Ads Right Header

Group 4 _ தமிழக அரசு வெளியிட்ட PDF வடிவிலான குறிப்புகள்.

 


குறுந்தொகை 

குறுமை தொகை = குறுந்தொகை இது எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகக் குறிப்பிடும் நூல் , இது அகப்பொருள் பற்றிய நூலாகும் .

 ' நல்ல ' என்னும் அடைமொழி கொண்டநூல் குறைந்த அடிகளை உடைய பாக்களால் ஆனது என்பதால் இதனைக் குறுந்தொகை என்று கூறப்படுகிறது . 

இதன் அடிளயவு நான்கு அடி முதல் எட்டு அடி வரை ஆகும் . எனினும் 307 , 391 ஆகிய இரண்டு பாடல்கள் ஒன்பது அடிகளால் பாடப்பட்டுள்ளன . . 

இருநூற்று ஐவர் ( 205 ) பாடிய இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ . * தொகுப்பித்தவர் யாரெனத் தெரியவில்லை * யார் பாடியது என அறிய முடியாத வகையில் 10 பாக்கள் உள்ளன.

இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் " பாரதம் பாடிய பெருந்தேவனார் இக்கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியது . கடவுள் வாழ்த்து உட்பட இதில் 402 ( 401 + 1 ) பாடல்கள் உள்ளன .

இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் சிவை . தாமோதரம் பிள்ளை . ஆராய்ச்சிப் பதிப்பு உவே . சாமிநாதர் . - உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டி எடுத்தாளப்பெற்ற சங்க இலக்கிய நூல் இதுவேயாகும் . 

* சங்க நூல்களுள் குறுந்தொகையே முதன் முதலில் தொகுக்கப்பெற்ற நூலாகும் . குறுந்தொகைப் பாடல்களின் வாயிலாகப் பண்டைத் தமிழ் மக்களின் ஒழுக்கம் , காதல் வாழ்க்கை , பழக்க வழக்கங்கள் , நாகரிகம் , மகளிர் மாண்புகள் , அற உணர்வுகள் முதலியனவற்றை அறியலாம் . 

முழுமையாக காண

இங்கே சொடுக்கவும்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY