Ads Right Header

Indian Polity Important Notes...

 


அரசியல் சாசனத்தின் எந்தப் பிரிவு நாகலாந்து மாநிலத்திற்கு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது ?

a) பிரிவு 371-A★

b) பிரிவு 371-B

c) பிரிவு 371-C

d) பிரிவு 371-D


இந்தியாவின் முதல் தீவு மாவட்டம் எது?

a) மஜுலி★

b) அந்தமான்

c) மாலத் தீவு

d) டாமன் மற்றும் டையூ


அண்மையில், ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அவை :

a) ஜம்மு & காஷ்மீர் மாநிலமாகவும், லடாக் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவும்.

b) லடாக் மாநிலமாகவும், ஜம்மு & காஷ்மீர் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவும்.

c) ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டும் மாநிலங்களாகவும்.

d) ★ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளாகவும்


மேகாலாயா எந்த மாநிலத்தினுள் சுயாட்சி மாநிலமாக உருவாக்கப்பட்டது?

a) மிசோரம்

b) மணிப்பூர்

c) அஸ்ஸாம்★

d) அருணாச்சல பிரதேசம்


கோவா, டாமன் மற்றும் டையு மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலமாக கோவா மாநிலமாக ஆன ஆண்டு

a) 1986

b) 1987★

c) 1988

d) 1989


இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் பெயர் யாது?

(A) இந்தியன் மற்றும் இந்துஸ்தான்

(B) இந்தியா மற்றும் பாரதம்★

(C) பாரதம்

(D) இந்தியா, பாரதம், இந்துஸ்தான்


பின்வருவனவற்றுள் எது 26 ஜனவரி 1950 அன்று படி இந்திய அரசியலமைப்பு முகவுரையில் சரியானது?

a) இறைமை, சமயசார்பின்மை குடியரசு

b) இறைமை, சமதர்மம், சமயசார்பின்மை

c) இறைமை, சமயசார்பின்மை , சமதர்மம், மக்களாட்சி, குடியரசு

d) இறைமை, மக்களாட்சி, குடியரசு★


முகவுரையில் சமதர்ம, மதசார்பற்ற மற்றும் ஒற்றுமை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது

a) 41வது அரசியலமைப்பு திருத்த சட்டம்

b) 42வது அரசியலமைப்பு திருத்த சட்டம்★

c) 43வது அரசியலமைப்பு திருத்த சட்டம்

d) 44வது அரசியலமைப்பு திருத்த சட்டம்


எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் “சமதர்ம மதச்சார்பின்மை” முகப்புரையில் சேர்க்கப்பட்டது

a) 41வது சட்டத்திருத்தம்

b) 42வது சட்டத்திருத்தம்★

c) 43வது சட்டத்திருத்தம்

d) 44வது சட்டத்திருத்தம்


இந்திய அரசியலமைப்பில் சமய சார்பற்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? 
(1) அரசு அனைத்து மதங்களை காக்கின்றது 
(2) எந்த அரசும் எந்த மதத்தையும் தனியாக உயர்த்தக்கூடாது 
(3) சமய சார்பற்ற என்ற சொல் அரசியலமைப்பின் அடிப்படை ஆகும் 
(4) அரசு அனைத்து மதங்களையும் புறக்கணிக்கிறது

a) (1), (2) சரியானது - (3), (4) தவறானது

b) (2), (3) சரியானது - (1), (4) தவறானது

c) (1), (2), (3) சரியானது (4) மட்டும் தவறானது★

d) (4) மட்டும் சரியானது (1), (2), (3) தவறானது


பின்வரும் எந்த கூற்று என்.ஏ. பல்கிவாலாவோடு தொடர்புடையது?

a) முகவுரை அரசியலமைப்பின் “அடையாள அட்டை"

b) முகவுரை நமது இறைமை பெற்ற ஜனநாயக குடியரசின் “ஜாதகம்”★

c) முகவுரை இந்திய அரசியலமைப்பின் மிக முக்கிய பகுதி

d) முகவுரை அரசியலமைப்பின் “திறவு கோல்”


இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் பயன்படுத்தப்படும் 'சகோதரத்துவம்' என்ற சொல் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும். 
(a) அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது 
(b) அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும் 
(c) அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது 

(A) (a) மற்றும் (c)★

(B) (b) மட்டும்

(C) (a) மற்றும் (b)

(D) (c) மட்டும்


கீழ்கண்டவற்றை பொருத்துக 
முகப்புரையின் பதம் கூறியவர் 
(a) அரசியல் ஜாதகம் - 1. சர் ஐவர் ஜென்னிங் 
(b) அரசியலமைப்பின் சாவி - 2. தாகுர்தாஸ் பர்கவ்
(c) அரசியலமைப்பின் ஆன்மா - 3. பி. ஆர். அம்பேத்கர் 
(d) வழக்கறிஞர்களின் சொர்க்கம் - 4. எர்னஸ்ட் பார்க்கர் 

(a) (b) (c) (d)

(A) 1 2 3 4

(B) 2 1 4 5

(C) 4 5 2 1★

(D) 1 4 3 2


இந்திய அரசியலமைப்பின் பதினோராவது பகுதி எதனை பற்றி விவரிக்கிறது?

a) மத்திய-மாநில உறவுகள்★

b) மத்திய அரசாங்கம்

c) மாநில அரசாங்கம்

d) தீர்ப்பாயம்



கீழ்க்கண்டவற்றில் இந்திய அரசியலமைப்பின் 11வது அட்டவணையில் இல்லாத சரத்து எது?

a) சமூகக் காடுகள்

b) உடல் நலம் மற்றும் சுகாதாரம்

c) பொது விநியோக முறை

d) விலங்கு வதைபடுதலைத் தடை செய்தல்★


அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கீழ்க்காணும் எந்த வழக்கில் வழங்கப்பட்டது?

a) இந்திரா ஷானே வழக்கு

b) எஸ். ஆர். பொம்மை வழக்கு★

c) மினர்வா மில் வழக்கு

d) கேசவானந்த பாரதி வழக்கு


கீழ்க்கண்டவற்றில் 21வது அரசியலமைப்புச் சட்டதிருத்தம், 1967-ன் மூலமாக எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழி எது?

a) போடோ

b) நேபாளி

c) கொங்கனி

d) சிந்தி★


பின்வரும் அட்டவணைகளில் மொழிகள் பற்றிய அட்டவணை எது?

a) எட்டாவது அட்டவணை★

b) பதினோராவது அட்டவணை

c) நான்காவது அட்டவணை

d) ஆறாவது அட்டவணை


இந்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் யாருக்கு பொறுப்புடையவர் ?

a) குடியரசுத் தலைவர்

b) பிரதம அமைச்சர்

c) உச்ச நீதிமன்றம்

d) பாராளுமன்றம்★


1955ம் ஆண்டு அலுவல் மொழி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படவர் யார்?

a) கோபிந்த் பல்லப் பந்த்

b) B.G. கெர்★

c) M.P. ஜெயின்

d) V.S. மலிமத்


கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது சரியானது இல்லை

a) கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் ஒவ்வொரு நிதி ஆண்டும் குடியரசு தலைவரிடமும் மாநில ஆளுநர்களிடமும் தணிக்கை அறிக்கை அளிக்க வேண்டும்

b) தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

c) மாநில சட்ட பேரவைகளில் அறிக்கை தாக்கல் செய்ய தேவையில்லை★

d) கணக்கு மற்றும் தணிக்கை துறைத் தலைவரின் சம்பளம் மற்றும் இதர படிகள் இந்திய தொகுப்பு நிதியத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.


இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஷரத்து 370 எதனைப் பற்றி குறிப்பிடுகிறது?

a) தேர்தல்

b) அவசர நிலை பிரகடனம்

c) ஜம்மு காஷ்மீரில் தன்னாட்சி★

d) மேற்கூறிய எதுவுமில்லை



நிதிபுனராய்வின் முக்கியத்துவத்தை நடைமுறைப்படுத்திய நாடு

a) இங்கிலாந்து

b) அமெரிக்கா★

c) ஜெர்மனி

d) ரஷ்யா



இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?

(A) 7வது அட்டவணை

(B) 6வது அட்டவணை

(C) 10வது அட்டவணை

(D) 11வது அட்டடவணை★


எந்த சட்டம் மத்திய அரசாங்கத்தில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்தியது?

A) இந்திய கவுன்சில் சட்டம் 1861

B) இந்திய கவுன்சில் சட்டம் 1892

C) இந்திய அரசாங்க சட்டம் 1935★

D) சுதந்திர சட்டம் 1947


ரஷ்யாவிலும், சீனாவிலும் சமதர்ம அரசு உருவாக ___________ யின் அறிவுரைகளே காரணமாகும்.

A) J.S. மில்

B) J.A. சும்பீட்டர்

C) கார்ல் மார்க்ஸ்★

D) ஆர்தர் லூயிஸ்


சமுதாய ஒப்பந்த கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்

a) மார்கன்

b) ரூஸோ★

c) சர் ஹென்றி மெயின்

d) ஆடம்ஸ்மித்


கீழ்கண்டவற்றில் எது இந்திய பாராளுமன்ற அரசாங்கத்தின் சிறப்பு அம்சம் இல்லை?

a) பெரும்பான்மை ஆட்சி

b) கூட்டுப் பொறுப்பு

c) அரசியல் பன்முகத்தன்மை★

d) ரகசியம் பாதுகாத்தல்


“இந்திய அரசியலமைப்பு, முதல் மற்றும் முதன்மையாக, ஒரு சமூக ஆவணமாகும்” எனக் கூறியவர் யார்?

a) கிரன்வில் ஆஸ்டின்★

b) பைலி

c) மோதிலால் நேரு

d) மேற்கூறிய எதுவுமில்லை


இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது

a) 26 நவம்பர் 1949★

b) 26 ஜூலை 1949

c) 26 மே 1949

d) 26 ஜூன் 1949


இந்திய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன?

a) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள்★

b) 2 ஆண்டுகள், 9 மாதங்கள், 15 நாட்கள்

c) 2 ஆண்டுகள், 8 மாதங்கள். 10 நாட்கள்

d) 2 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள்


மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்திய சட்டம் எது?

a) இந்திய கவுன்சில் சட்டம் 1892

b) இந்திய கவுன்சில் சட்டம் 1861

c) இந்திய கவுன்சில் சட்டம் 1909

d) இந்திய அரசுச் சட்டம் 1919★


நமக்கு ஏன் அரசியலமைப்புச் சட்டம் என்ற ஒன்று தேவைப்படுகிறது ? 
(i) நவீன அரசின் அதிகார வரம்புகளை கட்டுக்குள் வைக்க. 
(ii) ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராக 
(iii) பெரும்பான்மைவாதத்தின் கொடுங்கோன்மையைத் தடுக்க

a) (i) மற்றும் (ii) மட்டும்

b) (ii) மட்டும்

c) (i) மற்றும் (iii) மட்டும்★

d) (iii) மட்டும்.












































Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY