Ads Right Header

GROUP 1 TNPSC புதிய பயணம் _ ஆட்சியர் கல்வி



TNPSC தேர்வாணையம் சிறப்பான முறையில் குரூப்-1 தேர்வை நடத்தி முடித்தது அதற்கு வாழ்த்துக்கள்...


என்றுமில்லாத அளவிற்கு TNPSC  கேள்வித்தாள்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விமர்சனம் செய்யப்படுகிறது..


அதற்கான பதில் இதோ...


லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதும் பொழுது ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே வெற்றி அடைய முடிகிறது..


அதற்கு அடிப்படைக் காரணம் TNPSC  கேள்வி எடுக்கும் தன்மை. அது தற்போது யுபிஎஸ்சி தரத்திற்கு உயர்ந்துள்ளது அதற்கு வாழ்த்துக்கள்..


Options வடிவமைப்பதிலும் (I only,II, ONLY, I&IV ONLY என்பதில் )மற்றும் மொழிபெயர்ப்பில் அதிக கவனம் தேவை.. கடைசி கூட்டல் கழித்தல் வேலைகளை மாற்றி புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினால் சிறப்பு..


TNPSC தேர்வுகளில் நடப்பு நிகழ்வு எவ்வாறு கேட்கப்படும் என்பதற்கு தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளோம் அதை முதலில் கேளுங்கள்


https://www.facebook.com/groups/176862906011400/media/videos


TNPSC நடப்பு நிகழ்வு பொருத்தவரை விருதுகள் பற்றிய கேள்விகள் இடம்பெறும்..


அதில் சினிமா சம்பந்தமான விருதுகளும் கேள்விகளாக வரும்.


அத்தகைய சினிமா சம்பந்தமான விருதுகள் பற்றி நாம் படிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியது.  


I.)முதலில்

உலக அளவில் ஆஸ்கார், கோல்டன் குளோப், தொலைக்காட்சி விருதுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்..


II. இரண்டாவது இந்திய அளவில் சினிமா சம்பந்தமான விருதுகள் தாதா சாகிப் பால்கே விருது, சர்வதேச திரைப்பட விழாவில் கொடுக்கப்படும் விருது,film fare போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்..


III.மூன்றாவது  தமிழக அளவில் சினிமாவில்  பெறப்பட்ட முக்கிய விருதுகள், பெறப்பட்ட நபர், பெறப்பட்ட வரின் ஊர் ,பெறப்பட்ட திரைப்படம் பற்றி படிக்க வேண்டும்.


IV. அவ்வாறு படிக்கும் பொழுது திரைப்படத்தில் நடித்து விருது  வென்ற நடிகர், அந்த விருது கொடுக்கப்படும் இடம், படத்தின் பெயர், படத்தின் மையக்கரு (எ.கா life of pi movie) ,படத்தை இயக்கியவர்( எ.கா.ஸ்லம்டாக் மில்லியன்), படத்தை வெளியிட்டவர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் போன்றவற்றை மட்டும் படித்தால் போதும்..


V. அடுத்து 2021 செப்டம்பர் மாதம் தேர்வு நடப்பதாக வைத்துக் கொள்வோம் . கடைசி இரண்டு வருடத்தில் சினிமா சம்பந்தமான விருதுகளை இவ்வாறு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்..


இப்பொழுது நம் கதைக்கு வருவோம்..


2021 ஜனவரி 3 நடந்த குரூப் 1 கேள்வி


Q)தலை சிறந்த படைப்பான பரியேறும் பெருமாள்" என்ற தமிழ் திரைபடம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில்/கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும் 


(a) இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது. 


(b)இப்படம் மிகச்சிறந்த படம்' என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது 


c)இப்படம் திரு. மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுமத்தால்  வெளியிடப்பட்டது.


(A) (a) மட்டும் 

(B) (a) மற்றும் (b) மட்டும்

(C)  (a) (b) மற்றும் (c) 

(D) (c) மட்டும் 

(E) விடை தெரியவில்லை


இதில் 

*படத்தின் மையக் கருத்து,

*படம் பெற்ற விருது

*படத்தை இயக்கியவர்

*படத்தை வெளியிட்டவர்(producer)

பற்றிய கேள்விகள் இடம் பெற்றுள்ளது..


Group 1 தேர்வின் கேள்வி தரம் என்பது இதுதான்.


இதேபோன்று VAO ,GROUP 4 தேர்வுகளில் ஒருவரியில் கேள்வியில் வரும்..


அதாவது பிலிம்பேர் விருது பெற்ற  திரைப்படம் எது என்ற ஒற்றை வரியில் கேள்வி கேட்டு விடுவார்கள்..


இப்பொழுது டிஎன்பிஎஸ்சி கேள்வி எடுக்கும் தன்மையைப் பற்றி ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும்..


கீழே உங்களுக்கு  TNPSC  பழைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை 


1. வெற்றிமாறன் பற்றிய கேள்வி

2. ஆஸ்கார் விருது பெற்ற படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் பற்றிய கேள்வி,

3.தாதா சாகிப் பால்கே விருது பற்றி

4. படத்தின் பெயர் பற்றிய கேள்வி

@ படத்தின் நடிகர் பற்றிய கேள்வி

5. திரைப்பட விழா நடந்த இடம்


எவ்வாறு இதுவரை TNPSC கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என்பதை ஒரிஜினல் வினாத்தாள் கொண்டு தெளிவாக கொடுக்கிறோம்..


இதனைப் பார்த்து உண்மை தன்மையை அறிந்து கொள்ளுங்கள்..


TNPSC கேள்வித்தாளில் தரம் உயர்ந்து உள்ளதா? வேறு திசையில் செல்கிறதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..


மேலும் உங்களுக்கு தேவை அரசு பணி, அதற்கு தேர்வை சிறப்பாக எழுத வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதில் மட்டும் கவனம் செலுத்தவும்..


இப்படிக்கு..


🥳செல்வ ராம ரத்னம்.கு


4/01/2021

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY