Ads Right Header

தமிழக அரசு வெளியிட்டுள்ள டிசம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்.


டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020 '

டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020 - இல் மின் ஆளுகையில் சிறப்பாகப் பணியாற்றிய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழகத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது . 

மின் ஆளுகையின் மூலம் சிறந்த சேவைகளை வழங்கிய அரசின் திட்டங்கள் , அமைச்சகங்கள் , துறைகள் , மாநிலங்கள் , மாவட்டங்கள் என ஏழு பிரிவுகளில் மொத்தம் 24 விருதுகள் வழங்கப்பட்டன . 

ஹரியானா , தமிழ்நாடு , உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களுக்கு சிறந்த மின் ஆளுகைக்கான மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன . 

ஆரோக்கிய சேது மற்றும் மின் அலுவலகம் ஆகியவற்றிற்கு நடுவர் தேர்வு விருதுகள் வழங்கப்பட்டன . 

 ‘ நரேந்திர தபோல்கர் ' நினைவு விருது பகுத்தறிவாளரும் , மூடநம்பிக்கை ஒழிப்புப் ப போராளியுமான டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதினை இந்த ஆண்டு ( 2020 ) ஆசிரியர் கி . வீரமணிக்கு வழங்குவதாக மராட்டிய அறக்கட்டளை அறிவித்துள்ளது . |

 சங்பரிவாரால் சுட்டுக் கொல்லப்பட்ட டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில் பகுத்தறிவுப் பிரச்சாரம் , மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மராட்டிய அறக்கட்டளை விருது வழங்கப்பட்டு வருகிறது . - டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதுப் பட்டயமும் , ரூபாய் ஒரு லட்சம் பணமும் வழங்கப்பட உள்ளது . 

உலக பாரம்பரிய நகரங்களின்  பட்டியலில் குவாலியர் 

மத்திய பிரதேசத்தின் குவாலியர் , ஓர்ச்சா ஆகிய நகரங்களை உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்ந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது . 

ஐ.நா. சபையின் கல்வி , அறிவியல் , கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அமைதியையும் , பாதுகாப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது . 

" குவாலியர் கோட்டை 9 - ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும் . இந்த ராஜ்ஜியத்தை குர்ஜார் பிரதிஹார் ராஜ்வன்ஷ் , தோமர் , பாகேல் கச்வாஹா , சிந்தியா ஆகியோரால் - குவாலியர் கோட்டை நகரத்தில் சமணர் சிலைகளும் , உயரமான கோட்டைச் சுவர்களும் உள்ளன . 

15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குஜாரி மகால் அரண்மனை தொல்பொருள் அருங்காட்சியகமாகக் காட்சியளிக்கிறது . போல ஓர்ச்சா நகரத்திலுள்ள கோயில்களுக்கும் அரண்மனைகளும் பிரபலமானவை . 

16 ஆம் நூற்றாண்டில் லா ராஜ்ஜியத்தின் தலைநகராக ஓர்ச்சா திகழ்ந்தது . இங்குள்ள ராஜ் மகால் , ஜஹாங்கிர் மகால் , ராம்ராஜா கோயில் , ராய் பிரவீன் மகால் , லட்சுமிநாராயண் கோயில் ஆகியவை இந்த நகரத்தின் புகழ்பெற்ற இடங்களாக விளங்குகின்றன.

முழுமையாக காண

இங்கே சொடுக்கவும் 

Telegram link

Touch Here

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY