Ads Right Header

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை பெறுவது எப்படி?



கொரோனாவுக்கான சிகிச்சையை அரசு காப்பீட்டு திட்ட அட்டை உரிமையாளர்கள் காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ள  தனியார் மருத்துவமனைகளில் எடுத்துக்கொள்ளும் போது அந்த செலவினத்தை அரசு ஏற்கும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை பெற தகுதியானவர்கள்: 


வருட வருமானம் ரூபாய். 72000க்கும் குறைவாக ஈட்டுபவர்கள். 

 குடும்ப அட்டை வைத்திருருந்தால் இந்த திட்டத்தில் பயனடைய முடியும். 


அரசு காப்பீடு திட்ட அட்டை பெறும் வழிமுறைகள்:


அருகில் உள்ள அரசு  மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO ) வருமானச்சான்றில் கையெழுத்து பெறவேண்டும்.

பின்பு அந்த விண்ணப்பத்தை அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சர் காப்பீடு மையத்தை(District kiosk)  அணுகி ரேசன் கார்டு மற்றும் ஆதார் கார்டு காண்பித்து உறுதிப்படுத்திய பின் 22 இலக்க காப்பீடு எண்ணை தருவார்கள். 


அந்த எண்ணை வைத்து காப்பீடு திட்டத்தை மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.


மூன்று மாதம் கழித்து அருகில் உள்ள இ சேவை மையத்தில் சென்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு 1800 425 3993 

என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 


இது குறித்த இன்னும் மேலதிக விபரங்களுக்கு  https://www.cmchistn.com/ என்ற வளைதளத்தை அணுகலாம் 


இந்த திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடைய மக்கள் உடனே விரைந்து திட்டத்தில் இணைந்து இத்திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றிடுங்கள் 


இந்த திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு 

நன்றிகளும் வாழ்த்துகளும் 


ஏழைகள் பலரும் இதனால் பலனடைவார்கள் 


இதனால் அரசு மருத்துவமனைகள் மேலுள்ள அதீத அழுத்தம்  லேசாகும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது 


நன்றி 🙏



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY