Ads Right Header

Dec 2020 - CA Shankar IAS Academy.

 


TNPSC துளிகள் 

 தமிழ்நாடு மாநிலமானது தொடர்ந்து 6 வது முறையாக உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் என்ற விருதைப் பெற்றுள்ளது , சமீபத்தில் , மகாராஷ்டிர மாநில அரசானது மும்பையில் நீர் சுத்திகரிப்பு ( உப்பு நீக்கம் ) ஆலையை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது . தமிழ்நாடு , குஜராத் , ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு நீர் சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கும் 4 வது மாநிலம் மகாராஷ்டிரா ஆகும் . 11 வது தேசிய உறுப்பு தான தினமானது 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தினால் அனுசரிக்கப்பட்டது . ரஷ்யாவானது ஸிர்கோன் என்ற ஒரு மீயொலி வேக ஏவுகணையை ஆர்க்டிக் பகுதியில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது . இந்த ஏவுகணையானது மாக் 8 வேகத்தில் வெள்ளைக் கடலிலிருந்து பேரண்ட்ஸ் கடல் பகுதிக்கு ஏவப்பட்டது . பூடான் நாடானது ஜெர்மனியுடன் ராஜாங்க உறவுகளைத் தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது . கடந்த 7 ஆண்டுகளில் பூடான் பேரரசின் முதலாவது இராஜாங்க உறவுமுறை இதுவாகும் . மாதவிடாய் சுகாதாரத் துணிகள் , உறி பஞ்சுகள் ஆகியவற்றை இலவசமாக வழங்கும் உலகின் முதலாவது நாடு ஸ்காட்லாந்து ஆகும் . மாதவிடாய் காலப் பொருள்களுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டிற்கு எதிராக உலகில் இது போன்ற நடவடிக்கையை எடுத்திருக்கும் முதலாவது நாடு ஸ்காட்லாந்து ஆகும் * நியூஸிலாந்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் கௌரவ் சர்மா அவர்கள் அயல்நாட்டில் சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்த முதலாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாராளுமன்றவாதி என்ற சாதனையைப் படைத்துள்ளார் . இவர் முதலில் நியூசிலாந்தின் பூர்வாங்க மொழியான மௌரி என்ற மொழியிலும் அதன் பின்னர் சமஸ்கிருத மொழியிலும் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார் . * சமீபத்தில் நிலக்கரியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முதலாவது மற்றும் கடைசி அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்துள்ளது . பெரும்பாலான வளைகுடா நாடுகள் அதிக அளவு எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களைப் பெற்றுள்ளதால் தங்களின் மின்சாரத் தேவைகளை எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி ஆலைகளைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்கின்றன . மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையானது தற்போதைய நிதியாண்டில் அக்டோபர் மாதத்தின் முடிவில் வருடாந்திர நிதிநிலைக் கணிப்பில் ஏறத்தாழ 120 % அல்லது ரூ 9.53 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது . ரோசர்பே ஆனது கோவிட் -19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட புதிய தொழில் தொடக்க நிறுவனங்கள் மற்றும் சிறுகுறு தொழில் நிறுவனங்களின் நிதியியல் செயல்பாடுகளைச் சமநிலைப்படுத்தி அவற்றுக்கு நிவாரணம் அளிப்பதற்காக வேண்டி இந்தியாவின் முதலாவது பெருநிறுவன கடன் அட்டைகளை வழங்கியுள்ளது . ஈரானிய விஞ்ஞானியான மோக்சென் பஹ்ரிசாடெக் என்பவர் ஈரானின் அப்சார்டு நகரில் படுகொலை செய்யப் பட்டார் . 

Pdf link

Touch Here

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY