TNPSC GK
சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization)
- ஹரப்பா நாகரிகம் செம்புக்கற்காலத்தை சேர்ந்தது ஆகும்.
- இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகம் .
- சிந்து வெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகிறது.
- 1856 ஆம் ஆண்டு - பஞ்சாப் ராவி
- 1921 இல் மீண்டும் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி (சர். ஜான் மார்ஷல்) செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் அது என்பதைக் கண்டறிந்தனர்
- ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்பது பொருள்
- இந்நாகரிகம் 4700 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கண்டறியப்பட்டது.
- வேறு இடங்கள் : மொகஞ்சதாரோ , சங்குதாரோ , காலிபங்கன், லோத்தல்
- மொஹஞ்சதாரோ நகரம் R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்டது.
நகர அமைப்பு
- நகரின் வட பகுதி குறுகலாகவும், உயரமாகவும் இருந்தது பாதுகாப்பிற்கான கட்டமைப்பு.
- கிழக்கு பகுதி விரிந்தும் தாழ்ந்தும் இருந்தது.
- அகன்ற சாலைகள் - வீடுகள் வரிசையாக அமைந்துள்ளன.
- இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் முதல், மாடிவீடுகள் வரைக் காணப்படுகின்றன.
- வீட்டின் முன் குப்பைத் தொட்டிகள் இருந்தன.
- சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன.
- ஒவ்வொரு வீட்டிலும் கிணறும் குளியல் அறையும் இருந்தன.
பெருங்குளம்.
- நீர் கசியாதிருக்க மெழுகு பூசிய சுட்ட செங்கற்கள்.
- இரு பக்கங்களிலும் படிக்கட்டு.
- உடைமாற்றும் அறைகள்.
- தூய்மையான நீர் வரவும் , அழுக்குநீர் வெளியே செல்ல கால்வாய் வசதி.
கழிவு நீர்
- கழிவு நீர், பாதாள சாக்கடை.
- கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது.
- திறந்து பழுது பார்க்கும் வசதி
- வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.
வாழ்க்கை முறை
- நகராட்சி நிருவாகம். - கடல் வணிகம்
- வணிகத் தொடர்பு: மெசபடோமிய, எகிப்து, சுமேரியா, ஈராக்
- தெரியாத விலங்கு: குதிரை. தெரியாத உலோகம்: இரும்பு.
- ஒருவகை திண்மையன கற்களால் ஆன எடைக் கற்கள்.
- முக்கிய உணவு: கோதுமை, பார்லி
- பருத்தியின் இழை ஆடைக்காக முதன் முதல் பயன் படுத்தப்பட்டது இந் நாகரீகத்தில் தான்.
- காளை மாட்டைப் புனிதமாகப் போற்றினர்.
- வெள்ளியை இறக்குமதி செய்தனர்.
- நெசவாளர்கள் கைத்தொழில், உலோக தொழில்
- பருத்தி கம்பளி நெய்தனர்.
- வேட்டி - கீழ் ஆடை சால்வை - மேல் ஆடை
- ஆண் பெண் - இருவரும் அணிகலன்
- தங்கம் வெள்ளி - அணிகலன்
- செம்பு வெண்கலம் - விளையாட்டு, ஆயுதம் , வீடு சாமான்
- கைத்தொழில் - எழுத்து பணி , முத்திரை செய்வோர், கட்டிட பணி மர சாமான் செய்வோர்
Previous article
Next article
Leave Comments
Post a Comment