Ads Right Header

Current Affairs Monthly (July 2021)

 


Current Affairs Monthly (July 2021)

July-13

6) பீம்-யு.பி.ஐ. வசதி பூடான் நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. காணொலி காட்சி வாயிலாக 13-7-2021  நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த வசதியை அறிமுகப்படுத்தி வைத்தார்

இந்தியாவின் யு.பி.ஐ. எனப்படும் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளத்தில், மின்னணு பணப்பட்டுவாடா வசதியை தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் வழங்குகிறது. இதற்காக, 'பீம்' என்ற மொபைல் போன் செயலி, 2016 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டது.


5)  முன்னாள்  இந்தியா கிரிக்கெட் வீரர யஷ்பால் சர்மா நொய்டாவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 66. 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் அவர் விளையாடி உள்ளார்.  


4) ‘MSME Honors’ என்ற கௌரவ விருதை TALLY Solutions அறிமுகப்படுத்தி உள்ளது.

MSME நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து 74வது ஐக்கிய நாடுகளின் பொதுக் கூட்டத்தில், ஜூன் 27ஆம் தேதி சர்வதேச MSME தினம் ஆக (International MSMEs Day) கொண்டாட அறிவித்தது. இதன் மூலம் கடந்த 5 வருடங்களாகச் சர்வதேச MSME தினம் (International MSMEs Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

3) ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை புனேவின் சீரம் நிறுவனம் வரும் செப்., மாதம் முதல் உற்பத்தி செய்ய உள்ளது.


2) ஊடக நிறுவனங்களின் பதிப்புரிமை பெற்ற செய்திகளை பயன்படுத்தியதில் கூகுள் நிறுவனம் விதிகளை கடைப்பிடிக்கவில்லை என கூறி பிரான்ஸ் நாட்டின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் இந்திய மதிப்பில் சுமார் 4,400 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


1) நீட்' தேர்வு, தமிழ், ஹிந்தி, உருது, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா மற்றும் பஞ்சாபி என மொத்தம், 13 மொழிகளில் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு வரை, 11 மொழிகளில் மட்டுமே தேர்வு நடந்தது. இம்முறை மலையாளமும், பஞ்சாபியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.


July-12

5) சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு ஓரிரு நாள்களில் அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

உலகின் முதல் பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசியான சைகோவ்-டி, மூன்று தவணைகளாக செலுத்தப்படவுள்ளது.


4) அபுதாபியில் நடைபெற உள்ள சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியில் பங்கேற்பதற்காக பால்கன் பறவைகளுக்கு குட்டி ரேடியோ விமானங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

அமீரகத்தின் தேசிய பறவையான பால்கன் அமீரக மக்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்து உள்ளது.பால்கன் பறவை தமிழில் வல்லூறு என அழைக்கப்படுகிறது. இதற்கு ராஜாளி என்ற பெயரும் உண்டு.


3) நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


2) கர்நாடகாவின், 19வது கவர்னராக, தாவர்சந்த் கெலாட் நேற்று பதவிஏற்றார்.

மத்திய சமூக நலத்துறை அமைச்சராக இருந்த, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தாவர்சந்த் கெலாட், கர்நாடகாவின் புதிய கவர்னராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.


1) சினோவாக், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கலந்து போட்டால் டெல்டா, ஆல்பா ஆகிய உருமாறிய கோவிட் வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்' என, தாய்லாந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது.

July-11

2) உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11 

1) சர்வதேச அரங்கில் 28 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக கோப்பை வென்றது அர்ஜெர்ன்டினா. கோபா அமெரிக்க தொடர் பைனலில் 1-0 என பிரேசிலை வீழ்த்தியது

July-10

3) இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் நகர மேயர் எரிக் கார்சிட்டியை நியமித்து, அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டு உள்ளார்.


2) 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு மானியம், வேலை கிடையாது: உ.பி., புது சட்டம்

உத்தர பிரதேச மாநிலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில அரசு புதிய வரைவு சட்டத்தை வெளியிட்டு உள்ளது.
 


1) விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி கோப்பை வென்றார்.

விம்பிள்டனில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தவிர இது, இவரது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆனது. ஏற்கனவே 2019ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.

July-8

4) மத்திய அமைச்சா்களின் சராசரி வயது 61-இல் இருந்து 58-ஆக குறைந்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றுக் கொண்டனா். இவா்களில் 36 போ் புதியவா்கள்.


3) மத்திய அமைச்சரவையில் புதிதாக 7 பெண் அமைச்சர்கள்  பதவியேற்றுக்கொண்டனர். மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எண்ணிக்கை, 11 ஆக அதிகரித்துள்ளது.


2) வங்கதேசத்தில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. இது 51 செ.மீ., உயரம், 66 செ.மீ., நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது.


1) ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலை தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க, 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

July-5

2) விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4-வது நபர் சிரிஷா

ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக ஸ்ரீஷா உள்ளார்.


1)வானிலையை ஆராய  11 செயற்கை உணர்திறன் கருவிகள் கொண்ட எப்.ஒய்.3இ  செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா   

July-3

காரைக்கால் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து ரங்கசாமியுடன் இலங்கைக்கான துணை தூதர் ஆலோசனை நடத்தினார்.

இலங்கை நாட்டிற்கான துணை தூதர் வெங்கடேஷ்வரன் நேற்று புதுச்சேரி வந்தார். அவர் கவர்னர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருநாட்டு நல்லுறவுகள், அரசியல் பண்பாட்டு தொடர்புகள் குறித்து பேசினார்.

July-2

1) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷலினா டி குமார், அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

July-1

5) போக்குவரத்து வீதிகளை மீறும் வாகனங்களுக்கு நேரடியாக அபராதம் விதிக்கும் முறை சென்னையில் இன்று (August-1) தொடங்கப்பட்டுள்ளது.


4) தேசிய மருத்துவர்கள் தினத்தை (august -1) முன்னிட்டு உயிரை பணயம் வைத்து உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


3) அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க, ஆந்திர அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.


2) அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் 1908-ம் ஆண்டு பிறந்த மார்க்வெஸ் என்கிற 112 வயது நபர் உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.


1) மாணவர் கிரெடிட் கார்டு; ரூ. 10 லட்சம் கல்விக் கடன் பெற வாய்ப்பு: மம்தா அறிமுகம்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY