TNPSC TAMIL
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் மரபுக்கவிதை!
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் மரபுக்கவிதை
முடியரசன்
வாழ்க்கைக் குறிப்பு:
- இயற் பெயர் = துரைராசு
- ஊர் = மதுரை அடுத்துள்ள பெரியகுளம்
- பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
வேறு பெயர்கள்:
- கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
- தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)
நூல்கள்:
- முகில் விடு தூது
- தாலாட்டுப் பாடல்கள்
- கவியரங்கில் முடியரசன்
- முடியரசன் கவிதைகள்
- பாடுங்குயில்
- காவியப்பாவை
- ஞாயிறும் திங்களும்
- மனிதனைத் தேடுகிறேன்
- பூங்கொடி(தமிழ் தேசிய காப்பியம், தமிழக அரசு பரிசு பெற்றது)
- வீரகாவியம்(தமிழ் வளர்ச்சி கழக பரிசு)
- நெஞ்சு பொறுக்குதில்லையே
நாடகம்:
- ஊன்றுகோல்(பண்டிதமணி கதிரேச செட்டியார் பற்றியது)
குறிப்பு:
- காரைக்குடி மீனாட்சி சுந்தரம் அர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
- இவர் தமிழில் பிற மொழி கலப்பதை வன்மையாக கண்டித்தார்
- தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
- சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
- தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்
- இவரின் கவிதைகளை சாகித்திய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளது
சிறப்பு:
- அறிஞர் அண்ணா இவரைத் "தமிழ்நாட்டு வானம்பாடி” எனப் போற்றினார்
- பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கினார்
- பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது
மேற்கோள்:
- இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை
- இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு
- வரம்பில்லையேல் எம்மொழியும் அழிந்து போகும்
- மணவினையில் தமிழுண்டோ, பயின்றவர் தம்முள்
- வாய்ப்பேச்சில் தமிழுண்டோ, மாண்டபின்னர்
- பிணவினையில் தமிழுண்டோ
வாணிதாசன்
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்பெயர் = எத்திராசலு (எ) அரங்கசாமி
- பெயர் = வாணிதாசன்
- பிறந்த இடம் = புதுவையை அடுத்த வில்லியனூர்
- பெற்றோர் = அரங்க திருக்காமு – துளசியம்மாள்
வேறு பெயர்கள்:
- புதுமைக் கவிஞர்
- பாவலரேறு
- பாவலர்மணி
- தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
- தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
புனைப்பெயர்:
- ரமி
நூல்கள்:
- தமிழச்சி
- கொடிமுல்லை
- எழிலோவியம்
- தீர்த்த யாத்திரை
- இன்ப இலக்கியம்
- பொங்கல் பரிசு
- இரவு வரவில்லை
- சிரித்த நுணா
- வாணிதாசன் கவிதைகள்
- பாட்டரங்கப் பாடல்கள்
- இனிக்கும் பாட்டு
- எழில் விருத்தம்(விருதப்பாவிற்கு இலக்கணமாய்த் திகழ்வது)
- தொடுவானம்
- பாட்டு பிறக்குமடா(தமிழக அரசு பரிசு)
குறிப்பு:
- இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
- இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
- இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
- பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
- இவரின் முதல் பாடல் = பாரதி நாள்
சிறப்பு:
- பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்
- பாவேந்தர் பரிசு பெற்றுள்ளார்
- மயிலை சிவமுத்து = தமிழ்நாட்டுத் தாகூர்
- சிலேடை, இடக்கரடக்கல் அமைத்துப் பாடுவாதில் வல்லவர்
- குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் இவரே
மேற்கோள்:
- பாரதி தாசன் பெயரை உரைத்திடப்
- பாட்டுப் பிறக்குமடா
- இடுவெயில் போல்உழைக்கும் சேரிவாழ் ஏழைமக்கள்
- கொடுவெயில் குளிர்மழைக்குத் குந்திடக் குடிசை உண்டோ?
- மக்கட்கே வானை என்றும் மடக்கிநீ அனுப்பி வைத்தாய்
- மக்கட்கே ஆறு வற்றாத அருவி தந்தாய்
சுரதா
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்பெயர் = இராசகோபாலன்
- ஊர் = பழையனூர்
- பெற்றோர் = திருவேங்கடம், சண்பகம் அம்மையார்
சிறப்பு பெயர்கள்:
- உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
- கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
- தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
- கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
- கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி)
படைப்புகள்:
- தேன்மழை(கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு)
- சிரிப்பின் நிழல்(முதல் கவிதை)
- சாவின் முத்தம்
- உதட்டில் உதடு
- பட்டத்தரசி
- சுவரும் சுண்ணாம்பும்
- துறைமுகம்
- வார்த்தை வாசல்
- எச்சில் இரவு
- அமுதும் தேனும்
- தொடா வாலிபம்
கட்டுரை:
- முன்னும் பின்னும்
இதழ்:
- காவியம்(முதல் கவிதை இதழ், வார இதழ்)
- இலக்கியம்(மாத இதழ்)
- ஊர்வலம்(மாத இதழ்)
- சுரதா(மாத இதழ்)
- விண்மீன்(மாத இதழ்)
குறிப்பு:
- பாரதிதாசனுக்கு தாசனாக விளங்கியதால் சுப்புரத்தினதாசன் என்பதை சுரதா என மாற்றிக்கொண்டார்
சிறப்பு:
- தமிழக அரசின் முதல் பாவேந்தர் நினைவுப் பரிசு பெற்றவர்
- வ.ரா(வ.ராமசாமி) = மற்றொரு பாரதி பிறந்து விட்டான்
மேற்கோள்:
- தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்
- தடைநடையே அவர் எழுத்த்தில் இல்லை வாழைத்
- தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கள் உண்டு
- படுக்கவைத்த வினாக்குறி போல்
- மீசை வைத்த பாண்டியர்கள்
- வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
- எதுகை வரல்போல் அடுத்து வந்தால், அத்தி
- என்பானோ மோனனையைப் போல் முன்னே வந்தான்
கண்ணதாசன்
வாழ்க்கைக் குறிப்பு:
- இயற்பெயர் = முத்தையா
- ஊர் = இராமநாதபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டி
- பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
- காலம் = 1927-1981
புனைப் பெயர்:
- காரை முத்துப் புலவர்
- வணங்காமுடி
- கமகப்பிரியா
- பார்வதிநாதன்
- துப்பாக்கி
- ஆரோக்கியசாமி
வேறு பெயர்கள்:
- கவியரசு
- கவிச்சக்ரவர்த்தி
- குழந்தை மனம் கொண்ட கவிஞர்
படைப்புகள்:
- மாங்கனி
- ஆட்டனத்தி ஆதிமந்தி
- கவிதாஞ்சலி
- பொன்மலை
- அம்பிகா
- அழகு தரிசனம்
- பகவாத் கீதை விளக்கவுரை
- ஸ்ரீ கிருஷ்னகவசம்
- அர்த்தமுள்ள இந்துமதம்
- பாரிமலைக் கொடி
- சந்தித்தேன் சிந்தித்தேன்
- அனார்கலி
- தெய்வ தரிசனம்
- இயேசு காவியம்(இறுதியாக எழுதிய காப்பியம்)
- பேனா நாட்டியம்
நாவல்கள்:
- சேரமான் காதலி(சாகித்ய அகாடமி விருது)
- குமரிக் காண்டம்
- வேலன்குடித் திருவிழா
- விளக்கு மட்டுமா சிவப்பு
- ஆயிரங்கால் மண்டபம்
- சிங்காரி பார்த்த சென்னை
- ஊமையான் கோட்டை
- இராஜ தண்டனை
- சிவகங்கைச் சீமை
தன் வரலாறு:
- வனவாசம்
- மனவாசம்
இதழ்:
- தென்றல்
- கண்ணதாசன்
- சண்டமாருதம்
- முல்லை
- தென்றல் திரை
- கடிதம்
- திருமகள்
- திரைஒளி
- மேதாவி
குறிப்பு:
- திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல்கள் எழுதியுள்ளார்
- இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த கண்ணே கலைமானே பாடலாகும்
- சேலம் மாவட்டம் சலகண்டாபுரம்(சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்
சிறப்பு:
- தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
- சௌந்திரா கைலாசம் = தடுமாறு போதையிலும் கவிபாடும் மேதை அவன்
மேற்கோள்:
- காலைக் குளித்தெழுந்து
- கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
- கருநாகப் பாம்பெனவே
- கார்கூந்தல் பின்னலிட்டு
- போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
- தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
- வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
- காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?
- மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
- மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
- ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
- அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?
உடுமலை நாராயணக்கவி
- இவரின் ஊர் = பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பூளவாடி
- இவரின் குரு = உடுமலை முத்துசாமி கவிராயர்
- நீதிபதி கோகுலக்கிரிஷ்ணன் அவர்கள் தலைமையில் இவருக்கு “சாகித்ய ரத்னாகர் விருது” வழங்கப்பட்டது
- “கலைமாமணி” விருது பெற்றுள்ளார்
- தமிழக அரசு இவருக்கு அவர் ஊரில் நினைவு மண்டபம் எழுப்பியுள்ளது
- நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர்
- சீர்திருத்தக் கருத்துக்களைத் முதன் முதலில் திரைப்படத்தில் புகுத்தியவர்
- இவரை “பகுத்தறிவு கவிராயர்” எனப் போற்றுவர்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
- இவரை “மக்கள் கவிஞர், பொதுவுடைமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்” எனப் போற்றுவர்
- பெற்றோ = அருணாசலம், விசாலாட்சி
- இவரின் ஊர் = செங்கப்படுத்தான் காடு
- பாரதிதாசனால் “எனது வலது கை” எனப் புகழப்பட்டவர்
- உடுமலை நாராயகவி இவரை “அவர் கோட்டை, நான் பேட்டை” எனப் புகழ்ந்தார்
- இவர் எழுதிய மொத்தப்பாடல்கள் = 56
மருதகாசி
- பெயர்: அ.மருதகாசி
- பிறந்த ஊர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலக்குடிகாடு
- பெற்றோர்: அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
- சிறப்பு: திரைக்கவித் திலகம்
- காலம்: 13.02.1920 – 29.11.1989
- “திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தளிப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
- அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.
- 13 வயதிலேயே திரைப்படப்பாடல் எழுதியவர்
- இவரின் முதல் பாடல் = காமன் பண்டிகை
- கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்
- “திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் = குடந்தை வாணி விலாச சபையினர்
- இவரின் ஆசிரியர் = இராசகோபாலையர்
- இவரின் “மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது
Previous article
Next article
Leave Comments
Post a Comment