Group 4 VAO General Tamil Model Test 2..
Group 4 VAO General Tamil Model Test
Question 1
கடற்பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக.
a) விளைந்து முதிர்ந்தவிழுமுத்து பட்டினப்பாலை
b) பொன்னுக்கு ஈடாக மிளகுஏற்றுமதி புறநானூறு
c) காற்றின்போக்கைஅறிந்து கலம் செலுத்தினர் -மதுரைக் காஞ்சி
d) கட்டுத்தறியில் கட்டியயானைஅசைவது போல் நாவாய் அசைந்தது -அகநானூறு
A
4 3 2 1
B
3 4 2 1
C
1 2 3 4
D
3 4 1 2
Question 2
அம்மானை'பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று.
அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு 'அம்மானை வரி' என்பது பெயர் .
iii. பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது 'பந்து விளையாடல்’ ஆகும்.
அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்.
A
i மற்றும் iii
B
ii மற்றும் i
C
iii மற்றும் iv
D
iv மற்றும் i
Question 3
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
A
சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர்.
B
தமிழ் மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள் ஆகும்.
C
ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்.
D
பராபரக் கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை.
Question 4
பொருந்தாஒன்றைத் தேர்க:
கண்ணதாசன் பாடல்கள்
A
முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ’
B
'சின்னப் பயலே, சின்னப்பயலே சேதி கேளடா'
C
ஆடி அடங்கும் வாழ்க்கையடா’
D
'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்'
Question 5
பட்டியல்ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
மாணிக்கவாசகர் திருத்தொண்டத்தொகை
ஆண்டாள் தாண்டகவேந்தர்
சுந்தரர் திருக்கோவை
திருநாவுக்கரசர் நாச்சியார் திருமொழி
A
3 4 1 2
B
2 3 4 1
C
1 4 3 2
D
4 3 1 2
Question 6
"மரபுக் கவிதையில்வேர் பார்த்தவர்
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர் யார்?
A
முடியரசன்
B
வாணிதாசன்
C
சுரதா
D
அப்துல் ரகுமான்
Question 7
பட்டியல்I ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
புனைப்பெயர் இயற்பெயர்
புதுமைப்பித்தன் செகதீசன்
ஈரோடுதமிழன்பன் எத்திராஜ்
வாணிதாசன் முத்தையா
கண்ணதாசன் சொ.விருத்தாசலம்
A
2 3 4 1
B
4 1 2 3
C
3 4 1 2
D
4 3 2 1
Question 8
பொருந்தாதஇணையினைக் கண்டறி.
திணை தொழில்
A
முல்லை - வரகு விதைத்தல், களை பறித்தல்
B
பாலை – நிரை கவர்தல், சூரையாடல்
C
குறிஞ்சி - தேனெடுத்தல், கிழங்கழ்தல்
D
மருதம் - மீன்பிடித்தல், உப்பு விற்றல்
Question 9
அகரவரிசைப்படிசரியாக அமைந்த சொல் வரிசையைக் குறிப்பிடுக.
A
அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்
B
ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை
C
கண், கண்டம், கண்டு, கண்ணி
D
தகடு, தகழி, தகவு, தகர்
Question 10
கீழேகாணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க
A
பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது
B
நகை,அழுகை,உவகை,பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல்கள் பல்சுவைப் பாடல்களாம்.
C
தேர், யானை,குதிரை,காலாள் படைகளின் வலிமை, வீரச்சிறப்புகளைப் போற்றுவது புறப்பாடகள்.
D
நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, ' காவடிச் சிந்து திகழ்கிறது
Question 11
கீழ்க்காணும் வாக்கியங்களில்எவை சரியானவை?
எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்.
நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று.
அவை எல்லாம் மாதவியின் நூல்கள்.
A
i மற்றும் iii
B
ii மற்றும் iv
C
iii மற்றும் iv
D
ii மற்றும் iii
Question 12
பிறமொழிச்கு சொல்லற்ற தொடர் எது?
A
அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது.
B
அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது.
C
அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது.
D
அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது
Question 13
சரியான சொற்றொடரைத்தேர்க
A
தாழ்வு உயர்வு கருதல் பிறப்பில் தவறு
B
பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு
C
பிறப்பில் உயர்வு கருதல் தாழ்வு தவறு
D
உயர்வு கருதல் பிறப்பில் தாழ்வு தவறு
Question 14
பொருந்தாத இணையைக் கண்டறி
A
பொதுவுடைமை - புதுமைப்பித்தன்
B
தனித்தமிழ் - மறைமலை அடிகள்
C
பேச்சுக்கலை - பேரறிஞர் அண்ணா
D
புரட்சி – பாரதிதாசன்
Question 15
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப்பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத்தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) வாலை 1. தயிர்
(b) உளை 2. சுரபுன்னை மரம்
(c) விளை 3. இளம்பெண்
(d) வழை 4. பிடரி மயிர்
A
4 3 2 1
B
2 1 3 4
C
1 2 4 3
D
3 4 1 2
Question 16
திருக்கோட்டியூர்நம்பியால் 'எம்பெருமானார்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
நாதமுனிகள்
B
இராமாநுசர்
C
திருவரங்கத்தமுதனார்
D
மணவாள மாமுனிகள்
Question 17
பொருத்துக
(a) ஆய்தக் குறுக்கம் 1. வெளவால்
(b) ஐகாரக் குறுக்கம் 2. மருண்ம்
(c) ஒளகாரக் குறுக்கம் 3. கஃறீது
(d) மகரக் குறுக்கம் 4. கடலை
A
1 4 3 2
B
2 1 4 3
C
4 3 2 1
D
3 4 1 2
Question 18
கீழேகாண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
A
தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்’ என்று புகழப்பட்டவர் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்.
B
‘திரைக்கவித்திலகம் அ.மருதகாசி பாடல்கள்’ என்னும் தலைப்பில் அ. மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளி வந்துள்ளது.
C
நீதிநெறி விளக்கம்,கந்தர்கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்.
D
காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கிய நாதன், கமகப்பிரியா எனப் புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு.
Question 19
பொருத்துக.
நூல் ஆசிரியர்
(a) சிறுபாணாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார்
(b) திருமுருகாற்றுப்படை 2. நல்லூர் நத்தத்தனார்
(c) பொருநராற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங்கண்ணனார்
(d) பெரும்பாணாற்றுப்படை 4. நக்கீரர்
A
4 3 2 1
B
2 4 1 3
C
3 1 4 2
D
1 2 3 4
Question 20
கீழ்க்காணும்கருத்துகளில் தவறானதைச் சுட்டி காண்பிக்கவும்.
A
மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு.
B
ஆசிரியரை ‘ஐயர்’ என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு.
C
அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு.
D
திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாட்டு மரபு
Question 21
"தமிழ்வடமொழியின் மகனன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி" என்று கூறியவர் யார்?
A
ஹீராஸ் பாதிரியார்
B
குமரில பட்டர்
C
கால்டுவெல்
D
ஜி.யு. போப்
Question 22
கீழ்க்கண்டஇணைகளை ஆராய்க
காணி - 1/80
அரைக் காணி - 1/16
முக்காணி - 3/80
மாகாணி - 1/160
A
அனைத்தும் சரி
B
1, 3, 4 சரி
C
2, 3, 4 சரி
D
1, 3 சரி
Question 23
"காலம் எனும்புயல் சீறி எதிர்க்கக்கலங்கும் ஒரு மனிதன் ஓலமிடக் கரம் நீட்டிய போல்இடர் எய்தி உழன்றனையே!” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
வீராயி
B
மாதவி காவியம்
C
தமிழர் சமுதாயம்
D
தமிழ்ஒளியின் கவிதைகள்
Question 24
பகுபத உறுப்புகளாகபிரித்து எழுதுக – நிறுத்தல்
A
நிறுத்து + அல்
B
நிறு + த் + தல்
C
நிறு + த் + த் + அல்
D
நிறு + த் + த் + தல்
Question 25
கூரிய கொம்புகளும் சிலிர்த்ததிமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் எங்குள்ளது?
A
நீலகிரி – கரிக்கையூர்
B
மதுரை -கல்லூத்துப்பட்டி
C
தேனி – சித்திரக்கல் புடவி
D
சேலம் – கரிக்கையூர்
Question 26
" பட்டிமண்டபம்ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே " என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
திருவாசகம்
D
கம்பராமாயணம்
Question 27
பொருத்துக.
(a) ஜியோவான்னி காசில்லி 1.குறியீடுகளை மின்னாற்றவில் அச்சிடுதல்
(b) அலெக்சாண்டர் பெயின் 2. பான்டெலிகிராப்
(c) ஹாங்க் மாக்னஸ்கி 3. காமா ஃபேக்ஸ்
(d) செஸ்டர் கார்ல்சன் 4. ஒளிப்படி இயந்திரம்
A
1 2 3 4
B
2 4 1 3
C
2 1 4 3
D
2 1 3 4
Question 28
SITARA என்பதன் முழு விரிவாக்கம் என்ன ?
A
software for trajectory analysis
B
software for integrated trajectory analysis with real time application
C
software for instant track with real time application
D
software for instant trajectory with real time application
Question 29
இலக்கணக் குறிப்பு தருக . ஆக்கல் , பொன்னேபோல்
A
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று , உவம உருபு
B
தொழில்பெயர் , உவமைத்தொகை
C
தொழிற்பெயர், உவம உருபு
D
பெயரெச்சம் , உவம உருபு
Question 30
இந்தியாவில்குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார் ?
A
சாவித்திரிபாய் பூலே
B
முத்துசுலெட்சுமி
C
பெரியார்
D
ஹண்டர்
Question 31
கீழ்க்கண்டபாடல் வரிகளை ஆராய்க .
சுள்ளியம் பேர்யாற்றுவெண்னுரை கலங்க – அகநானூறு
நன்கலவெறுக்கை துஞ்சும் பந்தர் – பதிற்றுப்பத்து
மாலைத் திங்கள்வழியோன் ஏறினான் – சிலம்பு
பொன்னொடுவந்து கறியொடு பெயரும் – அகநானூறு
A
அனைத்தும் தவறு
B
1 , 3, 4 சரி
C
3, 4 சரி
D
அனைத்தும் சரி
Question 32
சரியான பொருளை தேர்ந்தெடு அணங்கு , புழை
A
ஒழுங்கு, சாளரம்
B
தெய்வம், மதில்
C
தெய்வம், சாளரம்
D
மதில், சாளரம்
Question 33
பல்லவர்கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
இக்காலத்தில்சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
மாமல்லபுரச்சிற்பங்கள் பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று .
காஞ்சிவைகுந்த பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது .
பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் உள்ளன
A
அனைத்தும் சரி
B
1 , 3 தவறு
C
3 தவறு
D
அனைத்தும் தவறு
Question 34
" பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்
தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்"
இதில் குறிப்பிடப்படும் முக்குழல் எவற்றால் ஆனது?
கொன்றை 2. மூங்கில் 3. வேம்பு 4. ஆம்பல்
A
1, 2
B
1, 2, 3
C
1, 2, 4
D
2, 3, 4
Question 35
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுடன் இருந்தோர்க்கு
அரும்புணர்வு இன்மென "
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
பெரும்பாணாற்றுப்படை
B
சிறுபாணாற்றுப்படை
C
மலைபடுகடாம்
D
நற்றிணை
Question 36
காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றழைக்கும் நாளோதை – காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக்கோக்கிள்ளி நாடு "
இப்பாடலில் பயின்று வரும் அணி
A
உவமையணி
B
எடுத்துக்காட்டுவமையணி
C
தற்குறிப்பேற்ற அணி
D
பிறிது மொழிதல் அணி
Question 37
தவறான இணையைத் தேர்ந்தெடு.
நேர் நேர் நேர் – தேமாங்காய்
நேர் நிரை நேர் – புளிமாங்காய்
நிரை நிரை நேர் – கருவிளங்காய்
நிரை நேர் நேர்-கூவிளங்காய்
A
1, 2 தவறு
B
1 , 3 தவறு
C
2, 3 தவறு
D
எதுவுமில்லை
Question 38
எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய்நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்" என்று கூறியவர் யார்?
A
கோர்டன்
B
தெறன்ஸ்
C
ஆல்பர்ட் சுவைட்சர்
D
செனக்கா
Question 39
உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது தவறானது?
A
1995 – தஞ்சாவூர்
B
1966 – கோலாலம்பூர்
C
1968 – சென்னை
D
1987 – மொரீசியசு
Question 40
லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை _____.
A
ஜோயிதா மோண்டல் மாஹி
B
பிரித்திகா யாஷினி
C
தாரிகா பானு
D
நர்த்தகி நடராஜ்
Question 41
சரியான இணையைத் தேர்ந்தெடு.
, / - கால்புள்ளியைச் சேர்க்கவும்
; / - முக்காற்புள்ளியைச் சேர்க்கவும்
: / - அரைப்புள்ளியைச் சேர்க்கவும்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 42
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A
நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்
B
இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்
C
இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.
D
இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.
Question 43
கீழ்க்கண்டவற்றுள்பட்டினத்தார் பாடிய வரிகள் எது?
A
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
B
ஒன்றென்றிரு , தெய்வம் உண்டென்றிரு
C
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
D
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
Question 44
கீழ்க்கண்டவற்றுள் தனிமையையும் அமைதியையும் உட்கருத்தாக கொண்ட ஹைக்கூ எது?
A
பட்டுப்போன மரக்கிளை, அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்; இலையுதிர் கால மாலை
B
விழுந்த மலர் கிளைக்குத் திரும்புகிறது அடடா… வண்ணத்துப்பூச்சி
C
பெட்டிக்கு வந்த பின் எல்லாக் காய்களும் சமம் தான் சதுரங்கக் காய்கள்
D
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது
Question 45
"முன்னம்ஓர் அவுணன் செங்கை நீர்ஏற்று
மூவுலகமும் உடன் கவர்ந்தோன் " இதில் அடிக்கோடிட்ட சொல் யாரை குறிக்கிறது?
A
கன்னன்
B
கண்ணன்
C
நான்முகன்
D
மாவலிச்சக்ரவர்த்தி
Question 46
சரியானபுணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு – சிற்றூர்
A
சிறுமை+ஊர் சிறு+ஊர் சிற்று + ஊர் சிற்ற் + ஊர் சிற்றூர்
B
சிறுமை + ஊர் சிறு + ஊர் சிற்ற் + ஊர் சிற்றூர்
C
சிறு + ஊர் சிற்று + ஊர் சிற்ற் + ஊர் சிற்றூர்
D
சிறுமை + ஊர் சிறு + ஊர் சிற்று + ஊர் சிற்றூர்
Question 47
''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர் மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் " என்னும் பதிற்றுப்பத்து பாடல் அமைந்துள்ள பாவகை
A
வெண்பா
B
நேரிசை ஆசிரியப்பா
C
வஞ்சிப்பா
D
கலிப்பா
Question 48
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' பட்டம் பெற்ற ஆண்டு
A
1890
B
1980
C
1981
D
1891
Question 49
கற்றளிஎன்னும் அமைப்பை வடிவமைத்தது யார் மற்றும் எக்காலத்தில் வடிவமைத்தார்?
A
இரண்டாம் மகேந்திரவர்மன் – 7ம் நூற்றாண்டு
B
இரண்டாம் நரசிம்மவர்மன் -7ம் நூற்றாண்டு
C
இரண்டாம் மகேந்திரவர்மன் – 9 ம் நூற்றாண்டு
D
இரண்டாம் நரசிம்மவர்மன் - 9ம் நூற்றாண்டு
Question 50
கீழ்க்கண்டவற்றில் தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் எவை?
1. நைவளம் 2 . தோடி பியந்தை 4 . சாளரபாணி
5.ஆனந்த பைரவி
A
அனைத்தும்
B
1, 2, 3
C
4, 5
D
1 , 3, 4
Question 51
திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர் யார்?
A
ஆஸ்கர் தமிழர்
B
சிம்பொனித்தமிழர்
C
பியானோ தமிழர்
D
ஆஸ்கர் தமிழன்
Question 52
ஐக்கியநாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரைத் 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கி சிறப்பித்த நாள்
A
1937 நவம்பர் 13
B
1970 அக்டோபர் 5
C
1938 நவம்பர் 13
D
1970 ஜூன் 27
Question 53
ஆனந்தரங்கர்எக்காலக்கட்டத்தில் நாட்குறிப்பு எழுதியுள்ளார்
A
06.09.1736 - 06.01.1761
B
06.09.1736 - 06.09.1763
C
06.09.1736 – 11.01.1761
D
06.01.1736 - 11.09.1763
Question 54
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?
A
எல்லா அடிகளும் நான்கு சீர்களை பெற்று வரும்.
B
இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.
C
ஆசிரியத் தளையை தவிர பிற தளைகள் மிகுந்து காணப்படும்.
D
நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வராமல் அமையும்.
Question 55
பொருந்தாததைத் தேர்க.
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை , நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்
ஆனந்தரங்களின் நாட் குறிப்பு18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள் தேவைப்பட்டன .
A
1, 2 தவறு
B
2 , 3 தவறு
C
1 , 3 தவறு
D
2 , 4
Question 56
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
பிரசம், மதுகை
A
தேன், பெருமிதம்
B
பெருமிதம், தேன்.
C
இனிப்பு, கடுஞ்சொல்
D
கடுஞ்சொல், இனிப்பு
Question 57
பாரதிபெண்களுக்காக தமது _____ என்னும் இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்
A
சக்ரவர்த்தினி
B
பாலபாரதி
C
விஜயா
D
சூர்யோதயம்
Question 58
மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது இதை பொறுத்துத்தான் இருக்கிறது" என்று கூறியவர்
A
கால்டுவெல்
B
ஜி. யு.போப்
C
விவேகானந்தர்
D
திரு.வி.க
Question 59
குருதி, உயிர்வளிஆகியவற்றின் மொத்த தேவையில் எவ்வளவு பாகத்தை மூளை அபகரித்துக் கொள்கிறது.
A
1/100 பங்கு
B
1/50 பங்கு
C
1/50 பங்கு
D
1/15 பங்கு
Question 60
நியுரானின்முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர் யார் மற்றும் எந்த ஆண்டு
A
ஆட்டோ டியட்டர்ஸ் – 1856
B
ஆட்டோ டியட்டர்ஸ் – 1865
C
வெர்னிக் – 1856
D
வெர்னிக் – 1865
Question 61
தவறான இணையை தேர்ந்தெடு
A
அக்னிச்சிறகுகள் - அப்துல் கலாம்
B
அறிவியல் தமிழ் -அப்புசாமி
C
கணியை விஞ்சும் மனித மூளை - கா.விசயரத்தினம்
D
வானக் காட்சி -அப்புசாமி
Question 62
"சுடச்சுடரும்பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு "
இக்குறளில் பயின்று வரும் அணி
A
இல்பொருள் உவமை அணி
B
எடுத்துக்காட்டுவமை அணி
C
வேற்றுமை அணி
D
உவமை அணி
Question 63
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி 1.மலை - ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)
வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)
மலா - வல்ஸட் (குஜராத்)
A
அனைத்தும் சரி
B
1, 3 சரி
C
1 , 2 சரி
D
1, 2 தவறு
Question 64
The four hundred songs of war and wisdom: An anthology of poems from classical Tamil,the purananuru”என்னும் தலைப்பில் புறநானூற்றை மொழிப் பெயர்த்தவர்
A
ஜி.யு.போப்
B
ஜார்ஜ் எல்.ஹார்ட்
C
ஆறுமுக நாவலர்
D
உ.வே.சா
Question 65
கூற்று : விவசாயத்தில் நெல்லுக்கு ஊடுபயிராக உளுந்து போடப்படுகிறது.
காரணம்: அதன் வேர் முடிச்சுகளில் இருக்கும் பாஸ்பரஸ் நிலத்தின் வளத்தை பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்க செய்யும்.
A
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
B
கூற்று சரி காரணம் தவறு
C
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 66
இலக்கணக் குறிப்புத் தருக .
அகிற்புகை , கொன்றைசூடு
A
7ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை
B
6ம் வேற்றுமைத் தொகை, 7ம் வேற்றுமைத் தொகை
C
6ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை
D
3ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை
Question 67
சரியான இணையைத் தேர்ந்தெடு.
காழ்ப்புணர்ச்சி - ஈரொற்று மெய்ம்மயக்கம்
மொத்தம் - உடனிலை மெய்ம்மயக்கம்
வாழ்பவன் - வேற்று நிலை மெய்ம்மயக்கம்
கப்பம் - ஈரொற்று மெய்ம்மயக்கம்
A
அனைத்தும் சரி
B
1, 3, 4 சரி
C
2, 3, 4 சரி
D
1, 2, 3 சரி
Question 68
"மெய்தான் அரும்பிவிதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் "
என்னும் பாடல் திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் எத்தனையாவது
பாடல் ?
A
முதற் பாடல்
B
இரண்டாவது பாடல்
C
பத்தாவது பாடல்
D
மூன்றாவது பாடல்
Question 69
கரந்தைத்தமிழ்ச் சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றிய ஆண்டு
A
1901
B
1918
C
1919
D
1966
Question 70
வளையல்இச்சொல்லில் ஐகாரம் _____ மாத்திரை குறைந்து ஒலிக்கிறது.
A
1
B
1 ¼
C
¼
D
1 ½
Question 71
ஒருதனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத்தொடர்களுடன் கலந்து வருவது ____ ஆகும்
A
தொடர்நிலைத் தொடர்
B
கலவைத்தொடர்
C
கட்டளைத் தொடர்
D
தன்வினைத் தொடர்
Question 72
"மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும்
வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும்நான் சகித்திட மாட்டேன்"
என்று பாடியவர் யார்?
A
தாயுமானவர்
B
திருமூலர்
C
மாணிக்கவாசகர்
D
வள்ளலார்
Question 73
'நீ' எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது____ என திரியும்.
A
நம்
B
தன்
C
நும்
D
உன்
Question 74
வீரமாமுனிவருக்குத்தமிழ் கற்பித்தவர் யார்?
A
மீனாட்சி சுந்தரனார்
B
ஆறுமுகநாவலர்
C
சுப்பிரதீபக் கவிராயர்
D
தாயுமானவர்
Question 75
பரிதிமாற் கலைஞர்_____ வடிவில் நாடகவியல் என்னும் நூலை இயற்றினார்.
A
நாடக
B
இலக்கண
C
உரைநடை
D
செய்யுள்
Question 76
திரிகடுகத்தின்ஆசிரியரான நல்லாதனாரை "செருஅடுதோள் நல்லாதன்" என குறிப்பிட்டு போர் வீரனாக இருந்திருக்கலாம் என்று கூறுவது எது?
A
துறவறவியல்
B
இல்லறவியல்
C
பாயிறவியல்
D
ஊழியல்
Question 77
கருவி, கருத்தா –இவ்விரண்டையும் உணர்த்தும் வேற்றுமை
A
இரண்டாம் வேற்றுமை
B
மூன்றாம் வேற்றுமை
C
நான்காம் வேற்றுமை
D
ஆறாம் வேற்றுமை
Question 78
பால்பற்றிச் சொல்லாவிடுதலும்“ இவ்வடியில் பால்பற்றி என்பதன் பொருள்
A
பகுப்புப் பற்றி
B
இனம் பற்ற
C
ஒரு பக்கச் சார்பு பற்றி
D
நெல்லைப் பற்றி
Question 79
'நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்"
இவ்வரிகளை இயற்றிவர் யார்?
A
வள்ளலார்
B
தாயுமானவர்
C
இளங்கோவடிகள்
D
சமண முனிவர்
Question 80
கீழ்க்கண்டவற்றுள்சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் அல்லாதது எது?
A
மஞ்சள் சிட்டு
B
மின்சிட்டு
C
செங்காகம்
D
பனங்காடை
Question 81
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் " இவ்வடிகள் இடம்பெறும் நூல்
A
தொல்காப்பியம்
B
சிலப்பதிகாரம்
C
திருவாசகம்
D
தேவாரம்
Question 82
பிரித்துஎழுதுக – பாகற்காய்
A
பாகு + அற்று + காய்
B
பாகு + அறு + காய்
C
பாக + அற்று + காய்
D
பாகு + அல் + காய்
Question 83
நாமநீர்வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான்" இவ்வரிகளை இயற்றியவர் யார்?
A
சீத்தலை சாத்தனார்
B
கம்பர்
C
திருவள்ளுவர்
D
இளங்கோவடிகள்
Question 84
கொங்கு+ அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
A
கொங்குஅலர்
B
கொங்அலர்
C
கொங்கலர்
D
கொங்குலர்
Question 85
மொழி முதல்எழுத்துகள் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?
A
க, ச, த, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
B
ங - வரிசையில் எந்த ஒரு எழுத்தும் சொல்லின் முதலில் வராது.
C
ஞ வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
D
ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
Question 86
சர்.சி. வி. இராமன் தமது "இராமன் விளைவு" என்னும் கண்டுபிடிப்பை வெளியிட்ட ஆண்டு
A
1927 பிப்ரவரி 27
B
1927 ஜனவரி 27
C
1928 பிப்ரவரி 28
D
1928 ஜனவரி 28
Question 87
இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது " என்று காந்தியடிகளால் குறிப்பிடப்பட்டவர் யார்?
A
மீனாட்சி சுந்தரனார்
B
உ.வே.சா
C
முத்துராமலிங்கர்
D
பாரதியார்
Question 88
வேலுநாச்சியார்சிவகங்கையை மீட்ட ஆண்டு
A
1780
B
1782
C
1784
D
1785
Question 89
"அன்பினில்இன்பம் காண்போம்
அறத்தினில் நேர்மை காண்போம்
துன்புறும் உயிர்கள் கண்டால்
துரிசறு கனிவு காண்போம்"
என்று பாடியவர் யார்?
A
வைரமுத்து
B
வள்ளலார்
C
அ. முத்தரையனார்
D
தாயுமானவர்
Question 90
புத்தரின்வரலாற்றைக் கூறும் நூல் எது?
A
ஜீவஜோதி
B
ஆசிய ஜோதி
C
நவஜோதி
D
ஜீவன ஜோதி
Question 91
தவறானஇணையைத் தேர்ந்தெடு
A
மாண் - பெருமை
B
மான் – புள்ளிமான்
C
கனம் - பாரம்
D
கணம் – அம்பு
Question 92
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது?
1.கலை-கவின் கலைகள் 2. களை – அழகு
3. கழை – மூங்கில்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1, 3 சரி
Question 93
“பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம்
பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்
விருந்து மன்றி விளைவன யாவையே "
என்று பாடியவர் யார்?
A
கபிலர்
B
கம்பர்
C
இளங்கோவடிகள்
D
பாண்டியன் நெடுஞ்செழியன்
Question 94
" என் கடன்பணிசெய்து கிடப்பதே" என்னும் திருவாக்கைத் தந்தவருமஅதன்படியே வாழ்ந்தவரும் யார் ?
A
திருஞானசம்பந்தர்
B
திருநாவுக்கரசர்
C
மாணிக்கவாசகர்
D
திருமூலர்
Question 95
"புருவக் கொடியருகே
பொன்னிமையின் உள்ளே
உருவாகிச் சுழலும்
உள்ளத்தின் முத்திரைகள் "
என்ற வரிகள் யாருடையது?
A
நா.காமராசன்
B
நா.கருணாநிதி
C
சிற்பி
D
முடியரசன்
Question 96
குலசேகரஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் மொத்தம் எத்தனை பாடலகள் உள்ளன?
A
100
B
101
C
105
D
106
Question 97
"பொங்கு சாமரையேந்திப்
புடைபுடை யியக் கர்நின்றிரட்டச்
சிங்க வாசனத் திருந்து
தெளிந்தொளி மண்டில நிழற்றத் ‘’
என்ற வரிகளை பாடியவர் யார்?
A
உமறுப் புலவர்
B
நீலகேசி
C
சீத்தலைச் சாத்தனார்
D
இளங்கோவடிகள்
Question 98
கீழ்க்கண்ட மரபுச் சொற்களில் எது/ எவை தவறு?
பலாப்பிஞ்சு-பலா மூசு
வாழைப் பிஞ்சு– வாழைக்கச்சல்
மாம்பிஞ்சு– மாமூசு
அவரைப்பிஞ்சு- அவரைப் பொட்டு
A
1, 3 தவறு
B
3 மட்டும் தவறு
C
1 மட்டும் தவறு
D
1, 4 தவறு
Question 99
கீழ்க்கண்ட இணைகளில் எது தவறானது(வாக்கியப் பிழைகளும் நீக்கமும்)
A
வண்டிகள் ஓடாது - வண்டிகள் ஓடா
B
அது எல்லாம் - அவை எல்லாம்
C
எனது மகன் - எனக்கு மகன்
D
ஏற்கத்தக்கது அல்ல - ஏற்கத்தக்கது அன்று
Question 100
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் ‘ என்று கூறியவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
அண்ணா
D
திரு.வி.க
Leave Comments
Post a Comment