TNPSC TAMIL
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்!
- இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு
- இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை
- இயற்கை வாழ்வில்லம் – திருக்குறள்
- இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை
- இயற்கை தவம் – சீவகசிந்தாமணி
- இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்
- இயற்கை அன்பு – பெரிய புராணம்
- இயற்கை இறையருள் – தேவாரம், திருவாசகம், திருவாய்மொழிகள்
- கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை, நூற்றைம்பது கலி
- புறநானூறு – தமிழ்க் கருவூலம்
- பட்டினப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
- பரிபாடல் – பரிப்பாட்டு
- மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை
- திருமுருகாற்றுப்படை – முருகு, புலவராற்றுப்படை
- முல்லைப்பாட்டு – நெஞ்சாற்றுப்படை
- திருக்குறள் – முப்பால், முப்பானூல், தெய்வ நூல், தமிழ் மறை, பொய்யாமொழி, வாயுரை வாழ்த்து, பொதுமறை, உத்திரவேதம், திருவள்ளுவப் பயன், ஈரடி வெண்பா
- நாலடியார் – நாலடி நானூறு, வேளாண் வேதம்
- முதுமொழிக் காஞ்சி – அறவுரைக் கோவை
- கைந்நிலை – ஐந்திணை அறுபது
- திருப்பாவை – பாவைப்பாட்டு
- திருவாய்மொழி – திராவிட வேதம்
- பெரிய புராணம் – அறுபத்து மூவர் புராணம், திருத்தொண்டர் புராணம்
- நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் – திராவிட வேதம், வைணவர்களின் தமிழ் வேதம்
- திருமந்திரம் – தமிழ் மூவாயிரம்
- கருணாமிர்த சாகரம் – இசைப் பேரிலக்கணம்
- மூதுரை – வாக்குண்டாம்
- வெற்றி வேற்கை – நறுந்தொகை
- நேமிநாதம் – சின்னூல்
- ஏலாதி – குட்டித் திருக்குறள்
- திருக்கயிலாய ஞான உலா – ஆதியுலா, ஞான உலா
- பழமொழி – மூதுரை, முதுமொழி, உலக வசனம், பழமொழி நானூறு
- பன்னிரு பாட்டியல் – வெண்பாப் பாட்டியல்
- சிவஞான போதம் பேருரை – சிவஞான மாபாடியம்
- இலக்கண விளக்கம் – குட்டித் தொல்காப்பியம்
- திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி – குட்டித் திருவாசகம்
- பெருங்கதை – கொங்கு வேளிர் மாக்கதை
- கம்பராமாயணம் – வழிநூல்
- சிலப்பதிகாரம் – தமிழின் முதல் காப்பியம், முதல் நூல், முத்தமிழ்க் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், சமுதாயக் காப்பியம், தமிழரின் தேசியக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம், வழிநூல் என்னும் நூல் வகையுள் முதல் நூல்
- மணிமேகலை – மணிமேகலைத் துறவு
- சீவகசிந்தாமணி – மண நூல்
- நீலகேசி – நீலம், நீலகேசித் தெருட்டு
- கலிங்கத்துப்பரணி – தென்தமிழ் தெய்வப்பரணி
- திருக்கோவையார் – இராசாக் கோவை
- குறவஞ்சி – குறம், குறவஞ்சி நாடகம், குறவஞ்சி நாட்டியம்
- உலா – உலாப்புறம்
- தாயுமானவர் பாடல்கள் – தமிழ்மொழியின் உபநிடதம்
Previous article
Next article
Leave Comments
Post a Comment