Ads Right Header

Jan 2021 CA (Tamilnadu Govt)


ஐ.நா. அமைப்பில் இடம்பெறுகிறது இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை 

ஐ.நா. வின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவும் ஒரு பகுதியாக விரைவில் இடம்பெறவுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் ( என்டிஆர்எஃப் ) இயக்குநர் எஸ் . என் . பிரதான் தெரிவித்தார் . 

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு இந்த அங்கீகாரத்தை வழங்கும் . 

ஐ.நா.வின் கீழ் செயல்படும் இந்தக் குழுவானது 90 - க்கும் மேற்பட்ட நாடுகள் , அமைப்புகளைக் கொண்டு நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்பு தொடர்பான விஷயங்களை கையாண்டு வருகிறது . 

ஐ . நா . குழுவானது உலகெங்கிலும் உள்ள பேரிடர் மீட்புக் குழுக்களைத் தரப்படுத்துகிறது . 

பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் , இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை 2006 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . 

 ஜி 7 மாநாடு 

அமெரிக்கா , பிரிட்டன் , கனடா , பிரான்ஸ் , ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் ஆகிய நாடுகளை ப உள்ளடக்கிய ஜி 7 அமைப்பின் மாநாடானது , வரும் ஜுன் மாதம் 11 - ஆம் தேதி முதல் 13 - ஆம் தேதி வரை பிரிட்டனின் கடற்கரை நகரான கார்ன்வாலில் நடைபெறவுள்ளது .

 " அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்குமாறு இந்தியா , தென் கொரியா , ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்திருந்தது . - நடப்பாண்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பையும் , 2023 - ஆம் ஆண்டில் ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பையும் ஏற்கவுள்ள இந்தியா , ஜி 7 போன்ற சர்வதேச அமைப்புகளில் முக்கியப் பங்கை வகிக்கும் .

Jan 2021 CA

Touch Here

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY