Feb 8,9,10,11,12 (Current Affairs 2021)
தமிழ்நாடு
கிருபானந்த வாரியார் பிறந்த நாள் : அரசு விழா திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது இவர் ஆகஸ்ட் 25 1906 ம் ஆண்டு அன்று வேலூர் மாவட்டத்தில் பிறந்தார் இவருக்கு அருள்மொழி அரசு , திருப்புகழ் ஜோதி என்ற சிறப்பு பெயர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது .
சைபர் கிரைம் காவல் நிலையங்கள் இணையத்தில் நடக்கும் பல்வேறு குற்றங்களை தடுப்பதற்காக சைபர் குற்ற காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய அளவில் சைபர் குற்றங்களில் முதலிடத்தில் கர்நாடக மாநிலமும் , இரண்டாமிடத்தில் உத்தரபிரதேச மாநிலமும் மூன்றாம் இடத்தில் தமிழகமும் உள்ளன .
இத்திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனியாக சைபர்கிரைம் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன .
மேலும் தமிழகத்தில் உள்ள ஏழு முக்கிய பெருநகரங்களில் இதற்கென தனியாக பிரத்தியேக காவல் நிலையம் ஏற்படுத்தப்பட உள்ளது இதன்படி சென்னை , கோவை , திருச்சி , மதுரை , சேலம் , திருப்பூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் ஏற்படுத்தப்பட உள்ளன தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றங்கள் தொடர்பான 46 சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டம்
கரோணா நோய் தொற்று காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியோர் தொழில் தொடங்கும் விதமாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
” மெடி சிட்டி : காரைக்கால் ”
காரைக்காலில் ரூபாய் 2000 கோடி செலவில் மெடி சிட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது இந்த திட்டத்தை சிங்கப்பூர் , துபாய் , அமெரிக்க நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்த உள்ளன + இதில் அலோபதி , சித்தா , ஹோமியோபதி , ஆயுர்வேதம் , யுனானி , யோகா , இயற்கை வைத்தியம் மற்றும் மூலிகை செடிகள் வளர்ப்பு போன்றவை மேற்கொள்ளப்படவுள்ளன.
Feb 8,9,10 CA
Feb 11,12 CA
Whatsapp link Touch Here
Leave Comments
Post a Comment