ஐந்தாண்டு திட்டங்களும், அதன் மதிப்பீடும் PDF வடிவில்...
பொருளாதாரத் திட்டமிடல் ( Economic Planning ) > பொருளாதாரத் திட்டமிடல் திட்டமிடல் என்பது இன்றைய வளரும் நாடுகளுக்கு இன்றியமையாததாகும் . வளர்ந்த நாடுகள் பொருளாதார நிலை பாட்டிற்காகவும் , வளரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகவும் திட்டமிடு கின்றன . திட்டமிடுதலின் வரலாறு - சோவியத் ரஷ்யாவில் 1917 ம் ஆண்டில் ரஷ்ய புரட்சிக்கு பின்பு 1918 முதல் 1921 ஆம் ஆண்டு வரை கம்யூனிசப் போர் நடந்தது . அதன் பின்பு 1921 முதல் 1924 வரைபுதிய பொருளாதாரக்கொள்கைகள் நடப்பில் இருந்தன . 1924 முதல் அரசு கிடைக்கக் கூடிய வளங்களைப் பற்றி விரிவான மேற்கொண்டு 1928 ஆம் ஆண்டு தனது முதலாவது ஐந்தாண்டு திட்டத்தினை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டது . 1920 ம் ஆண்டு ஜோசப் சோவியத் ரஷ்யாவில் குடியானவர்கள் சமுகத்திலிருந்து சக்தி வாய்ந்த தொழிற்துறையாக மாற்ற டு ஐந்தாண்டு திட்டத்தை நோக்கமாக கொண்டு அறிமுகப்படுத்தினர் .
1930 ம் ஆண்டு ஸ்டாலின் பல தீவிரமான பொருளாதார கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தார் . இது சோவியத் ரஷ்யாவை வேளாண்துறை மற்றும் தொழில் துறையில் பல மாற்றங்களை செய்தது . முதலாலித்துவ பொருளாதார கொள்கையிலிருந்து பொருளாதாரத்திற்கு மாற்றியது . திட்டமிடுதலின் பிரச்சனைகள் > திட்டமிடுதலுக்கு ஒரு வலிமை மிக்க , தகுதிவாய்ந்த மற்றும் ஊழலற்ற ஆட்சி செய்தல் அவசியமானது என்று ஆர்தர் லூயிஸ் குறிப்பிடுகிறார் . ஆனால் பெரும்பாலான வளர்ச்சி குறைந்த நாடுகளில் அத்தகைய நல்லரசுகள் இல்லை . எனவே திட்டமிடுதலில் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகள் அதிக சிக்கல்களை சந்தித்தன . மேலும் வளரும் நாடுகளில் வேளாண்மையை சார்ந்த
நிலையும் , அதிக மக்கள் தொகை அழுத்தமும் திட்டமிடுதலில் வேறு முக்கிய பிரச்சனைகளாக இருந்தன . முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ( எ.கா. இங்கிலாந்து ) பகுதி சார்ந்த திட்டமிடல் ( Partial Planning ) காணப்படும் . சமத்துவப் பொருளாதாரத்தில் ( எ.கா. ரஷ்யா ) முழுமையானத் திட்டமிடப்பட்ட பொருளாதார அமைப்பு இருக்கும் . கலப்புப் பொருளாதாரத்தில் ( எ.கா. இந்தியா ) தனியார்துறை மற்றும் பொதுத்துறை இரண்டுமேதிட்டமிடுதலில் மிக முக்கியப் பங்கினை வகிக்கும் .
முழுமையாக காண
Leave Comments
Post a Comment