Ads Right Header

அரசியலமைப்பு அமைப்புகள்!

 

தேர்தல் ஆணையம் (Election Commission)

  • சரத்து 324ன்படி இது ஒரு அரசியலமைப்புடன் கூடிய தன்னாட்சி அமைப்பாகும்.
  • வாக்காளர்களின் பட்டியல்களைத் தயாரிக்கவும், தேர்தலை நடத்தவும், கண்காணிக்கவும், நெறிப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் ஓர் ஆணையத்தை நிறுவ அரசியலமைப்பின் ஷரத்து 324 வகை செய்கிறது. இதுவே தேர்தல் ஆணையம் எனப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் அமைப்பு

  • தேர்தல் ஆணையம் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையாளரையும் அவருக்கு உதவியாக மற்ற இரு தேர்தல் ஆணையர்களையும் கொண்டிருக்கும். இவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
  • துவங்கியதில் இருந்து 15 அக்டோபர் 1989 வரை தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையரை மட்டும் கொண்ட ஒரு நபர் அமைப்பாக இயங்கி வந்தது. தற்போது இரண்டு தேர்தல் ஆணையர்களையும் கொண்ட மூன்று நபர் அமைப்பாக உள்ளது.
  • தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் அனைவரின் நிலையும், அந்தஸ்தும், அதிகாரமும் ஒன்றே: அவர்கள் அனைவரும் சமமானவர்கள். அவர்களது ஊதியம் மற்றும் படிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையானது.
  • தலைமை மற்றும் பிற தேர்தல் ஆணையாளர்கள் தாங்கள் பதவியேற்ற தேதியிலிருந்து 6 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பர். இவர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆகும். மேற்கண்டவற்றில் எது முன்னதாக வருகிறதோ (அதாவது 6 ஆண்டுகள் அல்லது 65 வயது) அதன்படி தங்கள் பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.
  • தலைமைத் தேர்தல் ஆணையர் –ளு.லு.நஷிம் சைத்
  • தேர்தல் ஆணையர்கள் – ஆச்சல்குமார் ஷோதி

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களும், பணிகளும்

Advertisement
  • பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், குடியரசுத் தலைவர் மற்றும் துணைக்குடியரசுத் தலைவர் ஆகியோரின் தேர்தலுக்கு உண்டான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது.
  • மேற்கண்ட தேர்தல்களை நடத்துகிறது. கண்காணிக்கிறது நெறிப்படுத்துகிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது.
  • அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் வழங்குகிறது. அது தொடர்பாக எழும் தகராறுகளைத் தீர்த்து வைக்கிறது.
  • பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின், தகுதியின்மை குறித்து முறையே குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்குதல்.
  • சில சுழ்நிலைகளில் தொகுதி முழுமைக்கும் மறுவாக்கெடுப்பு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்.

நிதி ஆணையம்

  • அரசியலமைப்பின் ஷரத்து 280 நிதி ஆணையம் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிதி ஆணையம் குடியரசுத் தலைவரால் அமைக்கப்பட வேண்டும்.
  • நிதி ஆணையத்திற்கு ஒரு தலைவரும் நான்கு உறுப்பினர்களும் இருப்பார்கள். இவர்கள் குடியரசுத் தலைவரால் பதவியில் அமர்த்தப்படுவார்கள்.
  • நிதி ஆணையத்தின் தலைவர் பொதுப்பணிகளில் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
  • தகுதி – உறுப்பினர்கள் கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
    1. உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கத் தகுதி படைத்தவர்.
    2.  அரசாங்க நிதி மற்றும் கணக்கு பற்றி சிறப்பு அறிவு பெற்றவர்.
    3.  நிர்வாகம், நிதி பற்றி பரந்த அனுபவம் பெற்றவர்.
    4. பொருளாதரத்தில் சிறப்பு அறிவைப் பெற்றவர்.

பணிகள்

  • நிதி ஆணையம் கீழ்க்கண்டவை குறித்து குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
  • பகிர்ந்து கொள்ளத் தக்க வரி வருமானங்களை, மத்திய அரசும் மாநில அரசும் எப்படி பகிர்ந்து கொள்வது மற்றும் அத்தகைய வருமானத்தில் மாநிலங்களுக்கிடையே செய்யப்பட வேண்டிய பங்குகள்.
  • மாநிலங்களின் வருவாய்க்கு ஒட்டுமொத்த வைப்பு நிதியிலிருந்து உதவித்தொகை அளிப்பது.
  • நிதி குறித்த விஷயங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவர் ஏதேனும் ஆலோசனை கேட்டால் நிதி ஆணையம் அவருக்கு அறிவுரை வழங்கும்.
  • நிதி ஆணையத்தின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வாணையம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

  • மத்திய அரசுப் பணியாளர்களை அமர்த்துவதற்கு தேர்வுகள் நடத்தும் அதிகாரம் பெற்ற ஆணையே மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகும்.
  • ஷரத்து 315-323 பகுதி XIV.
  • இது அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட சுதந்திமான அமைப்பு ஆகும்.

அமைப்பு – ஆணைளத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார்.

பதவிக்காலம் – அரசுப்பணி தேர்வாணைய உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். எனினும் அவரது ஓய்வு பெறும் வயது 65 ஆகும். மேலும் உறுப்பினர் ஒருவர் தானாகவே தனது பதவியை இராஜினாமா செய்யலாம். தீய நடத்தையின் அடிப்படையில் உறுப்பினர் ஒருவரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கலாம்.

பதவி நீக்கம்

தகாத நடத்தையின் காரணமாகவும் ஆணையத் தலைவரோ, உறுப்பினர்களோ பதவி நீக்கம் செய்யப்படலாம். அவ்வாறு பதவி நீக்குவது குறித்து உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் குறிப்பு அனுப்ப (Reference) வேண்டும். உச்சநீதிமன்றம் தக்க விசாரணை நடத்தி முடிவில் அவரை பணிநீக்கம் செய்ய அறிக்கை அனுப்பினால் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

  • மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்
  • மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களை அம்மாநிலத்தின் ஆளுநர் நியமனம் செய்வார்.
  • அரசுப்பணி தேர்வாணைய உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். எனினும் அவரது ஓய்வு பெறும் வயது 62 ஆகும்.
  • மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களை ஆளுநர் நியமித்தாலும் குடியரசு தலைவர் மட்டுமே பதவி நீக்கம் செய்ய முடியும்.
  • தகாத நடத்தையின் காரணமாகவும் ஆணையத் தலைவரோ, உறுப்பினர்களோ பதவி நீக்கம் செய்யப்படலாம். அவ்வாறு பதவி நீக்குவது குறித்து உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் குறிப்பு அனுப்ப வேண்டும். உச்சநீதிமன்றம் தக்கத விசாரணை நடத்தி முடிவில் அவரை பணிநீக்கம் செய்ய அறிக்கை அனுப்பினால் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கூட்டு மாநில அரசுப் பணியாளர்

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவாக ஒரு அரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக்குவதற்கு அரசியல் அமைப்பு சட்டம் வழிவகுத்துள்ளது.
  • மாநிலங்களின் கோரிக்கையின்படி கூட்டு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் பாராளுமன்றத்தால் உருவாக்கப்படும். ஆகவே இது சட்டப்படி உருவான அமைப்பாகும். மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்ததைப் போல இது அரசியலமைப்பின்படி உருவான அமைப்பு அல்ல.
  • 1966ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் சிறிது காலத்திற்கு கூட்டு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை கொண்டிருந்தன.
  • கூட்டு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமனம் செய்வார்.
  • அரசுப் பணி தேர்வாணைய உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். எனினும் அவரது ஓய்வு பெறும் வயது 62 ஆகும்.
  • ஆணையத் தலைவரோ உறுப்பினர்களோ குடியரசுத் தலைவரால் பதவிநீக்கம் செய்யப்படலாம்.
  • இந்திய அரசுச்சட்டம் 1919-ன்படி மத்திய பொதுத் தேர்வாணையம் 1926ல் ஏற்படுத்தப்பட்டு குடிமைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.
  • இந்தய அரசுச்சட்டம் 1935ன்படி பெடரல் பொதுத் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் மாநிலப் பொதுத் தேர்வாணையம் மற்றும் இணைந்த பொதுத் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது.

இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர்

  • ஷரத்து 148ன்படி இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத்தலைவர் தன் கையொப்பமிட்ட மற்றும் முத்திரையிட்ட ஆணையால் நியமிக்கப்படுகிறார்.
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவதற்குள்ள நடைமுறைகளின் படிதான் அவரை நீக்க வேண்டுமே தவிர பிற நடைமுறைகளின் படி நீக்கக்கூடாது என்றும் அரசியலமைப்பின் ஷரத்து 148 கூறுகிறது.
  • அவரது ஊதியம், மற்றும் பணிக்கான பிந நிலைப்பாடுகள் பாராளுமன்றத்தால் நிர்ணயிக்கப் படுகிறது.
  • அவர்களது ஊதியம் மற்றும் படிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கிடையாது.

கடடைகளும், அதிகாரங்களும்
ஷரத்து 149

  • ஒரு கணக்காளர் என்ற முறையில் இவர் இந்தியாவின் ஒருங்கிணைப்பு நிதியில் இருந்து எடுக்கப்படும் அனைத்து தொகைகளின் மீதும் கட்டுப்பாடு வைத்திருந்தார். தற்போது மத்திய அரசின் கணக்குகளை மட்டுமே தணிக்கை செய்கிறார்.
  • ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் மத்திய மற்றும் மாநில அரசால் செலவழிக்கப்படும் எல்லா தொகைகளையும் தணிக்கை செய்கின்றனர்.
  • மத்திய அரசு தொடர்பான கணக்குகளை அவர் குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பிப்பார். அவர் அதை பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் முன்பும் சமர்ப்பிப்பார்.
  • மாநில அரசின் கணக்குகளையும், அறிக்கைகளையும் ஆளுநரிடம் அவர் சமர்ப்பிப்பார். மாநில ஆளுநர் அதனைச் சட்டமன்றத்தின் முன் வைக்க வேண்டும்.
  • இவர் பாராளுமன்றத்திற்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தேசிய ஆணையம்

  • தாழ்த்தப்பட்டோர் மறறும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தை 89வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2003 இரண்டு தனித்தனி ஆணையமாகப் பிரித்தது.
  • தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் சரத்து 338ன் கீழ் அமைக்கப்பட்டது.
  • இது 2004 முதல் இயங்கத் துவங்கியது. இதில் சேர்மன் ஒரு துணை சேர்மன் மற்றும் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள்.
  • இவர்கள் குடியரசுத் தலைவரால் தன் கையொப்பமிட்ட மற்றும் முத்திரையிட்ட ஆணையால் நியமிக்கப்படுகின்றனர்.
  • இவர்களது பணிக்காலம் மற்றும் நிபந்தனைகள் குடியரசுத்தலைவரால் முடிவு செய்யப்படும்.

செயற்குழுவின் அறிக்கை

  • செயற்குழு ஆண்டிற்கொரு முறையோ அல்லது தேவைப்படும் போதோ குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது.
  • அனைத்து அறிக்கைகளையும் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கிறார். அதனுடன் அந்த செயற்குழுவின் பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அதில் அந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதற்கான காரணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய அரசு தலைமை வழக்குரைஞர்
சரத்து 76

  • உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக அமர்த்தப்படுவதற்கு தகுதியுடைய ஒருவரை இந்திய அரசின் தலைமை வழக்குரைஞராக குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
  • அவர் குடியரசுத் தலைவர் விரும்பும் வரையில் பதவி வகிப்பார். இருந்தபோதிலும் மரபுப்படி அரசாங்கம் மாறும்பொழுது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விடுவார்.
  • அவரது ஊதியம் குடியரசுத்தலைவரால் நிர்ணயிக்கப்படும்.
  • இவரே இந்தியாவின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார்.
  • இவருக்கு துணையாக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்னும் சட்ட அதிகாரிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவர்.

கடமைகள்

  • குடியரசுத் தலைவரால் குறிப்பு அனுப்பப்படும் சட்ட வினாக்களில் இந்திய அரசுக்கு அறிவுரை வழங்குதல்.
  • அரசியலமைப்பு மற்றும் பிற சட்டங்களின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலகப் பணிகளை ஆற்றுதல்.
  • இந்திய அரசாங்கம் சம்மந்தப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் அரசு சார்பில் ஆஜராகுதல்.

உரிமைகள்

  • இந்திய எல்லைக்குள் உள்ள எந்த நீதிமன்றத்திலும் பார்வையாளாராக இருத்தல்.
  • பாராளுமன்றத்தின் எந்த ஒரு அவையிலும் பேசவோ அல்லது நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவோ உரிமை பெற்றவர் (ஓட்டுரிமை கிடையாது).
    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சிறப்பு உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் பெற உரிமையுண்டு.

சரத்து 165

  • உயர் நீதிமன்ற நீதிபதியாவதற்கு தகுதி பெற்றுள்ள ஒருவரை, மாநில ஆளுநர், மாநில அரசின் முதன்மை வழக்குரைஞராக நியமிப்பார்.
  • அவர் ஆளுநர் விரும்பும் வரையில் பதவி வகிப்பார். இருந்த போதிலும் மரபுப்படி அரசாங்கம் மாறும்பொழுது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விடுவார்.
  • இவரே மாநிலத்தின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார்.

கடமைகள்

  • ஆளுநரால் குறிப்பு அனுப்பப்படும் சட்ட வினாக்களில் மாநில அரசுக்கு அறிவுரை வழங்குதல்.
  • அரசியலமைப்பு மற்றும் பிற சட்டங்களின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலகப் பணிகளை ஆற்றுதல்.
  • மாநில அரசாங்கம் சம்மந்தப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் அரசு சார்பில் ஆஜராகுதல்.

 

 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY