சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.
அ ) www.mhc.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் . ஏனைய முறைகளான அஞ்சல் , கூரியர் , பதிவு அஞ்சல் , மின்னஞ்சல் மற்றும் நேரடியாக சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் , எச்சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது இது தொடர்பான கடிதப் போக்குவரத்து எந்த சூழ்நிலையிலும் மேற்க்கொள்ளப்படமாட்டாது .
ஆ ) விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கு முன்பாக , அவர்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் Page 12
ஆட்சேர்ப்பு இணையதளத்தில் https://www.mhc.tn.gov.in சோப்தார் , அலுவலக உதவியாளர் போன்ற இதர பதவிகளுக்கான ' அறிவிக்கை ' மற்றும் ' பொதுவான அறிவுறைகளை ' பின்பற்றி விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் .
இ ) விண்ணப்பதாரர்கள் கணினி அல்லது மடிக்கணினியின் வாயிலாக மட்டுமே இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் . அலைபேசி ( Cellular Phone ) அல்லது வரைபட்டிகை ( Tab ) யின் மூலம் விண்ணப்பிக்க இயலாது . ஏனெனில் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்வதற்கு கணினி மற்றும் மடிக்கணினியின் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய ஏதுவாக இருக்கும் .
ஈ ) அனைத்து பிரிவுகளை சார்ந்த , விண்ணப்பத்தாரர்கள் தங்களது அடிப்படை விவரங்களை பதிவு செய்வது கட்டாயமாகும் . பின்னர் அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க , ஆட்சேர்ப்பு இணையத்தளத்தில் பரிந்துரைக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் . கட்டண விலக்கு பெற்றவர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை . “ வீட்டு உதவியாளர் ” , “ ஓட்டுநர் " மற்றும் “ தோட்டக்காரர் ” பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் , இவ்வறிக்கையில் கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமிருந்தால் அவர்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வழங்கிய முந்தைய அறிவிப்புகளுக்கு ஏற்கனவே பதிவுசெய்த உள்நுழைவு விவரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் , மேலும் அவர்கள் இந்த அறிவிக்கைக்கு மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை . இருப்பினும் , “ மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நேர்முக உதவியாளர் " ( Personal Assistant the Hon'ble Judges ) , “ பதிவாளர்களின் நேர்முக உதவியாளர் ” ( Personal Assistant to the Registrars ) மற்றும் “ துணைப்பதிவாளர்களின் நேர்முக எழுத்தர் ” ( Personal Clerk to the Deputy Registrars ) ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் , இவ்வறிக்கையில் கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமிருந்தால் அவர்கள் மீண்டும் இவ்வறிக்கைக்கு பதிவு செய்து பின்னர் விரும்பிய பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முழு விபரம் அறிய
Leave Comments
Post a Comment