இந்தியாவின் முக்கிய தினங்கள்...
ஜனவரி - 1
ராணுவத்தில் மருத்துவ பிரிவு தொடங்கிய தினம் ( ( Army Medical Corps Establishment Day )
ராணுவத்தினர் தங்கள் உயிரை பணயம் வைத்து நாட்டையும் , நாட்டு மக்களையும் எதிரி நாடுகளிலிருந்து பாதுகாக்கின்றனர் . அதுதவிர இயற்கைச் சீற்றம் , பேரழிவு போன்ற சமயங்களில் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களைக் காப்பாற்றுகின்றனர் . போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சேவை செய்ய மருத்துவக்குழுக்கள் உள்ளன . ராணுவ முகாமிற்கு அருகில் மருத்துவக்குழு உள்ளது. காயமடைந்தவர்களை குணப்படுத்தவும் , நோய் பரவாமல் தடுக்கவும் , சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பணியிலும் ராணுவ மருத்துவக்குழு செயல்படுகிறது . இந்திய ராணுவத்தில் மருத்துவப் பிரிவு 1764 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று தொடங்கப்பட்டது . அன்று முதல் ராணுவத்தில் மருத்துவப் பிரிவு தொடங்கிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .
டிசம்பர் - 24
தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்
( National Consumer's Right Day )
நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் இந்தியாவில் டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது . 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ( Consumer Protection Act ) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது . சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும் , நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமே இந்த சட்டம் உருவாக்கப்பட்டது . இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக , சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடை செய்கிறது . எந்த பொருள் வாங்கினாலும் அதிகபட்ச சில்லறை விலையை பரிசோதித்து வாங்குவதோடு , ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும் . அப்போதுதான் ஏதாவது பிரச்சினை என்றால் உரிமையோடு போராட முடியும் .
டிசம்பர் - 27
முதன் முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் ( The morning song of India )
இந்தியாவின் தேசிய கீதமான ஜன .. கன .. மன என்ற பாடலை ரவீந்திரநாத் தாகூர் எழுதினார் . முதன்முதலாக 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது ரவீந்திரநாத் தாகூரே கம்பீரமாகப் பாடினார் . இப்பாடல் 1943 ஆம் ஆண்டில் நேதாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசியப் படையின் தேசிய பாடலானது . இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது . 52 வினாடிகளில் இப்பாடலை பாடி முடிக்க வேண்டும் என அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது . ஆனால் அதற்கு முன்னரே இந்திய தேசிய கீதம் ஓங்கி ஒலிக்கப்பட்டு விட்டது . மொழி , இனத்தால் வேறுபட்டாலும் ஒற்றுமையில் நாம் அனைவரும் இந்தியர் என்பதை இந்திய தேசிய கீதம் வலியுறுத்துகிறது . நாம் அனைவரும் இந்தியர்கள் என அடையாளம் காண நாட்டில் தேசிய கீதம் பாடப்படுகிறது .
மேலும் அறிந்து கொள்ள
Leave Comments
Post a Comment