Ads Right Header

TNPSC _ History & Geo Boxes Important pdf...

 


பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு 

இஸ்ரேல் என்ற தேசம் 1948 இல் உருவாவதற்கு முன் பாலஸ்தீனில் வாழ்ந்த அரேபியர்களுக்கும் அவர்கள் வம்சாவளியினருக்குமாக உருவாக்கப்பட்ட ஒரு பரந்த அமைப்பு இதுவாகும் . இரகசியமாக செயல்பட்டுவந்த எதிர்ப்பு இயக்கங்கள் தங்களை ஒருங்கிணைக்க 1964 இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும் . எனினும் 1967 ஜுனில் நடந்த அரபு இஸ்ரேல் போருக்குப் பின்பே இவ்வமைப்பு கவனத்தை ஈர்க்கலாயிற்று . இவ்வமைப்பு 1960 கள் , 70 கள் , 80 களில் இஸ்ரேலுக்கு எதிராக நேரடி கொரில்லாப் போரை நிகழ்த்தி வந்தாலும் 1990 களில் அந்நாட்டோடு அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது . இவ்வமைப்பின் முக்கிய தலைவர் யாசர் அராபத் ஆவார் .

 யாசர் அராபத் ( 1924-2004 ) 

யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் செயற்குழுவிற்கு 1969 இல் தலைமையேற்று 2004 இல் அவர் இறக்கும் வரை அப்பொறுப்பில் வீற்றிருந்தார் . அவர் அனைத்துப் பாலஸ்தீன அரபு கொரில்லாப்படைகளுக்கும் முதன்மைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார் . இக்காலகட்டத்தில் பாலஸ்தீனியப் பிரிவினை வாதிகள்மன்னர்ஹுசைனின்அரசைக்கவிழ்க்க முயன்றதோடு பாலஸ்தீன விடுதலை அமைப்பு ஜோர்டான் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது . எனினும் அராபத்தும் அவர்தம் பாலஸ்தீன விடுதலை அமைப்பும் பெய்ரூட்டைச் சென்று சேரவும் அந்நகரம் 1982 வரை இஸ்ரேலுக்கு எதிரான செயல்பாடுகளுக்குத் தளமாகவும் அமைந்தது . ஒரு தலைப்பாகையுடனும் மறைவாக அவர் வைத்திருந்த துப்பாக்கியும் ஆலிவ் மரக்கிளையின் பகுதியும் அவர்தம் இராணுவச்சீருடையும் காண்போர் மனதில் பாலஸ்தீனப் பிரச்சனையின் தீவிரத்தை நினைவூட்டுவதாக அமைந்தது . அவர் 2 ஏப்ரல் 1989 அன்று பாலஸ்தீன விடுதலை அமைப்பின் நடுவண்குழுவால் பாலஸ்தீன தேசத்தின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .


முழுமையாக காண

History Boxes pdf

Touch Here

Geo Boxes pdf

Touch Here


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY