காந்தியம் முக்கிய குறிப்புகள்.
*#காந்தியம்*
============================
வினா விடை வடிவில்
============================
1) உலகம் உய்ய உற்றவழி கூறும் நூல்?
சத்திய சோதனை
============================
2) காந்தியடிகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது படித்த நாடக நூல்?
சிரவண பிதுர்பத்தி
============================
3) தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை: தீமை செய்தவர்க்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு – இது எந்த மொழிப்பாடல்?
குஜராத்தி மொழி
============================
4) இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தினை காந்தியடிகளுக்குள் விதைத்த பாடல்?
தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை – என்ற குஜராத்தி மொழிப்பாடல்
============================
5) பார்வையற்ற தன் தாய் தந்தையரைக் காவடியில் தூக்கிச் செல்லும் காட்சி அமைந்துள்ள நாடகம்?
சிரவண பிதுர்பத்தி
============================
6) அரிச்சந்திரனை ஒரு பொய் பேசவைக்கவேண்டும் என்பதற்காகவே பல இன்னல்களுக்கு உள்ளாக்கியவர்?
விசுவாமித்திரர்
============================
7) காந்தி, தான் ஒரு சத்தியவானாக இருக்கவேண்டும் என்று உறுதிகொண்ட நாடகம்?
அரிச்சந்திரன்
============================
8) தீயவனை எதிர்க்காதே; அவனிடமுள்ள தீமையை எதிர்த்து நில்; பகைவனிடமும் அன்பு பாராட்டு என்று கூறும் நூல்?
பைபிள்
============================
9) காந்தியடிகள் எந்த நூலை படித்ததன்மூலம் மனவுறுதியைப் பெற்றார்?
பகவத்கீதை
============================
10) உருசிய அறிஞர்?
தால்சுதாய்
============================
11) உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு – என்ற நூலின் ஆசிரியர்?
தால்சுதாய்
============================
12) உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்ற நூலில் தால்சுதாய் எந்த திருக்குறளை மொழிபெயர்த்து எழுதியிருந்தார்?
இன்னா செய்தார்க்கும்
============================
13) காந்தியடிகள் திருக்குறள்மீதும், தமிழ்மீதும் பற்றுகொள்ள காரணம்?
இன்னா செய்தார்க்கும் என்ற குறள்
============================
14) அன்பு, உண்மை, உறுதி, இன்னா செய்யாமை ஆகிய உயர் பண்புகள் ஆகியவை இளம்பருவத்திலேயே எவருக்கு இயல்பாய் அமைந்தன?
காந்தியடிகள்
============================
15) மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது, அதனை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாகவும் பிறருக்கு துன்பம் தராததாகவும் இருக்கவேண்டும் – என்றவர்?
காந்தியடிகள்
============================
16) வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது – என்றவர்?
காந்தியடிகள்
============================
17) மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த சான்றோர்?
காந்தியடிகள்
============================
18) கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றவர்?
காந்தியடிகள்
============================
19) பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதியவர்?
காந்தியடிகள்
============================
20) காந்தியடிகள் எங்கு வந்தபோது ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதை கண்டார்?
தமிழ்நாட்டுக்கு வந்தபோது
============================
21) எப்போதிலிருந்து காந்தியடிகள் மேலாடை அணிவதை நிறுத்திக்கொண்டார்?
தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதை கண்டபோதிலிருந்து
============================
22) காந்தியடிகள் அரையாடையுடன் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டபோது அப்போதைய இங்கிலாந்தின் முதன்மையமைச்சர்?
சர்ச்சில்
============================
23) காந்தியடிகளை அரைநிர்வாணப் பக்கிரி என்று ஏளனம் {கேலி (அ) கிண்டல்} செய்தவர்?
சர்ச்சில்
============================
24) மனிதனின், பெருமையை மனிதனுக்கு உணர்த்தி, எளியவர்களிடம் மறைந்திருக்கும் அருமையை உணர்த்தி அவர்களை வரலாற்று நாயகர்களாக மாற்றியவர்?
காந்தியடிகள்
============================
25) என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும், மனிதாபிமானமும் ஒன்றுதான் என்று கூறியவர்?
காந்தியடிகள்
============================
26) நான் ஒரு தேசபக்தன், அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும்தான் – என்று கூறியவர்?
காந்தியடிகள்
============================
27) நான் மொழியால் குஜராத்தியன்; நாட்டால் இந்தியன்; உலக நிலையில் உலகன்; ஆனால், மனிதனாக இருத்தல் வேண்டும்; மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது என்று எண்ணவேண்டும் – என்று விழைந்தவர்?
காந்தியடிகள்
============================
28) உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதாராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும் – என்றவர்?
காந்தியடிகள்
============================
29) தென்ஆப்ரிக்காவில் காந்தியடிகளை சிறையில் அடைக்க காரணம்?
அங்கு இந்தியர்க்கு எதிரான கருப்புச்சட்டங்களை கொளுத்தியதால்
============================
30) தென்ஆப்ரிக்காவில் காந்தியடிகளை சிறையில் அடைத்த ஆளுநர்?
ஸ்மட்ஸ்
Leave Comments
Post a Comment