ரூ.3000/- ஊக்கத்தொகை, உணவுப்படி, இலவச தங்குமிடம் ஆகியவற்றுடன் கூடிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
காமராஜர் பல்கலையில் ரூ.3000/- ஊக்கத்தொகை, உணவுப்படி, இலவச தங்குமிடம் ஆகியவற்றுடன் கூடிய IAS/IPS போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இளைஞர்கள் நலப் படிப்பியல் துறையின் மூலம் தமிழாண்டு அரசு நிதியுதவி மூலம் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமியில் IAS/IPS போன்ற பதவிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு ஆண்டு தோறும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. தற்போது UPSC Prelims 2021ம் ஆண்டிற்கான தேர்வுகளுக்குரிய இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்ட உள்ளது. அதற்கான தெரிவுத்தேர்வு வரும் ஜனவரி 31ம் தேதி நடைபெற உள்ளது.
வயது: 01.08.2021 அன்று 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள்
இந்த பயிற்சி வகுப்புகள் 15.02.2021 அன்று முதல் 26.06.2021 அன்று வரை நடைபெறும். இதில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இலவச தங்குமிடத்துடன் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இந்த நுழைவுத்தேர்வில் இந்திய வரலாறு மற்றும் தேசிய இயக்கம், இந்திய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடக்குபு நிகழ்வுகள், சுற்றுப்புற சூழ்நிலை தொடர்பான பொது விவாதங்கள், உயிரின பரிணாம வளர்ச்சி, பருவநிலை மாற்றங்கள், ஆங்கிலம் மற்றும் பொதுத்திறனறிவுத் தேர்வு போன்றவற்றில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் ரூ.5/- அஞ்சல் முத்திரையிடப்பட்ட அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
Notification & Application Form:
Leave Comments
Post a Comment