Ads Right Header

டிஎன்பிஎஸ்சி பெயரில் மோசடி செய்த விவகாரம்: போலி பணி நியமனம் வழங்கி பல கோடி வசூல்.


டிஎன்பிஎஸ்சி பெயரில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோருக்கு போலி பணி நியமனம் வழங்கி பல கோடி வசூலித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘‘டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணைகளுடன் பலர் வந்தனர். இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து புளியந்தோப்பு, ஆசிர்வாதபுரம் பகுதியை சேர்ந்த நாகேந்திராவ் (54), அவரது நண்பர் தண்டையார் பேட்டை ஞானசேகர் (43) ஆகியோர் ராமபுரம் பத்மாவதி, செம்பியம் சாஹிரா ஆகியோரிடம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வேலை வாங்கி தருவதாக கூறி ₹6 லட்சம் பணம் பெற்று போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கி உள்ளனர். 


இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேந்திராவ், ஞானசேகர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி பணி நியமன ஆணை, அரசு முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இதுபோல தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி பெற்று மோசடி பணியாணை வழங்கி உள்ளனர். பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட 2 பேரையும் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் முதல் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:‘‘டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்திய குருப்-2 உள்ளிட்ட ேதர்வுகளை எழுதிய நபர்களை தொடர்பு கொண்டு ₹6 லட்சம் முதல் ₹15 லட்சம் என தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளனர்.


இதற்காக தனியாக அலுவலகம் ஒன்றை நடத்தி, பணம் கொடுத்தவர்களுக்கு போலி டிஎன்பிஎஸ்சி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கினர். இந்த மோசடிக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் பலர் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மோசடிக்கு பின்னணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் யார் யார் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்”. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY