேர்த்தல் மூலம் உலோகம் கிடைக்கும் எது?

விடை: பித்தளை

துருவின் வேதிப்பொருள் எது?

விடை: நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு ( Fe2O3 H2O)

மனித ரத்தத்தின் pH மதிப்பு என்ன?

விடை: 7.35 லிருந்து 7.45

செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுவது எது?

விடை: மைட்டோகாண்ட்ரியா

ஒளிச் செறிவிற்ககான அலகு எது?

விடை: கேண்டிலா (cd)

துணி துவைக்கும் இயந்திரத்தில் உள்ள துணி உலர்த்தில் பயன்படும் விசை எது?

விடை: மையவிலக்கு விசை.

ஒரு ஒளி ஆண்டு என்பது என்ன?

விடை: 9.46 ×1012 கி.மீ. (9.46 ×1015 மீ), ஒரு ஆண்டு காலத்தில் ஒளி செல்லும் தொலைவு.

நமக்கு மிக அருகில் உள்ள -நட்சத்திரம் எது?

விடை: ஆல்ஃபா சென்டாரி

வைரம் மின்னுவதற்கான காரணம் என்ன?

விடை: முழுஅக எதிரொளிப்பு

அணுக்கரு இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: ரூதர்ஃபோர்டு

அணுவின் உள்ளிருக்கும் அணுஆர்ப்பிட்டல் மற்றும் எலக்ட்ரான்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டை குறிக்கும் எண்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: குவாண்டம் எண்கள்

ஒரே அணு எண் மற்றும் வெவ்வேறு நிறை எண்களை க் கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

விடை: ஐசோடோப்

ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: ஐசோபார்.

நடனமாடும் தாவரம் என அழைக்கப்படும் தாவரம் எது?

விடை: டெஸ்மோடியம் கைரான்ஸ்

பூச்சி உண்ணும் தவரங்கள் எவை?

விடை: நெபந்தஸ், ட்ரோஸிரா, வீனஸ் பூச்சிப்பிடிப்பான்

ஒளிசேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு எது?

விடை: ஆக்ஸிஜன்

கோபிபோடுகள் என்பவை எவை?

விடை: சிறிய கிரஸ்டேஷியன்கள் (இறால் போன்றவை), கடலில் வாழ்பவை.

நாம் அறிந்த உயிரினங்களில் ஒரு கண்ணை மட்டும் உடைய ஒரே உயிரினம் எது?

விடை: கோபிபோடுகள்

தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

விடை: மரகத புறா

விலங்குகளை இரு பெயர்களிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: கரோலஸ் லின்னேயஸ்

கொழுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: முக்கிளிசரைடுகள் அல்லது மூன்று கிளிசரைடுகள்

புரதங்களின் அதிகப்படியான குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எவை?

விடை: குவாசியோர்கர் (Kwashiorkar) மற்றும் மராஸ்மஸ் (Marasmus)

வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் எது?

விடை: வைட்டமினோ சிஸ்

வைட்டமின் D (கால்சிஃபெரால்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?

விடை: ரிக்கெட்ஸ்.

வைட்டமின் B1 (தயமின்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?

விடை: பெரி பெரி.

வைட்டமின் C (அஸ்கார்பிக் அமிலம்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?

விடை: ஸ்கர்வி

வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்களைப் பழுக்க வைப்பதற்குப் பயன்படுத்தபபடும்  வேதிப்பொருள் எது?

விடை: கால்சியம் கார்பைடு

ஓமின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு அதன் வழியே பாயும் மின்னோட்டத்திற்கு எவ்வாறு இருக்கும்?

விடை: நேர்தகவில்.

காந்த விசைக் கோடு்கள் காந்தத்தின் எந்த துருவத்தில் துவங்கும்?

விடை: வட திசை.

வளிமண்டலத்தின் அடர்த்தியானது, கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லும்போது என்னவாகும்?

விடை: குறையும்.

பாதரசகாற்றழுத்தமானியை உருவாக்கியவர் யார்?

விடை: டாரிசெல்லி

நீரியல் அழுத்தி (Hydraulic press) எந்த அடிப்படை விதியின்படி செயல்படுகிறது?

விடை: பாஸ்கல் விதி

திரவங்களின் கீழ்பகுதியில் உள்ள அழுத்தம் மேல்பகுதியில் உள்ளதைவிட, எவ்வாறு இருக்கும்?

விடை: அதிகமாக.

மிதப்பு விசையானது பாய்மங்களின் எவை இரண்டையும் சார்ந்தது?

விடை: பருமன் மற்றும் அடர்த்தி.

பாலின் தூய்மையைக் கண்டறியப் பயன்படும் கருவி எது?

விடை: பால்மானி (லேக்டோமீட்டர் – Lactometer).

எதிரொலியைத் தெளிவாகக் கேட்கவேண்டுமானால், எதிரொலிக்கும் பரப்பு ஒலி மூலத்திலிருந்து குறைந்தபட்சம் இருக்க வேண்டிய தொலைவு என்ன?

விடை: 17 மீ

செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?

விடை: 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை.

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?

விடை: புதன்

வெள்ளி கோளில் சூரியன் உதிக்கும் திசை எது?

விடை: மேற்கு

நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை என்ன?

விடை: 8

சூரியன் ஒரு விண்மீனா?

விடை: ஆம். சூரியன் ஒரு விண்மீன்.

சூரியனைச் சுற்றிவரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள்களுக்கு என்ன பெயர்?

விடை: வால்விண்மீன்

பொருள் அல்லது மனிதர்கள் எடையற்றுப் இருப்பதுபோல் தோன்றும் நிலைக்கு என்ன பெயர்?

விடை: நுண் ஈர்ப்பு

SI எனப்படும் பன்னாட்டு அலகு முறையின் விரிவாக்கம் என்ன?

விடை: International System of Units 

நீளம், நிறை மற்றும் காலத்தின் SI அலகுகள் என்ன?

விடை:  மீட்டர் (m), கிலோகிராம் (kg), வினாடி (s) (செகண்ட்) அதாவது mks

ஒருபொருளின் தோற்றநிலையை இருவேறு பார்வைக்கோடுகளின் வழியே நோக்கும்போது ஏற்படுவதாகத் தோன்றும் அளவீட்டு மாறுபாடு அல்லது அளவீட்டு இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை:  இடமாறு தோற்றப்பிழை (Parallax Error)

ஒழுங்கற்ற பொருள்களின் பருமனை அளந்தறியப் பயன்படும் முறை எது?

விடை: நீர் இடப்பெயர்ச்சி முறை

ஒரு பொருள் அதன் அச்சினை மையமாக கொண்டு இயங்கினால், அவ்வியக்கம் எது?

விடை:  தற்சுழற்சி இயக்கம்

தானாகக் கீழேவிழும் பொருளின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?

விடை: நேர்க்கோட்டு இயக்கம்.

பம்பரத்தின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?

விடை: தற்சுழற்சி இயக்கம்

சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு நிலைக்கு என்ன பெயர்?

விடை: பிளாஸ்மா நிலை

மிகக்குறைவான் தட்பவெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருள்களின் நிலை என்ன?

விடை: போஸ் நிலை

நைட்ரஜனை  கண்டறிந்தவர் யார்?

விடை: டேனியல் ரூதர்போர்டு. 

வளிமண்டலம் எத்தனை அடுக்குகளால் ஆனது?

விடை: 5 (ஐந்து) 

நமக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கின் பெயர் என்ன?

விடை: அடி வளிமண்டலம்(Troposphere).

புவியில்  முதன்முதலில் உருவானசெல் எது?

விடை: புரோகேரியாடிக்

தெளிவான உட்கருவை கொண்டுள்ள செல் எது?

விடை: யூகேரியாடிக் 

மனி்தனின்  உடம்பில் எத்தனை எலும்புகள் உள்ளன?

விடை: 206

நமது  உடலில் எங்கு மிகச்சிறிய எலும்பு காணப்படுகிறது?

விடை: உள் காதில் (அங்கவடி – Stapes).

நமது உடலில் நீளமான எலும்பு எங்கு காணப்படுகிறது?

விடை: தொடை எலும்பு. 

மென்தசைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

விடை: கட்டுப்படாத இயங்கு   தசைகள்.

சுவாசபாதைக்குள் உணவு செல்வதை தடுக்கும் அமைப்பு எது?

விடை: குரல்  வளைமூடி  (எப்பிகி்ளாட்டிஸ்) 

நுரையீரல்களை சுற்றி இரு அடுக்குகளை கொண்ட பாதுகாப்பு படலத்தின் பெயர் என்ன?

விடை: ப்ளூரா (Pleura)

இரத்த சிவப்பணுக்கள் எங்கு உருவாகின்றன?

விடை: எலும்பு மஜ்ஜை

சீறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு எது?

விடை: நெஃப்ரான்கள்

இரத்தத்தினை வடிகட்டி சீறுநீ்ரை உருவாக்குவது  எது?

விடை: நெஃப்ரான்கள்

காந்தத் தன்மையுள்ள பொருட்கள் எவை?

விடை: இரும்பு, கோபால்ட், நிக்கல்

புவியில் காணப்படும் நன்னீரின் அளவு என்ன?

விடை: 3% (மூன்று சதவீதம்)

நன்னீரில் குறைந்தபட்சம் மற்றும்  அதிகபட்சமாக கரைந்திருக்கும் உப்புகளின் அளவு என்ன?

விடை: 0.05% தொடங்கி 1% 

நீர் சுழற்சியினை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?

விடை: ஹைட்ராலஜிக்கல் சுழற்சி (Hydrological Cycle).

தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும், முதன்மை ஊட்டச்சத்துக்கள் எவை?

விடை: நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K) 

ஜிப்சத்தின் வேதிப்பெயர் என்ன?

விடை: கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட் (CaSO4.2H2O)

எப்சத்தின் வேதிப்பெயர் என்ன?

விடை: மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் (MgSO4 . 7H2O)

மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்கப் பயன்படும் வேதிப்பொருள் எது?

விடை: எப்சம்

அறுவைச் சிகிச்சையில் எலும்பு முறிவுகளைச் சரிசெய்ய பயன்படும் வேதிப்பொருள் எது?

விடை: பாரிஸ் சாந்து (கால்சியம் சல்பேட் ஹெமி  ஹைட்ரேட்  – CaSO4 . ½H2O)

ஃபீனைல் என்பது என்ன?

விடை: கார்பாலிக் அமிலம்( C6H5OH)

தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பினை அடர் சோடியம் ஹைடிராக்சைடு கரைசலுடன் சேர்த்து குளிர வைக்கும்போது  கிடைப்பது?

விடை: சோப்பு.

பயன்பாட்டைக் குறைத்தல் (Reduce), மீண்டும் பயன்படுத்துதல் (Reuse), மறுசுழற்சி செய்தல் (Recycle) ஆகியவை சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கிய மூன்று வழிமுறைகள்  இவற்றை நாம் எவ்வாறு அழைக்கிறோம். 

விடை: 3R

அணுவின் சராசரி விட்டம் என்ன?

விடை: 1×10-10 மீட்டர் அதாவது, 0.1×10-9 மீட்டர். அதாவது, 0.1 நேனோமீட்டர்

ஒரு அணுவின் நிறையானதுஅணுக்கருவினுள் அமைந்துள்ள எவை இரண்டையும் சார்ந்திருக்கும்?

விடை: புரோட்டான்கள் (Protons) மற்றும் நியூட்ரான்கள் (Neutrons)

அணுக்கருவினுள் காணப்படும் துகள்கள்விடை: நியூக்ளியான்கள் (Nucleons) 

எலக்ட்ரானைக் கண்டறிந்தவர் யார்?

விடை: சர் ஜான் ஜோசப் தாம்சன் 

நியூட்ரான் கண்டறிந்தவர்

விடை: ஜேம்ஸ் சாட்விக் 

சீத்தாப்பழம் என்பது என்ன?

விடை: பல கனி்கள் சேர்ந்து உருவான திரள்கனி

கரும்பு மற்றும் மக்காச் சோளத்தின் கணுக்களில் காணப்படும் கொத்தான வேர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

விடை: முட்டு வேர்கள்

சதுப்பு நிலத்தில் வாழும் அவிசீனியா மரத்தின் வேர்கள் மேலே வளர்வதற்கு என்ன பெயர்?

விடை: சுவாசிக்கும் வேர்கள் அல்லது நிமட்டடோ ஃபோர்கள்

ஒட்டுண்ணித்தாவரத்திர்க்கு ஓர் எடுத்துக்காட்டு என்ன?

விடை: கஸ்குட்டா.

உணவு அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: மாஸ்டிகேசன் அல்லது மெல்லுதல் (Mastication)

காசநோயை உருவாக்கும் பாக்டீரியா எது?

விடை: மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே

DOT-ன் விரிவாக்கம் என்ன?

விடை: Directly Observed Treatment

காலராவை நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா எது?

விடை: விப்ரியோ காலரே

டைபாய்டு நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா எது?

விடை: சால்மோனெல்லா டைபி

அழைக்கப்படுகின்றன?

விடை: நியூக்ளியான்கள் (Nucleons)

புரோட்டான்களை கண்டறிந்தவர் யார்?

விடை: எர்னஸ்ட் ரூதர்போர்டு (Ernest Rutherford)

மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?

விடை: அம்மீட்டர்

மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் கருவி எது?

விடை: வோல்ட்மீட்டர்

துணை மின்கலன்களில்  உருவாகும் வேதிவினையானது எவ்வகை வினை? 

விடை: மீள்வினை

சிம் கார்டுகள், கணினிகள், மற்றும் ATM கார்டுகளில் பயன்படுத்தப்படும் சிப்புகளில்   பயன்படும் குறைக்கடத்திகள் எவை?

விடை: சிலிகான் மற்றும் ஜெர்மேனியம்

ஆவியாதல்  திரவத்தின்   எப்பகுதில்  மட்டும் நிகழ்வதாகும்?

விடை: புறப்பரப்பில்

திண்ம நிலையில் இருந்து வாயு நிலைக்கு பொருள்கள் மாறும் நிகழ்வுக்குப் பெயரென்ன?

விடை: பதங்கமாதல்

ஆவியாதல், கொதித்தல், ஆவி சுருங்குதல், உருகுதல் மற்றும் உறைதல் ஆகிய நிகழ்வுகள் எவ்வகையான நிகழ்வுகள்?

விடை: இயற்பியல்

பிரித்தெடுக்கும், தூய்மையாக்கும் முறை என்பது என்ன?

விடை: படிகமாக்குதல்

ஈஸ்ட் மற்றும் சிலவகை பாக்டீரியாக்களினால் சர்க்கரைக் கரைசல் ஆல்கஹாலாகவும், கார்பன் டை ஆக்ஸைடாகவும் மாறும் நிகழ்வுக்குப் பெயரென்ன?

விடை: நொதித்தல்

 தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் சேர்க்கப்பட்டு உருவாகுவது எது?

விடை: வனஸ்பதி 

சமையலில் பயன்படும் வனஸ்பதியை உருவாக்கப் பயன்படும் வினையூக்கி எது?

விடை: நிக்கல், பிளாட்டினம் அல்லது பல்லேடியம்

தட்டம்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: வாரிசெல்லா

அமீபா எதன் மூலம்  மூலம் இடம் பெயர்கிறது?

விடை: போலிக் கால்கள்

உயிரியல் முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும்  பாக்டீரியாக்கள் எவை?

விடை: சயனோ பாக்டீரியா, நாஸ்டாக்

பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் பாக்டீரியாவின் பெயர் என்ன?

விடை: ரைசோபியம்

காற்றில்லாநிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு  பயன்படுத்தப்படும்  பாக்டீரியாவின் பெயர் என்ன?

விடை: மெத்தனோ பாக்டீரியா 

வினையூக்கி என்பது என்ன?

விடை: எந்த ஒரு பொருள் ஒரு வேதிவினையில் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல், வேதி மாற்றத்தின் வேகத்தினை மட்டும் துரிதப்படுத்துமோ அப்பொருளுக்கு வினையூக்கி என்று பெயர்.

உணவு கெட்டுப்போதல் என்பது எவ்வகயான மாற்றம்?

வேதியியல் மாற்றம்

ஒரு குறிப்பிட்ட செயல்களைச் செய்வதற்காக உருவான செல்களின் குழுவுக்குப் பெயரென்ன?

விடை: திசு

உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு என்ன?

விடை: செல் 

தாவர செல்லிற்கான வடிவத்தைத் தருவது எது?

விடை: செல்லுலோஸ்

விலங்கு செல்களில், செல் பகுப்பின் போது குரோமோசோம்களைப் பிரிக்க உதவுவது எது?

விடை: சென்ட்ரியோல் (Centrioles)

செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

விடை: உட்கரு

ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

விடை: R.H விட்டேக்கர் 

வேப்ப மரத்தின் இருசொற் பெயர் என்ன?

விடை: அசாடிரேக்டா இண்டிகா 

ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகுத் திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு எவ்வாறு அழைக்கப்டுகிறது?

விடை: ஒளிச்செறிவு 

ஒளிச்செறிவின் SI அலகு என்ன?

விடை: கேண்டிலா

ஒளியின் திறனுக்கான SI அலகு என்ன?

விடை: லுமென் (lumen) 

திண்மக் கோணத்தின் SI அலகு என்ன?

விடை: ஸ்ட்ரேடியன்

எதனை அடிப்படையாகக் கொண்டு அணுக்கடிகாரங்கள செயல்படுகின்றன?

விடை: அணுவினுள் ஏற்படும் அதிர்வுகளை.

குவார்ட்ஸ் கடிகாரங்கள் எந்த  அலைவுகள்   மூலம் இயங்குகின்றன?

விடை: மின்னணு அலைவுகள் (Electronic Oscillations)

எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை எது?

விடை: உந்து விசை

  திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி எது?

விடை: மானோமீட்டர்

தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணமான விசை?

விடை:  பரப்பு இழுவிசை

தாவர வேர்கள் நீர் மூலக்கூறுகளை உறிஞ்சுகிறது. எதன் மூலம் “நுண்புழை ஏற்றம்” என்ற செயல்பாட்டின் காரணமாக நீர் மேலேறுகிறது?

விடை: சைலம் என்ற மெல்லிய குழாய்   

திரவத்துளிகள் எவ்வாறு கோள வடிவத்தை பெறுகின்றன?

விடை:  ஒரு குறிப்பிட்ட பருமனிற்கு மிகச்சிறிய புறப்பரப்பு தரும் வடிவம் கோள வடிவம் ஆகும்.

நீர்ச்சிலந்தியானது நீரின் பரப்பில் எளிதாக நடக்கக் காரமான விசை எது?

விடை:  நீரின் பரப்பு இழுவிசை 

டார்ச் விளக்குகளில் பயன்படும்  ஆடிகள் எவை?

விடை:  குழிஆடிகள் 

சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் பயன்படும் ஆடிகள் எவை?

விடை:  குவி ஆடிகள்

உடல் உள்உறுப்புக்களைப் பார்ப்பதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவி எது?

விடை:  ஒளியிழை பெரிஸ்கோப் 

தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? 

 

விடை:  கரிமச் சேர்மங்கள்

வனஸ்பதி நெய் (டால்டா) தயாரித்தலில் வினைவேக மாற்றியாக பயன்படுவது எது?

விடை:  நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல் 

என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள்  எவ்வாறு அழைக்கப்படுகின்றன? 

விடை:  உயிரி வினைவேக மாற்றிகள்

ஒரு உணவில் துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்ற நிகழ்வுகளால் உணவின் தரம் குறைய காரணமாக அமையும் உயிரி வினைவேகமாற்றி எது? 

விடை:  என்சைம்

முட்டைகள் அழுகும்பொழுது துர்நாற்றம் வீச காரணமான வாயு எது?

விடை:  ஹைட்ரஜன் சல்பைடு 

செல்கள் பாலிஃபீனால் ஆக்சிடேஸ் அல்லது டைரோசினேஸ் என்ற என்சைமைக் கொண்டுள்ளன. இவை ஆக்சிஜனுடன் தொடர்புக்கு வரும்பொழுது பழங்களிலுள்ள ஃபீனாலிக் சேர்மங்களை பழுப்பு நிறமிகளாக மாறச் செய்கின்றன. இப்பழுப்பு நிறமிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? 

விடை:  மெலனின்

வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்கு காரணமான நிறமி எது?

விடை:  மெலனின்

வைரஸ் என்பது எவற்றால் ஆனது?

விடை:  மரபுப் பொருள் மற்றும் புரதத்தால்

வைரஸ்கள் பாக்டீரியாவைக் காட்டிலும் எத்தனை மடங்கு சிறியவை?

விடை:  10,000   

பாக்டீரியாவில் இருவகை எவை? 

விடை:  (1) காற்று சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது).   (2) காற்றில்லா சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுவதில்லை)

எந்த வகை பாக்டீரியாக்கள் தமது உணவை தாமே தயாரித்துக்கொள்கின்றன?

விடை: ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்கள்

ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு?

விடை: சயனோபாக்டீரியா

பல செல்களால் ஆன பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு?

விடை: பெனிசிலியம்

பூஞ்சைகளைப் பற்றிய படிப்புக்கு என்ன பெயர்?

விடை: மைக்காலஜி

ஒரு செல்லாலான பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு?

விடை: ஈஸ்ட்

ஈஸ்ட்டினால் உற்பத்தி செய்யப்படும் நொதிக்குப் பெயரென்ன?

விடை: சைமேஸ் 

ஒரு செல்லாலான, நகரும் திறனுடைய நன்னீர் வாழ் பாசிக்கு எடுத்துக்காட்டு?

விடை: கிளாமிடோமோனாஸ். 

அமீபா எதன் மூலம்  மூலம் இடம் பெயர்கிறது?

விடை: போலிக் கால்கள்

உயிரியல் முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா எவை?

விடை: சயனோ பாக்டீரியா, நாஸ்டாக் போன்றவை 

பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் பாக்டீரியாவின் பெயரென்ன? 

விடை: ரைசோபியம் 

காற்றில்லா நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு  பயன்படுத்தப்படும்  பாக்டீரியா எது?

விடை: மெத்தனோ பாக்டீரியா

மனிதன் மற்றும் விலங்குகளின் மலக்கழிவுகள், தாவரங்களின் கழிவுகள், காற்றில்லா சுவாச பாக்டீரியங்களினால் சிதைக்கப்படும் போது மீத்தேனுடன் (உயிரி வாயு) சேர்ந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜனும் உற்பத்தியாகின்றன. இந்த பாக்டீரியங்கள் எவ்வாறு என்றழைக்கப்படுகின்றன?

விடை: மெத்தனோஜென்கள்

லினென் நூலிழைகள் தயாரிக்கப்படுதலில் பயன்படும் நுண்ணுயிரி எது?

விடை: சூடோமோனாஸ் ஏருஜினோஸா

பாலில் உள்ள லாக்டோஸை, லாக்டிக் அமிலமாக மாற்றும் பாக்டீரியா  எது?

விடை: லேக்டோ பேசில்லஸ்

பாலைத் தயிராக்க உதவும் பாக்டீரியா எது?

விடை: லேக்டோ பேசில்லஸ்

லாக்டிக் அமில பாக்டீரியா என்றழைக்கப்படும் பாக்டீரியா  எது?

விடை: லேக்டோ பேசில்லஸ்

வைரஸினால் உண்டாகும் ஃப்ளூ காய்ச்சல் எதன்  மூலம் பரவுகிறது?

விடை: காற்றின் மூலம்

விலங்குகளின்  வாய் மற்றும் கால்க் குளம்புளில்   நோயுண்டாக்கும் நுண்ணுயிரி எது?

விடை: ஆப்ரோ வைரஸ்

தாவர நோயான சிட்ரஸ் கேன்சர் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி எது?

விடை: சாந்தோமோனஸ்ஆக்ஸனோபோடிஸ் (பாக்டீரியா)

உருளைக்கிழங்கு பிளைட் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி எது?

விடை: பைட்டோபைத்தோரா இன்ஃபெஸ்டென்ட்ஸ் (பூஞ்சை 

மாமரத்தின் தாவரவியல் பெயர் என்ன?

விடை: மாஞ்சிஃபெரா இன்டிகா

இந்தியாவில் மிகப்பெரிய உலர்தாவரத்தொகுப்பு (Herbarium) எங்கு உள்ளது?

விடை: கல்கத்தா

ஒரு செல் உயிரியில் நகர்ந்து செல்லக்கூடிய பாசி எது?

விடை: கிளாமைடோமோனஸ்

குழுவாகச் சேர்ந்து வாழும் தன்மை கொண்ட பாசிகள் எவை?

விடை: வால்வாக்ஸ்

வீட்டு விலங்குகளுக்கு உணவாகப் பயன்படும் பாசிக்கு எடுத்துக்காட்டு?

விடை: லேமினேரியா, அஸ்கோஃபில்லம்

மக்கள் உணவாக உட்கொள்ளும் பாசிகள் எவை?

விடை: அல்வா, ஸ்பைருலினா, குளோரெல்லா

மண்ணின் வளத்தை அதிகரிக்க பயன்படும் பாசிகள் எவை?

விடை: நாஸ்டாக், அனபீனா

விண்வெளிப் பயணத்தில் கார்பன் டை ஆக்ஸைடை அகற்றுவதற்கும் மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படும் பாசிகள் எவை?

விடை: குளோரெல்லா ஃபைரினாய்டோசா

புரதத்தை உற்பத்தி செய்யும் பாசிகள் எவை?

விடை: குளோரெல்லா, ஸ்பைருலினா

வேர்க்கடலைச் செடியில் டிக்கா நோயை உருவாக்கும் ஒட்டுண்ணிகள் (பூஞ்சைகள்) எவை?

விடை: செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா.

பூஞ்சைகள் எந்த பிரிவை சார்ந்தவை?

விடை: தாலோஃபைட்டா

மட்குண்ணிகள் எந்த பொருள்களிலிருந்து உணவை பெறுகின்றன?

விடை: இறந்த மற்றும் அழுகிய

உண்ணக்கூடிய காளான் எந்த வகையைச் சார்ந்தது?

விடை: அகாரிகஸ் (பொத்தான் காளான்)

கரும்பில் சிவப்பு அழுகல் நோயை எற்படுத்தும் பூஞ்சை எது?

விடை: கோலிடாட்ரைக்கம் ஃபல்கேட்டம்

பருத்தியில் வாடல் நோயை எற்படுத்தும் பூஞ்சை எது?

விடை: ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம்

நெல்லில் பிளாஸ்ட் நோயை எற்படுத்தும் பூஞ்சை எது?

விடை: பைரிகுலேரியா ஒரைசே

குழந்தைகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பூஞ்சை எது?

விடை: அஸ்பர்ஜில்லஸ்

குழந்தைகளை ஒவ்வாமையில் இருந்து பாதுகாக்கும் பூஞ்சை எது?

விடை: கிளாடோஸ்போரியம்

மனிதனின் தலையில் பொடுகு எற்படுத்தும் பூஞ்சை எது?

விடை: மைக்கோஸ்போரம் ஃபர்ஃபர்

பாசிகள் சேகரிக்கும் உணவு எது?

விடை: ஸ்டார்ச் 

பூஞ்சைகள் சேகரிக்கும் உணவு எது?

விடை: கிளைக்கோஜன், எண்ணெய்

வயிற்றிலுள்ள உருளைப் புழுக்களை அழிக்கும் தாவரம் எது?

விடை: அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி)

தீராத வயிற்றுப் போக்கு, சீதபேதிஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் எது?

விடை: ஏகில் மார்மிலோஸ் (வில்வம்)

எந்த தாவரத்தின் இலைகளும் கனிகளும் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன?

விடை: சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை)

மஞ்சள் காமாலை நோய்க்குமருந்தாகப் பயன்படும் தாவரம் எது?

விடை: ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி)

கண்ணினுள் நுழையும் ஒளியின் அளவுக்கேற்ப கண் பாவையின் அளவைக் கட்டுப்படுத்துவது எது?

விடை: ஐரிஸ் (கருவிழி) (Iris)

ஒளியை கண்ணின் உள்ளே அனுப்புவது எது?

விடை: கண்பாவை (Pupil)

ஒளிக்கதிர்களை மின் தூண்டல்களாக மாற்றி அவற்றை பார்வை நரம்பின் வழியாக மூளைக்கு அனுப்பும் பணியைச் செய்வது எது?

விடை: விழித்திரை (Retina)

கண்ணின் வடிவத்தைப் பராமரிக்கும் திரவம் எது?

விடை: விட்ரியஸ் திரவம் (பின் கண்ணறை திரவம்)

ஓய்வில் உள்ள ஒரு பொருளை இயக்கத்திற்கு மாற்ற உதவுவது எது?

விடை: விசை

இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் ஓய்வுநிலைக்கு வருவதற்கு காரணம் என்ன?

விடை: விசை

இயங்கும் பொருளை வேகமாக இயக்குவதற்கும், வேகத்தைக் குறைக்கவும் எது தேவைப்படுகிறது?

விடை: விசை

நகரும் பொருளின் திசையை மாற்ற உதவுவது எது?

விடை: விசை

பொதுவாக விசை என்பது எப்படி பொருள் கொள்ளப்படுகிறது?

விடை: தள்ளுதல் அல்லது இழுத்தல்

விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி பயிலும் அறிவியல் பாடத்திற்கு என்ன பெயர்?

விடை: இயந்திரவியல் (Mechanics)

இயந்திரவியலின் இரண்டு பிரிவுகள் எவை?

விடை: நிலையியல் (Statics) மற்றும் இயங்கியல் (Dynamics)

விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையிலுள்ள பொருளின் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியலுக்கு என்ன பெயர்?

விடை: நிலையியல் (Statics)

விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையிலுள்ள பொருளின் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியலுக்கு என்ன பெயர்?

விடை: இயங்கியல் (Dynamics)

இயங்கியலின் (Dynamics) இரு பிரிவுகள் யாவை?

விடை: இயக்கவியல் (Kinematics) மற்றும் இயக்கவிசையியல் (Kinetics)

இயக்கத்தை ஏற்படுத்தும் விசையினைக் கருத்தில் கொள்ளாமல் இயக்கத்தினை மட்டுமே விளக்கும் அறிவியல் எது?

விடை: இயக்கவியல் (Kinematics)

பொருளின் இயக்கத்தையும் அதற்குக் காரணமான விசை பற்றியும் விளக்கும் அறிவியலுக்குப் பெயரென்ன?

விடை: இயக்கவிசையியல் (Kinetics)

விசை சார்பற்ற இயக்கத்தை (இயற்கையான இயக்கம்) வரையறுத்தவர் யார்?

விடை: அரிஸ்டாட்டில்

ஒரு பொருள், தன் மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தனது ஓய்வு நிலை, அல்லது தான் சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையில் மாற்றம் ஏற்படுவதை எதிர்க்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை:  நிலைமம்

நிலைமத்தின் வகைகள் யாவை?

விடை:  ஓய்வில் நிலைமம், இயக்கத்தில் நிலைமம் மற்றும் திசையில் நிலைமம்

நீளம் தாண்டுதலில், போட்டியாளர் நீண்ட தூரம் தாண்டுவதற்காக, தான் தாண்டும் முன், சிறிது தூரம் ஓடுவதற்குக் காரணம் என்ன?

விடை:  இயக்கத்திற்கான நிலைமம்

ஓடும் மகிழுந்து வளைபாதையில் செல்லும் போது பயணியர், ஒரு பக்கமாக சாயக் காரணம் என்ன?

விடை:  திசைக்கான நிலைமம்

கிளைகளை உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள், பழுத்தபின் விழும் பழங்கள் இவை யாவும் எவற்றிற்கான எடுத்துகாட்டு?

விடை: ஓய்விற்கான நிலைமம்

ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் தாக்கத்தை எதன் மூலம் அளவிடலாம்?

விடை: நேர்க்கோட்டு உந்தத்தின் மூலம் (Linear Momentum)

இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் எவ்வாறு அழைக்கப்படும்?

விடை: உந்தம்

உந்தத்தின் திசை எவ்வாறு இருக்கும்?

விடை: திசைவேகத்தின் திசையிலேயே

உந்தம் என்பது எவ்வகையான அளவு?

விடை: வெக்டார்

விசையின் எண் மதிப்பானது எதனால் அளவிடப்படுகிறது?

விடை: உந்தத்தால்

உந்தத்தின் SI அலகு என்ன?

விடை: கிகி மீவி-1 (அதாவது, கிகி.மீ /வி)

திசைவேகமோ, நிறையோ அதிகமானால் விசையின் தாக்கம் எப்படி இருக்கும்?

விடை: அதிகமாகும்.

உந்தத்திற்கான சமன்பாடு என்ன?

விடை: உந்தம் (p) = நிறை (m) × திசைவேகம் (v). அதாவது, p = mv

ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும். இந்த விதியின் பெயரென்ன?

விடை: நியூட்டனின் முதல் விதி

நியூட்டனின் முதல் விதி எவற்றை விளக்குகிறது?

விடை: விசையையும், பொருட்களின் நிலைமத்தையும்

விசை எவ்வகையான அளவு?

விடை: எண்மதிப்பும் திசையும் கொண்ட வெக்டார் அளவு

விசைகளின்யின் இரு வகைகள் யாவை?

விடை: ஒத்த இணைவிசைகள், மாறுபட்ட இணைவிசைகள்

சமமான அல்லது சமமற்ற விசைகள், ஒரு பொருள்மீது ஒரே திசையில் இணையாகச் செயல்பட்டால், அவற்றிற்கு என்ன பெயர்?

விடை: ஒத்த இணைவிசைகள்

சமமான அல்லது சமமற்ற விசைகள், ஒரு பொருள்மீது எதிரெதிர் திசையில் இணையாகச் செயல்பட்டால், அவற்றிற்கு என்ன பெயர்?

விடை: மாறுபட்ட இணைவிசைகள்

ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள் செயல்படும்போது, அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசைக்கு என்ன பெயர்?

விடை: தொகுபயன் விசை (Resultant Force)

தொகுபயன் விசையின் மதிப்பு, செயல்படும் அனைத்து விசைகளின் வெக்டர் கூடுதலுக்கு எவ்வாறு இருக்கும்?

விடை: சமமாக இருக்கும்

ஒரு பொருளின் மீது செயல்படும் தொகுபயன் விசையின் மதிப்பு சுழியாக இருந்தால், அதிலிருந்து நாம் என்ன அறியலாம்?

விடை: பொருள் சமநிலையில் உள்ளதென்று அறியலாம்

தொகுபயன் விசையின் மதிப்பு சுழி எனில் அவ்விசைகளுக்கு என்ன பெயர்?

விடை: சமன் செய்யப்பட்ட விசைகள் (Balanced Forces)

ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகளின் தொகுபயன் விசையின் மதிப்பு சுழியில்லையெனில், என்னவாகும்?

விடை:  அவை பொருளின் இயக்கத்திற்குக் காரணமாக இருக்கும்.

ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகளின் தொகுபயன் விசையின் மதிப்பு சுழியில்லையெனில், அவ்விசைகளுக்கு என்ன பெயர்?

விடை: சமன் செய்யப்படாத விசைகள்

கிணற்றில் இருந்து நீர் எடுக்கச் செயல்படும் விசை, எதற்கான எடுத்துக்காட்டு?

விடை: சமன் செய்யப்படாத விசைகள்

சமன் செய்யப்படாத விசைகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் என்ன?

விடை: கிணற்றில் இருந்து நீர் எடுக்கச் செயல்படும் விசை, நெம்புகோலின் மீது செயல்படும் விசை, தராசுத்தட்டுகளில் செயல்படும் விசை

பொருட்களை சமநிலைக்கு கொண்டுவர உதவும், தொகுபயன் விசைக்குச் சமமான, ஆனால், எதிர்த்திசையில் செயல்படும் விசைக்கு என்ன பெயர்?

விடை: எதிர்சமனி (Equilibrant)

ஒளி (Light) என்பது என்ன?

விடை: ஒரு வகையான ஆற்றல்

ஒளி எப்போதும் எவ்வாறு செல்கிறது?

விடை: நேர்க்கோட்டில்

ஒளி எந்த வடிவில் பரவுகிறது?

விடை: அலைவடிவில்

ஒளி செல்லும் பாதைக்கு என்ன பெயர்?

விடை: ஒளிக்கதிர் (Light Ray)

ஒளிக்கதிர்களின் தொகுப்புக்கு என்ன பெயர்?

விடை: ஒளிக்கற்றை (Light Beam)

ஒளியை வெளிவிடும் பொருட்களுக்கு என்ன பெயர்?

விடை: ஒளிமூலங்கள் (Light Sources)

தங்களின் சுய ஒளியை வெளியிடும் பொருட்களுக்கு என்ன பெயர்?

ஒளிரும் பொருட்கள் (Luminous Objects) 

ஒளிரும் பொருட்களுக்கு எடுத்துக்காட்டுகள் என்ன?

விடை: சூரியன் உள்ளிட்ட அனைத்து விண்மீன்களும்.

ஒளி பரவுவதற்கு எது தேவையில்லை?

விடை: ஊடகம்

ஒளியின் திசைவேகம் (C), அலைநீளம் (λ) மற்றும் அதிர்வெண் (ν) ஆகிவற்றுக்கான, சமன்பாடு என்ன?

விடை: C = ν λ

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY