மாநில அரசுத் தலைமை வழக்கறிஞர். ( Advocate - General )
மாநில அரசுத் தலைமை வழக்கறிஞர். ( Advocate - General )
மாநில அரசாங்கத்திற்கு சட்டம் சம்பந்தமான விஷயங்களில் ஆலோசனை வழங்கவும் , சட்டம் சம்பந்தமாக இடப்படும் பணிகளைச் செய்யவும் மாநில அரசு தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்கிறது .
( சரத்து 165 ) இவர் மாநிலத்தின் உயர்ந்த சட்ட அலுவர் ஆவார் .
தகுதிகள்
நியமிக்கப்படுபவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் . அதாவது இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் நீதிப் பணியில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பத்து ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் .
பதவிகாலம்
மாநில அரசு தலைமை வழக்கறிஞர்கள் பதவிக்காலம் , பதவி நீக்கம் குறித்து அரசியலமைப்பு ஏதுவும் குறிப்பிட வில்லை . ஆளுநர் விரும்பும் வரை அவர் பதவி வகிக்கலாம் . எனவே எந்நேரத்திலும் அவர் விலக்கப்படலாம் .
மேலும் பதவி விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அளிப்பதன் மூலம் ராஜினாமா செய்யலாம் . ஆட்சி மாறியவுடன் தலைமை வழக்கறிஞர் பதவி விலகுவது ஒரு மரபாகும் .
கடமைகளும் , பணிகளும் : மாநில ஆளுநரால் ஒப்படைக்கப்படும் சட்ட விஷயங்களில் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் . மேலும் , சட்டத் தன்மை வாய்ந்த பிற கடமைகளைச் செய்தல் வேண்டும் . இவை மட்டுமல்லாது அரசியலமைப் -பாலோ அல்லது பிற சட்டங்களாலோ அவருக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை ஆற்ற வேண்டும் .
உரிமைகள் : இவர் தனது வாதத்தினை மாநில எல்லைக்குள் உள்ள எந்த எடுத்துரைக்க நீதிமன்றத்திலும் உரிமை படைத்தவர் ஆவார் . சட்டமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அதன் குழுக்களிலும் கலந்து கொண்டு பேசுகிற உரிமையும் அவருக்கு உண்டு . எனினும் தீர்மானங்களின் மீது அவருக்கு உரிமை கிடையாது . சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சிறப்புரிமைகள் மற்றும் பாதுகாப்புகளையும் பெற உரிமை உடையவராவார்.
Leave Comments
Post a Comment