Indian National Movement Tamil - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes (12th Std New Book)
இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்
- 1916இல் திலகர் தலைமையில் தீவிரத் தேசிய தன்மையோடு செயல்பட்டவர்கள் காங்கிரசை கட்டுப்படுத்தினர்.
- மேற்கத்திய இந்தியாவில் திலகர் தலைமையிலும் தென்னிந்தியாவில் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் தொடங்கப்பட்ட து.
- 1916இல் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே கையெழுத்தான லக்னோ ஒப்பந்தம் இந்திய தேசியத்துக்கு மேலும் வலிமை சேர்த்தது.
- ஆங்கிலேய அரசு கொண்டுவரப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களில் மிகக் கொடுமையானதாக ரௌலட் சட்டம் அமைந்தது.
- முதல் உலகப்போரில் துருக்கி தோற்றதும், அதன்பின் கையெழுத்தான செவ்ரேஸ் உடன்படிக்கையின் கடுமையான விதிமுறைகளும் துருக்கியின் சுல்தானை (கலிபா) நிலைதாழ்த்திக் காட்டியது. இதன் விளைவாக கிலாபத் இயக்கம் தோன்றியது.
அகில இந்திய தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம்
- அயர்லாந்தவரான டாக்டர் அன்னிபெசண்ட், பிரிட்டனில் இருந்தபோது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிச வா திகள் , குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்காற்றினார்.
- பிரம்மஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக அன்னிபெசண்ட் அம்மையார் இந்தியாவுக்கு 1893இல் வந்தார்.
- பனாரஸில் (வாரணாசியில்) மத்திய இந்துக்கல்லூரியை அவர் நிறுவினார்.
- (பின்னர் இந்தக் கல்லூரி 1916ஆம் ஆண்டு பண்டித மதன்மோகன் மாளவியா மூலமாக பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது).
- 1907இல் எ ச் .எஸ்.ஆ ல்கா ட் அவர்களின் மறைவுக்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலக அளவிலான தலைவராக பெசண்ட் அம்மையார் பதவி வகித்தார்.
- பிரம்மஞான சபையின் கொள்கைகளை அதன் தலைமையகமான சென்னையின் அடையாறில் இருந்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்த அவருக்குக் கல்விகற்ற பல தொண்டர்களின் ஆதரவும் கிடைத்தது.
- ஜம்னாதாஸ் துவாரகாதாஸ், ஜார்ஜ் அருண்டேல், ஷங்கர்லால் பன்கர், இந்துலால் யக்னிக், சி.பி. இராமசாமி, பி.பி. வாடியா ஆகியோர் பெசண்ட் அம்மையாரின் ஆதரவாளர்கள்.
- 1914இல் பிரிட்டன் முதல் உலகப்போரில் ஈடுபடும் அறிவிப்பை வெளியிட்ட து.
- 1914இல் தி காமன்வீல் என்ற வாரந்திரியை அவர் தொடங்கினார்.
- 1915இல் “How India Wrought for Freedom” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.
- இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம் என்று அவர் முழக்கமிட்டார்.
- 1915 ஜூலை 14இல் நியூ இந்தியா என்ற தினசரியைத் தொடங்கினார்.
- “தன்னாட்சி என்பது நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகள் மூலமாகவும் அவர்கள் சபைக்கு கடமைப்பட்டவர்களாகவும் விளங்க நடைபெறும் ஆட்சியாகும்.”
- இந்தியாவுக்கு தன்னாட்சி கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தைப் பரப்பவும் கோரிக்கையை வலியுறுத்தவும் அன்னிபெசண்ட் அம்மையார் பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார்.
- இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப்போவதாக அவர் 1915 செப்டம்பர் 28இல் முறைப்படி அறிவித்தார்.
- திலகர், பெசண்ட் அம்மையார் ஆகியோரின் முயற்சிகளால் டிசம்பர் 1915இல் பம்பாயில் நடந்த காங்கிரஸ் அமர்வில் தீவிர தேசியத் தன்மையுடையவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கும் வகையில் தனது விதிமுறைகளில் அக்கட்சி முறையாக திருத்தம் செய்தது.
- 1916 செப்டம்பர் மாதத்திற்குள் தன்னாட்சி இயக்கத்தை கையிலெடுக்குமாறு அந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியைப் பெசண்ட் கேட்டுக்கொண்டார்.
- ஒன்று திலகர் தலைமையிலும் மற்றொ ன்று பெசண்ட் அம்மையார் தலைமையிலும் என 1916இல் நாட்டில் இரண்டு தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
- தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள்: பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது மற்றும் தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது ஆகியன அந்த இரண்டு குறிக்கோள்களாகும்.
திலகரின் தன்னாட்சி இயக்கம்
- ஏப்ரல் 1916இல் பெல்காமில் நடந்த பம்பாய் மாகாண மாநாட்டில் இது நிறுவப்பட்டது.
- திலகரின் இயக்கத்துக்கு ஆறு கிளைகள் ஒதுக்கப்பட்டன.
- மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பிரபலமடைந்திருந்த அவரது இயக்கம், ஏப்ரல் 1917இல் 14 ஆயிரம் உறுப்பினர்களில் இருந்து 1918இன் தொடக்கத்தில் 32 ஆயிரம்உறுப்பினர்களாக அதிகரித்தது.
- தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக 1916 ஜூலை 23இல் தமது அறுபதாவது பிறந்த நாளில் திலகர் கைது செய்யப்பட்டார்.
(ஆ) பெசண்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம்
- செப்டம்பர் 1916ஆம் ஆண்டு மதராஸில் தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசண்ட் தொடங்கினார்.
- கான்பூர், அலகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, கள்ளிக்கோட்டை, அகமதுநகர் ஆகிய இடங்களில் இந்த இயக்கத்தின் கிளைகள் அமைந்தன.
- இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று அவர் அறிவித்தார்.
- ஜவஹர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, பி. சக்கரவர்த்தி, ஜிதேந்திரலால் பானர்ஜி, சத்யமூர்த்தி, கலிக்குஸ்மான் ஆகியோர் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக்கொண்டதிலிருந்து இந்த இயக்கத்தின் பிரபலத்தை அறிய முடியும்.
- ஜூன் 1917இல் பெசண்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் பி.பி.வாடியா, ஜார்ஜ் அருண்டேல் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக ஊட்டியில் சிறைபிடிக்கப்பட்டனர்.
- பெசண்ட் அம்மையாருக்கு ஆதரவாக சர். எஸ். சுப்ரமணியம் அரசப் பட்டத்தை (knighthood) துறந்தார்.
- தலைவர்கள் விடுதலையாகாவிட்டால் சட்டமறுப்பு இயக்கத்தை அரசுக்கு எதிராகப் பயன்படுத்துவது குறித்து 1917 ஜூலை 28இல் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் திலகர் வலியுறுத்தினார்.
- காந்தியடிகளின் உத்தரவின்பேரில் ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் மற்றும் ஷங்கர்லால் பன்கர் ஆகியோர் பெசண்ட் மற்றும் இதர தலைவர்களை சிறைபிடித்த நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி ஓராயிரம் நபர்களிடம் கையெழுத்து வாங்கி பெசண்ட் அம்மையார் சிறைபிடிக்கப்பட்ட இடத்துக்கு பேரணியாகச் சென்றனர்.
- தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று புதிய வெளியுறவு அமைச்சர் மாண்டேகு 1917 ஆகஸ்டு 20இல் அறிவித்தார்.
- செப்டம்பர் 1917இல் அவர் விடுதலையானபோது அவர் 1917இல் இந்திய தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவம்
- 'Indian unrest' என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரோலிக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கை நடத்துவதற்காக செப்டம்பர் 1918இல் திலகர் பிரிட்டனுக்குச் சென்றது மற்றும் உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை பெசண்ட் ஏற்றுக்கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.
இந்திய காமன்வெல்த் லீக் என்று தன்னாட்சி இயக்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1929இல் இந்திய லீக் என்று வி.கே. கிருஷ்ணமேனன் மாற்றம் செய்தார்.
போரின் தாக்கம்
- 1909இல் மிண்டோ- மார்லி சீர்திருத்தங்களை நிறைவேற்றினர்.
- 1913இல், இந்த லீக்கில் புதிய தலைவர்கள் சிலர் இணைந்தனர். அவர்களில் முகமது அலி ஜின்னா முக்கியமானவர்.
- போரில் பிரிட்டனின் சிரமத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த புரட்சியாளர்கள் விரும்பினர். கதார் இயக்கம் அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.
- இந்திய ஆதரவை எதிர்பார்க்க பிரிட்டிஷார் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
- 1915இல் பம்பாயில் வருடாந்திர மாநாட்டை நடத்திக் கொண்டிருந்த காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் இதே அடிப்படையில் விவாதித்தன.
- அக்டோபர் 1916இல் இம்பீரியல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் அரசப்பிரதிநிதிக்கு (வைசிராய்) எழுதிய கடிதத்தில் போருக்குப் பிந்தைய சீர்திருத்தங்கள் குறித்து வலியுறுத்தினர்.
- காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் சந்தித்து இந்த கடிதம் குறித்து விவாதித்தன.
- காங்கிரஸ், முஸ்லிம் லீக், தன்னாட்சி இயக்கம் ஆகியன தங்களுடைய வருட மாநாடுகளை லக்னோவில் நடத்தியதால் 1916ஆம் ஆண்டு முக்கியத்துவம் பெற்றது.
- காங்கிரஸ் தலைவர் அம்பிகா சரண் மஜும்தார்( A C மஜும்தார்) தீவிர தேசியத்தன்மை கொண்டவர்களை வரவேற்றார்.
சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக்கொண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை சான்பிரான்சிஸ்கோவில் வசித்துவந்த லாலா ஹர்தயாள் 1913இல் நிறுவினார்.
இந்த அமைப்பு கதார் கட்சி என்று அழைக்கப்பட்டது. (உருது மொழியில் கதார் என்றால் கிளர்ச்சி என்று பொருள்).
'கதார்' என்ற பத்திரிகையையும் இக்கட்சி வெளியிட்டது. 1913 நவம்பர் முதல் தேதி சான் பிரான் சிஸ்கோவில் இது பதிப்பிக்கப்பட்டு வெளியானது.
கோமகடமரு (Comagatamaru) என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியாவில் இருந்து குடியேறிவர்களுடன் கனடாவில் இருந்து திரும்பியது.
லக்னோ ஒப்பந்தம் அல்லது காங்கிரஸ்- லீக் ஒப்பந்தம் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்-ஐ ஒன்றிணைப்பதில் அன்னிபெசண்ட் அம்மையாரும் திலகரும் முக்கியப் பங்காற்றினார்கள்.
நவம்பர் 1916இல் கல்கத்தாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் டிசம்பர் 1916இல் நடந்த காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் வருடாந்திர மாநாடுகளில் உறுதி செய்யப்பட்டன.
லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்கள்
(i) நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாகாணங்கள் சுதந்திரமாகச் செயல்படவேண்டும்.
(ii) மத்திய மற்றும் மாகாண சட்டமேலவைகளின் உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், 1/5 பங்கு நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
(iii) மாகாண மற்றும் மத்திய சட்டப்பேரவைகளின் 4/5 உறுப்பினர்கள் பரந்துபட்டவாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
(iv) மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்கவேண்டும்.
(v) மாகாணசபைத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது. (மக்கள்தொகையில் தெரிவிக்கப்பட்ட விகிதங்களுக்கு அப்பால்) இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கு சில இடங்கள் வழங்கப்பட்ட பஞ்சாப் மற்றும் வங்காளம் தவிர அனைத்து மாகாணங்களிலும் அவர்களுக்கு சாதகமாக முன்னுரிமைகளை வழங்கவும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில்இந்து-முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.
(vi) தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்க கடமைப்பட்டுள்ளன. கவர்னர்ஜெனரல் அல்லது ஆளுநர்சபைகளின் தடுப்பாணை அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஓராண்டுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.
(vii) இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உள்ள உறவுகளும் தன்னாட்சி (டொமினியன்) தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகளும் ஒத்திருக்கவேண்டும். ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும் சம நிலை பெற்றிருக்கவேண்டும்.
- லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பியான ஜின்னாவை "இந்து- முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்" என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
காலனி ஆதிக்க அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள்
இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம், 1915
- முதல் உலகப்போரின்போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக இயற்றப்பட்ட இந்தச் சட்டம், இந்தியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்டம் என்று குறிப்பிடப்பட்டது.
- உள்ளூர் அரசு நியமித்த மூன்று ஆணையர்கள் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயங்கள் சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத் தொடர இந்தச் சட்டம் அனுமதித்தது.
- பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை ஆகியவற்றை விதிக்க தீர்ப்பாயத்துக்கு இச்சட்டம் அதிகாரமளித்தது.
- இந்தச் சட்டம் முதல் லாகூர் சதித்திட்ட வழக்கு விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டது.
- முதல் உலகப்போர் முடிவுற்றபின் இச்சட்டத்தின் அடிப்படைகூறுகளுடன் புதிதாக ரௌலட் சட்டம் உருவானது.
- உத்தரப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்கள் கிலாப் (எதிர்ப்பு) என்ற அர்த்தமுடைய உருது மொழி வார்த்தையை நிர்வாகத்துக்கு எதிரான பொதுக்கிளர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள்.
கிலாபத் இயக்கம்
காந்தியடிகள் பெற்ற பதக்கங்கள்
தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி
- பம்பாயின் சோரப்ஜி ஷபூர்ஜி, மற்றும் என்.எம். லோக்காண்டே, வங்காளத்தின் சசிபாத பானர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் குரல்களை எழுப்பினர்.
- உலகம் முழுவதும் பரவிய இன்ஃபுளுயன்சா (Influenza) தொற்றுநோயின் தாக்கத்தின் பிடியில் இந்தியாவும் சிக்கித் தவித்தது.
- 1917ஆம் ஆண்டின் போல்ஷ்விக் புரட்சியின் வெற்றி இந்திய தொழிலாளர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.
- 1920 அக்டோபர் 30இல் 1,40,854 உறுப்பினர்களைக் கொண்ட 64 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பம்பாயில் சந்தித்து லாலா லஜபதி ராயின் தலைமையில் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸை (AITUC) நிறுவினர்.
- 1919-20இல் 107 ஆக இருந்த பதிவு பெற்ற தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 1946-47இல் 1833 ஆக அதிகரித்தது.
Leave Comments
Post a Comment