2021 April 24 to 28 Current Affairs...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.5 % 125 % ஆக இருக்கும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22 - ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதம் முதல் 12.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது .
உலக வங்கி - பன்னாட்டு நிதியம் இடையேயான வருடாந்திரக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது . அதை முன்னிட்டு , ' தெற்காசியாவின் பொருளாதார நிலை ' என்ற அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது .
அதில் கூறப்பட்டுள்ளதாவது : இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பரவத்தொடங்கும் முன்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) மதிப்பு வீழ்ச்சி காணத் தொடங்கியது . கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் நாட்டின் GDP வளர்ச்சி 8.3 சதவீதமாக இருந்தது . அது 2019-20 - ஆம் நிதியாண்டில் 4 சதவீதமாகக் குறைந்தது . மக்களின் நுகர்வு குறைந்தது , வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி , முதலீடுகள் குறைந்தது உள்ளிட்டவை நாட்டின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்த -தற்கான முக்கிய காரணங்கள் ஆகும் .
கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக பொருளாதார வளர்ச்சி மேலும் வீழ்ச்சி கண்டது . அதிலிருந்து இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது . எனினும் , பொருளாதாரம் முழுமையாக இன்னும் மீளவில்லை .
கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது . அந்நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வளர்ச்சி ஆச்சரியமளிக்கிற -து . 2021-22 - ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் முதல் 12.5 சதவீதமாக இருக்கும் . கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் விதம் , சர்வதேச நாடுகளின் பொருளாதார வளர்ச்சி , பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றைப் பொருத்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மாறுபடும் .
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றன . பொருளாதாரத்தின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இரு நிதியாண்டுகளுக்கு சுமார் 1 % வீழ்ச்சிகாணும் எனக்கணிக்கப்பட்டுள்ளது .
2021-22ஆம் நிதியாண்டில் இந்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக்கும் . அரசின் கடன் 2020-21ஆம் நிதியாண்டில் GDP மதிப்பில் 90 சதவீதமாக இருக்கும் . 2021-22ஆம் நிதியாண்டில் கடன் மதிப்பு குறையத் தொடங்கு -ம் .
அதே காலகட்டத்தில் நாட்டிலுள்ள ஏழை மக்கள் விகிதம் , கரோனா தொற்று பரவலுக்கு முந்தைய நிலையை அடையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும் நடப்பு நிகழ்வுகள் அறிய
Leave Comments
Post a Comment