Ads Right Header

பெரியார்1000 முக்கிய குறிப்புகள்.


1922 கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு , கோவை சிறையில் இருந்தபோது ' குடி அரசு ' எனும் இதழைத் தொடங்கத் திட்டமிட்டார் . திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார் . ஆதிதிராவிடர்களை கோவிலுக்குள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்னும் தீர்மானத்தையும் முன்மொழிந்தார் . தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை . சினமுற்ற பெரியார் மனுதர்ம சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று முழங்கினார் . 

1923 சேலம் , மதுரை , திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார் . நிறைவேற்ற இயலவில்லை . 

1924 கேரளத்தில் வைக்கம் கோவில் வீதியில் தாழ்த்தப்பட்டோர் நடக்க உரிமை கோரி , தீண்டாமையொழிப்புப் போர் நடத்தி இருமுறை சிறை சென்ற பெரியார் இறுதியில் வெற்றி பெற்று ' வைக்கம் வீரர் ' என்று புகழப்பட்டார் . வ.வே.சு. அய்யரால் நிறுவப்பட்ட சேரமாதேவி குருகுலத்தில் நிலவிய ஜாதி வேறுபாட்டை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து , அக்குருகுலம் தானே ஒழியும்படி செய்தார் . திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டில் , தானே தலைவராயிருந்து வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார் . தீர்மானம் தோல்வியுற்றது . நீதிக் கட்சி ஆட்சியின் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் 

1925 ' குடிஅரசு ' வார இதழை ஈரோட்டில் 02.05.1925 இல் தொடங்கினார் . ' குடிஅரசு ' பத்திரிகாலயத்தை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் திறந்து வைத்தார் . காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்மொழிந்தார் . தீர்மானம் ஏற்கப்படாததால் மாநாட்டை விட்டு வெளியேறினார் . பார்ப்பனரல்லாதாருக்குச் சுயமரியாதை ஏற்படுத்த ஓர் இயக்கம் காண வேண்டும் என்ற எண்ணங்கொண்டார் . நீதிக்கட்சித் தலைவர் சர் . பிட்டி . தியாகராயர் மறைவுக்கு வருந்தினார் . 

1926 சுசீந்திரத்தில் தீண்டப்படாதார் கோவில் நுழைவுக் கிளர்ச்சியை ஆதரித்துக் குரல் கொடுத்தார் . இந்தி புகுத்தப்படுவதால் வரக்கூடிய கேட்டினை அறிந்து முன்கூட்டியே எச்சரித்தார் . நாடெங்கும் சுயமரியாதைச் சங்கங்களை நிறுவினார் . ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் கூட்டிய மதுரை பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார் . சுயமரியாதை இயக்கம் முகிழ்த்தது .

முழுமையாக காண

இங்கே சொடுக்கவும்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY