Ads Right Header

UNIT9 தலைப்புக்கு உதவும் வகையில் சமூக நலத்துறை பற்றிய தகவல்கள்.

 

UNIT9 தலைப்புக்கு உதவும் வகையில் சமூக நலத்துறை பற்றிய தகவல்கள்.

• வரதட்சணை தடுப்புச் சட்டம் , 1961 - இல் இயற்றப்பட்டு , பின்னர் 1989 - இல் திருத்தம் செய்யப்பட்டது . அதனை தொடர்ந்து , தமிழ்நாடு வரதட்சணை தடுப்பு விதிகள் , 2004 இல் உருவாக்கப்பட்டன . தமிழ்நாடு வரதட்சணை தடுப்பு விதிகள் , 2004 - ன்படி மாவட்ட சமூக நல அலுவலர்கள் வரதட்சணை தடுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றனர் . மாவட்ட சமூகநல அலுவலரின் நம்பகத்தன்மை அறிக்கையை பெற்றப்பின்னர் காவல் துறை | நீதிமன்றம் வரதட்சணை தொடர்பான வழக்குகளை பதிவு செய்கின்றன . ஆண்டுதோறும் நவம்பர் 26 ஆம் நாள் வரதட்சணை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது . 


2.2.64 ஒருங்கிணைந்த சேவை மையம்       ( One Stop Centre ) பாலின ரீதியான வன்முறை என்பது உலகளாவிய சுகாதாரம் , மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்கான பிரச்சனையாக உள்ளது . குடும்பம் சார்ந்த பாலியல் வன்முறைகள் ஆகியவற்றுடன் வரதட்சணை , கௌரவ கொலைகள் , குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் , குழந்தைத் திருமணம் , பாலின ரீதியான கருக்கலைப்பு போன்ற தீங்கு விளைவிக்கும் செயல்கள் என பன்முகத் தன்மை கொண்டுள்ளது . மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய சிறப்பு திட்டமான ' சகி ' என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் , தனியார் மற்றும் பொது இடங்களில் , குடும்பத்தில் , சமுதாயத்தில் , பணிபுரியும் இடத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் திட்டமாகும் . ஒருங்கிணைந்த சேவை மையம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவையும் , ஒருங்கிணைந்த உதவியான , தற்காலிக தங்கும் வசதி , மருத்துவ உதவி , சமூக உளவியல் உதவி , சட்ட உதவி , காவல் துறை துறை உதவி , மனநல ஆலோசனை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது . இத்திட்டம் மத்திய அரசின் 100 சதவிகித நிதியில் செயல்படுகிறது . 








































Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY