Ads Right Header

Jan 2021 CA - Shankar IAS Academy.


TNPSC துளிகள் 

7 வது உலகத் தமிழ்ப் பொருளாதாரக் கருத்தரங்கு மற்றும் மெய்நிகர் உலகப் பொருளாதார மாநாடு 2020 ஆகியவை காணொலி வாயிலாக புதுச்சேரி முதல்வரான நாராயண சுவாமி அவர்களால் துவக்கி வைக்கப் பட்டது . இது உலகத் தமிழர் பொருளாதார அமைப்பு மற்றும் மதராஸ் மேம்பாட்டுச் சமூகம் ஆகியவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்டன.

இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டர்களான நிகால் சரின் , D குகேஷ் மற்றும் பெண் சர்வதேச மாஸ்டரான ரக்சிதா ரவி ஆகியோர் ஒவ்வொருவரும் FIDE ஆன்லைன் உலகக் கேடட்ஸ் மற்றும் இளைஞர் விரைவு செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்று தங்களது வெற்றியைப் பதிவு செய்துள்ளனர் . 

உலகளாவிய குடும்ப தினம் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடத்திலும் ஜனவரி 1 ம் தேதியன்று ஒரு உலகளாவிய அமைதி மற்றும் பகிர்வு தினமாக கொண்டாடப் படுகிறது.

ஆந்திர மாநில அரசு ' பெடலண்டரிகி இல்லு " ( அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள் ) என்ற ஒரு திட்டத்தின் கீழ் வீட்டு மனை விநியோகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

சீரம் இந்தியா நிறுவனமானது குழந்தைகளுக்காக வேண்டி உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட நாட்டின் முதல் நிமோனியா தடுப்பூசியான நிமோசில் ( PNEUMOSIL ) என்ற ஒரு தடுப்பூசியை அறிமுகப் படுத்தியுள்ளது . 

இந்திய எண்ணெய்க் கழகம் ஆனது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் விசையாழிகளுக்காக வேண்டி { turbines ) நாட்டின் முதல் தொலைநிலைக் கண்காணிப்பு முறையை அறிமுகப் படுத்தியுள்ளது , - ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தை BHEL மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான BGGTS ( BHEL - GE Gas Turbine Services ) செயல்படுத்துகிறது . 

நாட்டின் முதல் எத்தனால் ஆலையை பொது - தனியார் கூட்டின் கீழ் தனது மாநிலத்தில் அமைக்கும் ஒரு ஒப்பந்தத்தில் சத்தீஸ்கர் அரசானது கையெழுத்து இட்டு உள்ளது . 

மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களுக்கான இந்தியாவின் முதல் பூங்கா ( Pollinatar park ) ஆனது உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹால்டுவானி என்ற இடத்தில் நிறுவப் பட்டுள்ளது . 

மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களில் தேனீக்கள் , பறவைகள் , பட்டாம்பூச்சிகள் , அந்துப் பூச்சிகள் , வண்டுகள் , குளவிகள் , வௌவால்கள் மற்றும் சிறிய பாலூட்டிகள் ஆகியவை அடங்கும்.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று ஐரோப்பிய ஒன்றியம் -இங்கிலாந்து வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தமான பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் கையெழுத்திட்டனர் . 

விண்வெளியை அமைதியாகப் பயன்படுத்த இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக இந்தியாவிற்கும் பூடானிற்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது . 

வெளிப்புற விண்வெளி ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் சபை 1963 ஆம் ஆண்டில் நிறைவேற்றியது . 

ஆஸ்திரேலிய அரசானது அதன் பழங்குடி மக்களைக் கௌரவிப்பதற்காக வேண்டி அதன் தேசிய கீதத்தைத் திருத்துகிறது.

முழுமையாக காண

இங்கே சொடுக்கவும்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY