Ads Right Header

இந்திய அரசியலமைப்பு.

Telegram link

பிரிட்டிஷ் இந்திய                                அரசாங்கச் சட்டம் ( 1935 ) : 

1. இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ் மாகாணங்களையும் இணைய விருப்பமுள்ள சுதேச அரசுகளையும் உள்ளடக்கிய " அனைத்திந்திய கூட்டரசு ” அமைப்பு ஒன்று உருவாக வழிசெய்தது . எனினும் , சுதேச அரசுகள் உடன்படாததால் கூட்டரசு உருவாகவில்லை . 

2. இதுவரை இந்தியா நிர்வகிக்கப்பட்டு வந்த ஓரடுக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது . 

3. இச்சட்டத்தின்படி அரசாங்கத்தின் அதிகாரங்கள் மூன்று பட்டியல்களாகப் பிரிக்கப்பட்டன . கூட்டாட்சி ( மத்திய ) பட்டியல் , மாகாணப்பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் என்பனவாகும் . 

4. மாகாண அரசுகள் , மாகாணப் பட்டியலில் உள்ள பணிகளில் மத்தியக் கட்டுப்பாடு ஏதுமின்றி நிர்வாகம் மற்றும் சட்டமியற்றும் பணிகளை மேற்கொள்ளக் கூடிய தனியொரு சட்டப்பூர்வ அமைப்பாக உருப்பெற்றன . 

5. மத்திய அரசாங்கத்தில் இரட்டை ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது . ஒதுக்கப்பட்ட துறைகள் தலைமை ஆளுநர் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் கீழும் , மாற்றப்பட்ட துறைகள் அமைச்சரவையின் பொறுப்பிலும் விடப்பட்டன . 

6. மாகாணங்களில் இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டு மாகாண சுயாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது . 

7. மாகாண அரசாங்கம் தேர்ந்தெடுக்கப் -பட்ட அமைச்சர்களின் பொறுப்பில் விடப்பட்டது . அமைச்சரவை சட்டமன்றத்திற்கு கூட்டுப்பொறுப்பு உடையதாகும் . 

8. ஆளுநர் நிர்வாகப் குழுவின் தலைவராக இருப்பார் . அவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படுவார் என விதிமுறைகள் செய்யப்பட்டன . 

9. வங்காளம் , சென்னை , பம்பாய் , ஐக்கிய மாகாணம் , பீகார் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்கள் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன . 

10. ஒரு தலைமை நீதிபதி மற்றும் ஆறு நீதிபதிகளைக் கொண்ட கூட்டாட்சி நீதிமன்றம் டெல்லியில் நிறுவப்பட்டது . 

இந்திய விடுதலைச் சட்டம் : ( 1947 ) 

1. இந்தியா , பாகிஸ்தான் என இரண்டு குடியேற்ற நாடுகளை ( டொமினியன் ) உருவாக்க 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டது . இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் பேரரசியின் பொறுப்புகளும் , இந்தியச் சுதேச அரசுகள் மீதான மேலாதிக்கம்  1947 ஆகஸ்ட் 15 தேதியிலிருந்து காலாவதியாகிவிடும் . 

2. இரண்டு டொமினியன்களில் ஏதேனும் ஒன்றில் சுதேச அரசுகள் இணைந்து கொள்ளலாம் . இரண்டு டொமினியன் -களுக்கும் தனித்தனியாக இரண்டு கவர்னர் ஜெனரல்களை பிரிட்டிஷ் பேரரசி நியமிப்பார் . 

3. இரண்டு டொமினியன்களுக்கும் தனித்தனியாக சட்டமன்றங்கள் இருக்கும் . பிரிட்டிஷ் நாடாளுமன்றத் -தின் தலையீடு இன்றிச் சட்டமியற்றும் முழு அதிகாரம் அவற்றுக்கு உண்டு . 

4. டொமினியன்களை ஆட்சிபுரிவதற் -கான தற்காலிக ஏற்பாடாக , இரண்டு டொமினியன்களின் அரசியல் நிர்ணய சபைகளுக்கும் டொமினியன் நாடாளுமன்றத்திற்கான அந்தஸ்து அளிக்கப்பட்டது . 

5. பஞ்சாப் , வங்காளம் மாகாணங்களின் எல்லைகளை வரையறுப்பதற்கு எல்லை ஆணையம் ஏற்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டது . 

6. இந்தியச் சுதந்திர சட்டம் 1947 யை முழுமையாக அமல்படுத்துவதற்குத் தேவையான விஷயங்கள் குறித்து தற்காலிக பிறப்பிக்க கவர்னர் ஜெனரலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது . 

முழுவதும் காண

இங்கே சொடுக்கவும்




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY