TNPSC important notes...
தெற்காசிய மண்டல
ஒத்துழைப்பு சங்கம் SAARC
✍இது டிசம்பர் 8, 1985 ல் அமைக்கப்பட்டது.
✍நேபாள் தலைநகரம் காத்மாண்டு இ்தன் தலைமைச் செயலகமாக கொண்டு ஜனவரி 16, 1987ல்
செயல்பட துவங்கியது.
✍ஆரம்பத்தில் வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஏழு நாடுகள் இணைந்தது.
✍ஏப்ரல் 3, 2007க்கு பி்றகு ஆப்கானிஸ்தான் இணைந்தது.
✍முதல் உச்சி மாநாடு
வங்காளதேசம் தலைநகரம் தாக்காவில் 1985ல் நடைபெற்றது.
✍️இரண்டாண்டுகளுக்கு
ஒருமுறை உச்சி மாநாடு நடைபெறும்.
✍20ஆவது உச்சி மாநாடு இலங்கையில் 2018ல் நடைபெற்றது.
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽
🏵குடியரசுத் தலைவர் தொடர்புடைய சட்டபிரிவுகள் 🏵
✍சட்டப்பிரிவு 53 ➖ குடியரசுத் தலைவர் நடுவண் அரசின் நிர்வாக அதிகாரங்களை செயல்படுத்துகிறார்.
✍சட்டப்பிரிவு 77 ➖ நிர்வாக அதிகாரங்கள்
✍சட்டப்பிரிவு 72 ➖ நீதி அதிகாரங்கள்
✍சட்டப்பிரிவு 53(2) ➖ இராணுவ அதிகாரங்கள்
✍சட்டப்பிரிவு 352 ➖ தேசிய நெருக்கடி
✍சட்டப்பிரிவு 356 ➖ மாநில நெருக்கடி
✍சட்டப்பிரிவு 360 ➖ நிதி நெருக்கடி
✍சட்டப்பிரிவு 61 ➖ குடியரசுத் தலைவர் பதவிநீக்கம்
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽
சோழர்களின் நிர்வாக முறை
▪️மத்திய அரசின் நிர்வாகம் அரசரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது.
▪️அரசர் தனது மூத்த மகனைத் தனது வாரிசாகத் தெரிவு செய்தார்.
▪️மூத்தமகன் யுவராஜன் என்றழைக்கப்பட்டார்.
▪️யுவராஜாக்கள் நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக மண்டல ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
▪️நிர்வாக வசதிக்காகப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
▪️ஒவ்வொரு மண்டலமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
▪️ஒவ்வொரு நாட்டுப் பிரிவுக்குள்ளும் பல கூற்றங்கள் (கிராமங்களின் தொகுப்பு) இடம் பெற்றிருந்தன.
▪️கிராமமே நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அலகாகும்.
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽
அந்தமான் நிக்கோபர் தீவுகள்
🏝இத்தீவுக் கூட்டங்கள் கடலடி மலைத்தொடரின் மேல் பகுதியாக அமைந்துள்ளன.
🏝பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளதாலும், அதிக ஈரப்பதம், அதிக வெப்பம் கொண்ட காலநிலை நிலவுவதாலும் அடர்ந்த காடுகள் இங்கு காணப்படுகின்றன.
🏝இத்தீவின் பரப்பளவு 8,249 ச.கி.மீ ஆகும்.
🏝வட பகுதி தீவுகள், அந்தமான் எனவும் தென் பகுதி தீவுகள், நிக்கோபர் எனவும் அழைக்கப்படுகின்றன.
🏝இதன் நிர்வாகத் தலைநகரம் போர்ட் பிளேயர் ஆகும்.
🏝அந்தமான் தீவுக் கூட்டங்களை நிக்கோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து 10° கால்வாய் பிரிக்கிறது.
🏝நிக்கோபரின் தென்கோடி முனை "இந்திரா முனை"
என்று அழைக்கப்படுகிறது.
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽
Leave Comments
Post a Comment