அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்!
அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்
எழுதப்பட்ட ஓர் அரசியல் சட்டம்
இந்திய அரசியல் சட்டம், முக்கியமாக ஓர் எழுத்துப்ப10ர்வமான அரசியல் சட்டமாகும். எழுதப்பட்ட ஓர் அரசியல் சட்டம் என்பது, கொடுக்கப்பட்ட ஒரு கால அவகாசத்தில் எழுதப்படுவது. நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நாளின் போது நடைமுறைக்கு வருகிறது அல்லது ஒர் ஆவணமென்கிற வகையில் சுவீகரிக்கப்படுகிறது. நமது அரசியல் சட்டம், இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்களில் வடிவமைக்கப்பட்டது. 1949-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் நாளன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது.
பிரிட்டிஷ் அரசியல் சட்டம், எழுதப்படாத ஓர் அரசியல் சட்டத்திற்கு எடுத்துக் காட்டாகும். உலகிலேயே மிக நீளமான அரசியல் சட்டம், இந்திய அரசயில் சட்டம் தான். உண்மையான மூல அரசியல் சட்டம் 395 பிரிவுகளையும், 8 அட்டவணைகளையும் கொண்டது. அதே சமயம் அமெரிக்க அரசியல் சட்டம் 7 பிரிவுகளை மட்டுமே உடையது.
இறுக்கமானதும், நெகிழ்வானதும் ஒன்றிணைந்தது
ஓர் அரசியல் சட்டத்தை இறுக்கமானது அல்லது நெகிழ்வுத் தன்மையுடையது என்று அழைப்பது அதனுடைய திருத்த நடைமுறையின் அடிப்படையிலேயே. ஓர் இறுக்கமான அரசியல் சட்டத்தில், அந்த அரசியல் சட்டத்தைத் திருத்துவது அவ்வளவு எளிதல்ல. ஐக்கிய அமெரிக்க நாடுகள் (யு.எஸ்.ஏ), ஸ்விட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் இறுக்கமானவை என்று கருதப்படுகின்றன.
அதே சமயம், பிரிட்டிஷ் அரசியல் சட்டம் நெகிழ்வுத் தன்மை உடையது என்று கருதப்படுவதற்குக் காரணம். திருத்தம் செய்வதற்கான நடைமுறை எளிதாகவும், சுலபமானதாகவும் உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தைப் பொறுத்தவரை, திருத்தத்தின் இயல்பைப் பொறுத்து மிக சுலபமானது முதல் மிக அதிகபட்ச சிரமமான ஒழுங்குமுறை வரையில் பல்வேறு வகையான திருத்தங்களை வழங்குகிறது.
வெவ்வேறு மூலாதாரங்களிலிருந்து பெறப்பட்டவை
மூலாதாரம்-பெறப்பட்ட அம்சங்கள்1.இந்திய அரசுச் சட்டம் 1935 அவசர நிலை பிரகடனம்-கூட்டரசு முறை, ஆளுநர் அலுவல், நீதித்துறை, பொதுத் தேர்வு ஆணையங்கள், அவசரகாலத் திட்டங்கள் மற்றும் ஆட்சிமுறை சார்ந்த விவரங்கள்.
2.பிரிட்டிஷ் அரசியலமைப்பு-நாடாளுமன்ற அரச, சட்டத்தின் படியான விதி, சட்டமியற்றும் செய்முறை ஒற்றைக்குடியுரிமை, கேபினெட் முறை, தனியுரிமை நீதிப்பேராணை, நாடாளுமன்ற சலுகைகள் மற்றம் ஈரவை முறை
3.அமெரிக்க அரசியலமைப்பு-உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை இ துணை குடியரசுத் தலைவர் பதவி, குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டு, நீதிப்புனராய்வு, நீதித்துறை சுதந்திரம் மற்றும்
அடிப்படை உரிமைகள்
1.அயர்லாந்து அரசியலமைப்பு-ராஜ்ய சபாவிற்கு உறுப்பினர்களை நியமனம் செய்தல் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் முறை, அரசின் வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
2.கனடா அரசியலமைப்பு-உச்சநீதிமன்ற ஆலோசனை எல்லை ஆளுநர்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்படுவது, மீதமுள்ள அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருப்பதுää மற்றும் உறுதியான மத்திய அரசு மத்தியில் வலிமையான கூட்டாட்சி.
6.ஆஸ்திரேலியா அரசியலமைப்பு-நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டமர்வு, வணிகம் மற்றும் கலப்பு, மற்றும் பொதுப்பட்டியல்
7.ஜெர்மனி அரசியலமைப்பு-அவசர காலத்தில் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக தடை செய்தல் ரஷிய அரசியலமைப்பு அடிப்படைக் கடமைகள் மற்றும் முகவுரையில் உள்ள நீதிக் குறிக்கோள் (சமூக பொருளாதார மற்றும் அரசியல்)
8.பிரெஞ்சு அரசியலமைப்பு-முகவுரையில் உள்ள சமத்துவம் மற்றும் சகோதரத்துவம், சுதந்திரம் மற்றும் குடியரசு.
9.தென்னாப்பிரிக்க அரசியலமைப்பு-அரசியலமைப்பு சட்டதிருத்த செயல்முறை மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்தல்.
10.ஜப்பான் அரசியலமைப்பு-சட்டத்தினால் அமைக்கப்பட்ட ஆட்சிமுறை
நாடாளுமன்ற ஜனநாயகம்
1. இந்தியா, நாடாளுமன்ற வடிவத்திலான ஜனநாயகத்தைப் பெற்றிருக்கிறது. இது பிரிட்டிஷ் அமைப்பு முறையிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமியற்றுவோருக்கும் நிர்வாகத்திற்கும் மிக நெருக்கமான உறவு நிலவும். அமைச்சரவை என்பது நாடாளுமன்ற ஃ சட்டமன்ற உறுப்பினர்களின் நடுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.
2. அமைச்சரவை பின்னதற்குப் பொறுப்புடையது. உண்மையில், அமைச்சரவை பதவியில் நீடித்திருப்பது, நாடாளுமன்ற ஃ சட்டமன்றத்தின் நம்பிக்கையை எவ்வளவு காலத்திற்குப் பெற்றிருக்கிறதோ அவ்வளவு காலம் வரையில் தான். இந்த ஜனநாயகத்தின் வடிவத்தில் அரசின் தலைமை என்பது பெயரளவிலானது தான்.
3.இந்தியாவில், குடியரசுத் தலைவரே அரசின் தலைவர். அரசியல் சட்டப10ர்வமாக குடியரசுத் தலைவர் எண்ணற்ற அதிகாரங்களைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால், நடைமுறையில் பிரதமரால் தலைமை வகிக்கப்படும் அமைச்சரவைக் குழுதான் அத்தகைய அதிகாரங்களைப் உபயோகிக்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைகளின் பேரில் செயல்படுகிறார்.
அடிப்படை உரிமைகள்
ஒவ்வொரு மனித உயிரும். நல்ல வாழ்க்கையை உறுதிப் படுத்துகிறவையான குறிப்பிட்ட சில உரிமைகளை அனுபவிக்கும் உரிமை பெற்றிரக்கிறது. ஒரு ஜனநாயகத்தில் அனைத்துக் குடிமக்களும் சம உரிமைகளை அனுபவிக்க வேண்டியவர்களாவர். இந்தியாவின் அரசியல் சட்டம், அத்தகைய உரிமைகளுக்கு அடிப்படை உரிமைகள் என்ற வடிவத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்த உரிமைகள் நீதயியல் ப10ர்வமானவை என்பதுடன் நீதித்துறையால் பாதுகாக்கப்படுபவையுமாகும். இந்த உரிமைகளுள் எந்த ஒர் உரிமை மீறப்படும் போதும், அவ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவர் நீதிமன்றத்திற்குப் போக முடியும்.
அரசுக் கொள்கையின் வழிகாட்டி நெறிகள்
இவ்வழிகாட்டி நெறிகளின் இலக்கு, சமூகரீதியான பாரபட்சத்தை அகற்றுவது. பெருந்திரளான மக்களின் வறுமையைக் குறைக்க உதவுவது மற்றும் பெருமளவிலான சமூக நலன்களை உறுதிப்படுத்துவது போன்றவற்றை நோக்கியதாகும்.
உண்மையில், இந்த விதிகள் நல அரசை நிறுவுவதை நோக்கி நெறிப்படுத்தப்பட்டவையாகும்.
அடிப்படைக் கடமைகள்
நமது அரசியலமைப்புச் சட்டத்தில், 42-வது திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் அனைத்துக் குடிமக்களுக்கும் அடிப்படைக் கடமைகளின் பட்டியல் ஒன்றை வரையறுத்து விதித்துள்ளது. மக்களுக்கு உரிமைகள் உத்தரவாதங்கள் என்ற வகையில் அளிக்கப்பட்டிருக்கையில், கடமைகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு குடிமகனும் அதை நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்புடன் அமைந்துள்ள சட்டப10ர்வமான கட்டுப்பாடாகும்.
சுதந்திரமான மற்றும் ஒருங்கிணைந்த ஒற்றை நீதியியல் அமைப்பு
இந்தியா ஓர் ஒருங்கிணைந்த ஒற்றை நீதியியல் அமைப்பைக் கொண்டிருக்கிறது. நீதியியல் அமைப்பின் உச்சநிலை நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் விளங்குகிறது. உச்சநீதி மன்றத்திற்குக் கீழ்நிலையில் உயர்நீதிமன்றங்கள் உள்ளன. உயர்நீதிமன்றங்கள் தமக்குக் கீழ்நிலையில் உள்ள நீதிமன்றங்களளைக் கட்டுப்படுத்தவும், மேற்பார்வையிடவும் செய்கின்றன. ஆக, இந்திய நீதித்துறை இவ்வாறு ஒரு பிரமிடைப்போல விளங்குகிறது. கீழ்நிலை நீதிமன்றங்கள் அடித்தளமாகவும், உயர்நீதிமன்றங்கள் நடுவிலும், உச்சநீதிமன்றம் மேல்முனையாகவும் அமைந்துள்ளன. இந்த ஒரே சீரான நீதியியல் அமைப்பு, எல்லாக் குடிமக்களுக்கும் ஒரே சீரான முறையில் நீதியை முன்னெடுக்கவும், உறுதிப்படுத்தவும் இலக்கைக் கொண்டுள்ளது. மேலதிகமாக அரசியலமைப்புச் சட்ட விதிகள் இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிற வகையில் அமைந்திருப்பதால் நிர்வாகப்பிரிவு – சட்டமியற்றும் பிரிவுகளின் செல்வாக்கில் இருந்து விடுபட்டுத் தனித்து இது இருக்கிறது.
ஒற்றைக் குடியுரிமை
ஐக்கிய அமெரிக்கக் குடியரசுகளின் விஷயத்தில் அமைந்திருப்பது போல, ஒரு கூட்டாட்சி அரசில், குடிமக்கள் இரட்டைக் குடியுரிமையைப் பெற்று அனுபவிப்பதே வழக்கமாக அமையும். இந்தியாவில் வழங்கப்பட்டிருப்பது ஒற்றைக் குடியுரிமை மட்டுமே. இதன் அர்த்தம், ஒவ்வோர் இந்தியரும் அவர்ஃஅவள் பிறந்த இடம் எதுவாக இருப்பினும், வசிப்பிடம் எதுவாக இருப்பினும் இந்தியக் குடிமக்கள் என்பதே. அவரோஃஅவளோ ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் அல்லது சத்தீஷ்கர் போன்ற ஏதேனுமொரு உட்பகுதி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் கூட அதன் குடிமக்களாக அவர்கள் ஆகமாட்டார்கள்; மாறாக இந்தியாவின்குடிமக்களாகவே நீடிப்பார்கள். இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் எல்லாக் குடிமக்களும் அனைத்து உரிமைகளையும் சமமாகப் பெற்று அனுபவித்து வருகின்றனர்.
வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை
‘ஒரு நபர் ஒரு வாக்கு’ என்ற அடித்தளத்தின் மீது இந்திய ஜனநாயகம் செயல்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் ஃ மகளும், 18 வயதோ அல்லது அதற்க மேலோ ஆகியிருந்தால் அவர்களின் சாதி, இனம், மதம் அல்லது என்னவாக இருப்பினும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களே. இந்திய அரசியல் சட்டம், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற வழிமுறையின் மூலமாக, இந்தியாவில் அரசியல் சமத்துவத்தை நிறுவியுள்ளது.
அவசர நிலைக்கால விதிகள்
அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், சாதாரண காலங்களில் செயல்படுவது போல அரசாங்கம் செயல்பட முடியாமற் போகிற சு10ழ்நிலைகளும் எதிர்காலத்தில் உருவாகக்கூடும் என்று முன் உணர்ந்திருக்கின்றனர். அவசர நிலைக் காலச் சு10ழ்நிலைகள் மூன்று வகையானவை.
(a) போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கிய கலகம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய அவசர காலநிலை.
(b) மாநிலங்களில், அரசியல் சட்டரீதியானநிர்வாக இயந்திரம் தோல்வி அடைந்து விட்ட சு10ழ்நிலையில் எழும் அவசர காலநிலை, மற்றும்,
(c) நிதியியல் அவசரகால நிலை.
ஒரளவிற்கேயான கூட்டாட்சி அமைப்பு
1.இந்தியாவின் அரசியல் சட்டம், அரசாங்கத்தின் ஒரு கூட்டாட்சி அமைப்பை நிறுவியுள்ளது. ஒரு கூட்டமைப்பினுடைய அனைத்து, வழக்கமான சிறப்பம்சங்களை அது கொண்டிருக்கிறது: அதாவது இரண்டு அரசாங்கங்கள், அதிகாரங்களின் பிரிவினைகள், எழுத்துப10ர்வமான ஓர் அரசியல் சட்டம், அரசியல் சட்டத்தின் உச்ச மேல்நிலை, அரசியல் சடடத்தின் உறுதித்தன்மை, சுதந்திரமான நீதித்துறை மற்றும் இரண்டு சட்டமியற்றும் அவைகளின் செயல்தன்மை – ஆகியவை.
2. எப்படியிருப்பினும், இந்திய அரசியல் சட்டம், பெரும் எண்ணிக்கையில் கூட்டாட்சித் தன்மையில்லாத அல்லது ஒற்றைத் தன்மையில் அமைந்துள்ள அம்சங்களையும் கொண்டுள்ளது. அதாவது, ஒரு வலிமைமிக்க மைய அரசு, ஒற்றை அரசியல் சட்டம், அரசியல் சட்டத்தின் நெகிழ்வுத் தன்மை, ஒருங்கிணைந்த நீதித்துறை, மாநில ஆளுநர் மத்திய அரசினால் நியமனம் செய்யப்படுவது, அகில இந்தியப்பபணிகள், அவசரநிலை (நெருக்கடிநிலை)ப் பிரகடன விதிகள், இன்ன பிற அம்சங்கள் ஆகியவை.
3. மேலதிகமாக, அரசியல் சட்டத்தில் எந்த இடத்திலும் ‘கூட்டமைப்பு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.
4.ஆகவே, இந்திய அரசியல் சட்டம்,‘வடிவத்தில் கூட்டாட்சித் தன்மையுடன், ஆனால் உள்ளடக்கத்தில் ஒற்றைத் தன்மையுடன் ‘வௌ;வேறு வகையில் விவரிக்கப்படுகிறது.
மதச்சார்பற்ற அரசு
1.இந்தியாவின் அரசியல் சட்டம், மதச்சார்பற்ற ஓர் அரசுக்காக நிற்கிறது. ஆகவே, அது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் இந்திய அரசின் அதிகாரப்ப10ர்வ மதமாக உயர்த்திப் பிடிக்கவில்லை.
2. மதச்சார்பற்ற தன்மை என்பதற்கான மேற்கத்திய கருதுகோள் அதன் கூடுதலான அர்த்தத்தில், மதத்திற்கும் (தேவாலயம்) மற்றும் அரசுக் (அரசியல் நிறுவனம்)-கும் இடையே முற்று முழுதான பிரிவினையை வலியுறுத்துவதாக அமைகிறது. மதச்சார்பற்ற தன்மையின் இந்த எதிர் காரணம், இங்கு சமூகமே பல மதங்களின் கலவையாய் அமைந்துள்ளது, ஆகவே, இந்திய அரசியல் சட்டம், மதச்சார்பற்ற தன்மையின் நேர்மறைக் கருதுகோளை, தன்னுள் ஒரு பகுதியாக உள்ளடக்கியுள்ளது. அதாவது, எல்லா மதங்களுக்கும் சமமான மரியாதையை வழங்குவது அல்லது எல்லா மதங்களையும் சமதையான வகையில் பாதுகாப்பது.
வயது வந்தோர் அனைவருக்கம் வாக்குரிமை
1. இந்திய அரசியல் சட்டம், மக்களவைக்கும் மாநிலங்களின் மன்றப் பேரவைகளுக்கும் நடத்தப்படும் தேர்தல்களின் அடிப்படை அம்சமாக வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதைக் கொண்டிருக்கிறது. 18 வயதிற்குக் குறையாத வயதுடைய ஒவ்வொரு குடிமகனும் ஃ குடிமகளும் சாதி, இனம், மதம், பாலினம், கல்வி, செல்வம் இன்ன பிற எந்த ஓர் அம்சத்தின் அடிப்படையிலும் பாரபட்சத்திற்கு உட்படுத்தப்படாமல் தனது வாக்கைப் பயன்படுத்துவதற்கு உரிமை படைத்தவராயிருக்கிறார்.
2. 1988-ம் ஆண்டு 61-வது அரசியல் சட்டத்திருத்தச் சட்டம் மூலம் 21 வயதாக இருந்த வாக்களிக்கும் வயது, 18 வயதாக 1989-ல் குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.
3. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பது ஜனநாயகத்தைப் பரந்த அடிப்படை உடையதாக ஆக்குகிறது: பொதுவாக சாதாரண மக்களின் சுயமரியாதையையும் கௌரவத்தையும் உயர்த்துவ அமைகிறது: சமத்துவ கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறது: சிறுபான்மை மக்களுக்குத் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமையை அளிக்கிறது மற்றும் பலவீனமான பிரிவு மக்களுக்குப் புதிய நம்பிக்கைகளையும், பார்வைக் கண்ணோட்டங்களையும் திறந்து வைக்கிறது.
சுதந்திரமான அமைப்புகள்
இந்திய அரசியல் சட்டம், மத்திய மற்றும் மாநில) அரசாங்கங்களின் சட்டமியற்றும், நிர்வாகப்ப10ர்வ மற்றும் நீதியியல் அமைப்புகளை மட்டும் வழங்கவில்லை: மாறாக, அவற்றுடன் கூடுதலாக சில சுதந்திரமான அமைப்புகளையும் கூட நிறுவகை செய்துள்ளது.
அத்தகைய அமைப்புகள் பின்வருவன:
1. தேர்தல் ஆணையம் – இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவி, குடியரசுத் துணைத் தலைவர் பதவி, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றப் பேரவைகள் – ஆகியவற்றுக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்தி நடத்தி வைக்கும் அமைப்பு:
2. பொதுத் தலைமைக்கணக்கு மற்றும் கட்டுப்பாட்டாளர் – மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகளைத் தணிக்கை கருவ10லத்திற்குக் காப்பாளராக அவர் செயல்படுகிறார். மேலும் அரசாங்கச் செலவினங்களுடைய சட்டப10ர்வமான தன்மை மற்றும் அவற்றின் தார்மிக அறநெறிகளுக்குட்பட்ட தன்மையின் மீது (தணிக்கையடிப்படையில்) கருத்துரைகளை முன் வைத்துச் செயல்படுபவர்.
3. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் – அகில இந்திய: சேவைப் பணிகள் மற்றும் உயர்நிலை மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்காகப் பல்வேறு தேர்வுகளை நடத்தித் தருவதும், ஒழுங்குமுறை தொடர்பான பிரச்சனைகளில் குடியரசுத் தலைவருக்கும் அறிவுரை வழங்குவதும் இதன் பணிகள்.
4. மாநில அரசுப்’ பணியாளர் தேர்வாணையம் – ஒவ்வொரு மாநிலமும், மாநில அரசுப் பணிகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்காகப் பல்வேறு தேர்வுகளை நடத்தித் தருவதற்கும், ஒழுங்குமுறை தொடர்பான பிரச்சனைகளில் ஆளுநருக்கு அறிவுரை வழங்குவதற்காகவும் இத்தேர்வாணையத்தை அமைத்துக் கொண்டுள்ளது.
5. அரசியல் சட்டம், இத்தகைய அமைப்புகளின் சுதந்திரத் தன்மையைப் பல்வேறு விதிகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. பதவிக்காலத்தின் பாதுகாப்பு, திட்டவட்டமாக நிர்ணயிக்கப்பட்ட பணி நிலைமைகள், இவ்வமைப்புகளுக்கான செலவினங்கள் அனைத்தும் இந்தியாவின் தொகுப்பு நிதியில் சேர்க்கப்பட்டு கணக்கிடப்படுகின்றன மற்றும் இத்தகைய விதிகளே அவை.
மூன்று அடுக்கு அரசாங்கம்
1. இந்திய அரசியல் சட்டம், அதன் மூல வடிவத்திலேயே, வேறெந்த ஒரு கூட்டாட்சி அரசியல் சட்டத்தையும் போல, இரட்டை அரசு நிர்வாக அமைப்புகளை வழங்கியிருக்கிறது. மத்திய மற்றம் மாநில அரசுகளின் அமைப்பு முறை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான விதிகளையும் தன்னுள் கொண்டிருக்கிறது.
2.பிற்பாடு, 73-வது மற்றும் 74-வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் (1992), உலகில் வேறு எந்த ஓர் அரசியல் சட்டத்திலும் காணப்படாத வகையில் அமைந்த மூன்றடுக்கு அரசாங்கம் (உள்ளாட்சி அரசாங்கம்) என்ற அம்சத்தைப் புதிதாகச் சேர்த்துள்ளது.
Leave Comments
Post a Comment