Ads Right Header

TNPSC தமிழ் 50+50 வினா விடை.

 


1) அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர்?

மாணிக்கவாசகர்

2) மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுதவர்?

மாணிக்கவாசகர்

3) மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம்?

ஒன்பதாம் நூற்றாண்டு

4) மாணிக்கவாசகர் கட்டிய ஆவுடையார்கோயில் எந்த ஊரில் உள்ளது?

திருப்பெருந்துறை – புதுக்கோட்டை மாவட்டம்

5) மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?

திருவாதவூர்

6) அரிமர்த்தன பாண்டியனுக்கு குதிரைகள் வாங்கச் சென்றவர்?

மாணிக்கவாசகர்

7) திருவாதவூர் எந்த மாவட்டம்?

மதுரை மாவட்டம்

8) மாணிக்கவாசகர் கட்டிய ஆவுடையார் கோயில் எந்த மாவட்டம்?

புதுக்கோட்டை மாவட்டம்

9) சைவத்திருமுறைகளுள் எட்டாம் திருமுறை எவை?

திருவாசகமும் திருக்கோவையாரும்

10) திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் அமைந்துள்ளன?

658 பாடல்கள்

11) கல் நெஞ்சையும் கசிந்துருகச் செய்யும் பாடல்கள் அமைந்துள்ள நூல்?

திருவாசகம்

12) திருவாசகத்தின் சிறப்பை உணர்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?

ஜி.யூ.போப்

13) நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும் சொல்?

சதகம்

14) திருவாசகத்தில் உள்ள திருச்சதகத்தின் முதல் பாடல்?

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்

15) திருவாசகத்தில் உள்ள திரு என்பது?

நூலின் சிறப்பை உணர்த்த வந்த அடைமொழி

16) உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப்பொறுத்தல், இடையறாநிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை – என்று கூறியவர்?

ஜி.யூ.போப்

17) எம்முறையில் ஆராய்ந்து பார்த்தாலும் நல்ல துணையாக அமைவது ஒழுக்கமே என கூறும் நூல்?

திருக்குறள்

18) ஒருவர்க்கு அனைத்து சிறப்பையும் தருவது?

ஒழுக்கம்

19) ஒழுக்கம் உடையவர் மேன்மை அடைவர், ஒழுக்கம் இல்லாதவர் எதை அடைவர்?

அடையக்கூடாத பழியை அடைவர்

20) உலகம் முழுவதும் ஆளக் கருதுபவர் எதனை எதிர்பார்த்து காத்திருப்பர்?

அதற்குறிய காலத்தை எதிர்பார்த்து “கலங்காது” காத்திருப்பர்

21) செறுநர் என்பதன் பொருள்?

பகைவர்

22) தமிழுலகம் எவரை முதற்பாவலர் என போற்றுகிறது?

திருவள்ளுவர்

23) திருவள்ளுவரின் வேறு பெயர் எழுதுக.

தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவலர்

24) “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என பொதுநெறி காட்டிய புலவர்?

திருவள்ளுவர்

25) அறிஞர்களால் உறுதி செய்யப்பட்ட திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது?

கி.மு.31

26) தமிழக அரசு திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடிவரும் நாள்?

தைத் திங்கள் இரண்டாம் நாள்

27) திருக்குறள் என பெயர் பெற காரணம்?

மேன்மையான கருத்துக்களைக் குறள் வெண்பாக்களால் கூறுவதால்

28) இரண்டே அடிகளில் எழுதப்பட்டிருந்

தாலும் விரிவான பொருளை தரும் நூல்?

திருக்குறள்

29) நாடு, மொழி, இனம், மதம், காலம் ஆகியவற்றை கடந்து நிற்கும் நூல்?

திருக்குறள்

30) உலகப்பொதுமறை என போற்றப்படும் நூல்?

திருக்குறள்

31) திருக்குறள் எத்தனை இயல்களை கொண்டுள்ளது?

ஒன்பது இயல்கள்

32) திருக்குறளின் பெருமைகளை போற்றிப் புகழும் தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பட்ட நூல்?

திருவள்ளுவமாலை

33) வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே – என வள்ளுவரை போற்றிப் புகழ்ந்தவர்?

பாரதிதாசன்

34) இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே – என திருக்குறளை போற்றிப் புகந்தவர்?

பாரதிதாசன்

35) திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர்?

ஞானப்பிரகாசம் (மலையத்துவசன் மகன்)

36) திருக்குறள் முதன் முதலில் பதிப்பித்து எங்கு வெளியிடப்பட்டது? ஆண்டு?

தஞ்சை – 1812

37) ஏலாதியை இயற்றியவர்?

கணிமேதாவியார்

38) கணிமேதாவியாரின் மற்றொரு பெயர்?

கணிமேதையர்

39) கணிமேதாவியார் எந்த சமயத்தை சேர்ந்தவர்?

சமண சமயம்

40) சமண சமயத்திற்கே உரிய உயரிய அறக்கருத்து என்ன?

கொல்லாமை

41) கொல்லாமையை வலியுறுத்திக் கூறும் நூல்?

ஏலாதி

42) கணிமேதாவியார் வாழ்ந்த காலம்?

கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு

43) கணிமேதாவியார் இயற்றியுள்ள நூல்கள்?

ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது

44) சிறப்புப் பாயிரம் தற்சிறப்புப் பாயிரம் உள்பட 81 வெண்பாக்களை கொண்டுள்ள நூல்?

ஏலாதி

45) நான்கடிகளில் ஆறு அருங்கருத்துக்களை நவில்கின்ற நூல்?

ஏலாதி

46) தமிழருக்கு அருமருந்தைப் போன்றதாகக் கருதப்படும் நூல்?

ஏலாதி

47) ஏலாதி எனும் மருந்துப்பொருள் எவற்றால் ஆனது?

ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி

48) உண்ணுபவரின் உடற்பிணியைப் போகும் மருந்தாக கருதப்படுவது?

ஏலாதி

49) கற்போரின் அறியாமையை அகற்றும் நற்கருத்துக்களைக் கொண்டுள்ள நூல்?

ஏலாதி

50) ஏலாதி நூலில் இடம்பெறும் “வணங்கி வழியொழிகி மாண்டார்சொல்” – எனத்தொடங்கும் பாடல் எத்தனையாவது பாடல்?

ஐம்பதொன்பதாவது பாடல் (59வது பாடல்)

51) வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி – என தமிழின் பெருமையை பறைசாற்றுபவர்?

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

52) தமிழ் எத்தனை ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த இலக்கிய வளமிக்க மொழியாக திகழ்கிறது?

மூவாயிரம் (3000)

53) காலத்தால் மூத்த தமிழ்மொழி, தனித்தன்மையால் மிடுக்குற்று எவ்வாறு திகழ்கிறது?

செம்மொழியாகத் திகழ்கிறது

54) திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம் – என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்?

பரிதிமாற்கலைஞர்

55) செம்மொழி என்பது எத்தனை செவ்வியல் தன்மைகளைக்கொண்டது?

பதினாறு செவ்வியல் தன்மைகள்

56) பதினாறு செவ்வியல் தன்மைகளைக்கொண்டது செம்மொழி, அதுவே நம்மொழி – என்றவர்?

தேவநேயபாவணார்

57) உலகில் எத்தனை மொழிகள் உள்ளன?

ஆறாயிரத்திற்கும் மேல்

58) உலகில் உள்ள மொழிகளுள் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் எத்தனை?

மூவாயிரம் (3000)

59) உலக மொழிகளுள் ஈராயிரமாண்டுகட்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள்?

தமிழ், சீனம், சமற்கிருதம், இலத்தின், ஈப்ரு, கிரேக்கம்

60) வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகளில் வழக்கிழந்து போன மொழிகள் எவை?

இலத்தின், ஈப்ரு

61) ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு அம்மொழிக்கு வேண்டப்படும் அங்கீகாரங்கள் எவை?

1) பேச்சுமொழி

2) எழுத்துமொழி

3) ஆட்சிமொழி

4) நீதிமன்றமொழி

5) பயிற்றுமொழி

62) கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டத்தின் வேறுபெயர்?

இலெமூரியாக் கண்டம்

63) செம்மொழிக்கான தகுதிப்பாடுகள் பதினொன்று என கூறும் அறிஞர்?

முஸ்தபா (அறிவியல் தமிழறிஞர்)

64) முதல் மாந்தன் (மனிதன்) தோன்றிய இடம்?

குமரிக்கண்டம்

65) பழந்தமிழ்க் குமரிக்கண்டத்தில் அமைந்திருந்த தமிழ்ச்சங்கம்?

முதற்தமிழ்ச்சங்கம் மற்றும் இரண்டாம் தமிழ்ச்சங்கம்

66) மூன்றாவது தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்ட இடம்?

இன்றைய மதுரை (வட மதுரை)

67) உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை, அதன் தொன்மை கருதி கம்பர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

என்றுமுள தென்தமிழ்

68) மொழிக்கலப்பு ஏற்படக் காரணம்?

காலச்சூழல்

69) எண்ணற்ற பிறமொழிச்சொற்கள் கலந்துள்ள மொழி?

ஆங்கிலம்

70) வடமொழியில் கலந்துள்ள பிறமொழிச்சொற்கள்?

தமிழ், பிராகிருதம், பாலிமொழி

71) பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது?

தமிழ் மொழி

72) மிகுதியான வேர்ச்சொற்களை கொண்டுள்ள மொழி?

தமிழ் மொழி

73) எதைக்கொண்டு தமிழ்மொழியில் புத்தம்புது கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்ள இயலும்?

வேர்ச் சொற்க்களைக்கொண்டு

74) திராவிட மொழிகள் எவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம்

75) திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாயாக விலங்கும் மொழி?

தமிழ்மொழி

76) எந்த வடபுல மொழிக்கு தாயாக தமிழ்மொழி விளங்குகிறது?

பிராகுயி

77) பிராகுயி போன்ற வடபுல மொழிகளுக்கும் தாயாக விளங்குவது தமிழ் – என்று கூறியவர்?

டாக்டர்.கால்டுவெல்

78) தமிழ்மொழி எத்தனை மொழிகளுக்கு வேர்ச்சொற்களைத் தந்துள்ளது?

ஆயிரத்தெண்ணூறு (1800)

79) தமிழ்மொழி எத்தனை மொழிகளுக்கு உறவுப்பெயர்களைத் தந்துள்ளது?

நூற்றெண்பது (180)

80) தமிழில் உள்ள முப்பெரும் பிரிவுகள்?

இயல், இசை, நாடகம்

81) வாழ்வியலுக்கு தமிழர் எவ்வாறு இலக்கணம் வகுத்தனர்?

அகம், புறம்

82) மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்துள்ள நூல்?

திருக்குறள்

83) உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை?

சங்க இலக்கியங்கள்

84) இறவா இலக்கிய, இலக்கண வளங்கொண்டு தனக்கெனத் தனிநோக்கும் போக்கும் கொண்டுள்ள மொழி?

தமிழ்மொழி

85) சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் எத்தனை?

26,350 அடிகள்

86) சங்க இலக்கியங்களில் 26,350 அடிகளைக் கொண்டு அக்காலத்தே இவ்வளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை – என்பது யாருடைய கூற்று?

கமிலசுவலபில்

87) செக் நாட்டின் மொழியியல் பேரறிஞர்?

கமிலசுவலபில்

88) தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்று கூறிய மொழி நூலறிஞர்?

மாக்ஸ்முல்லர்

89) தமிழ்மொழி தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களை பெற்றிருக்கும் மொழி – என்று கூறியவர்?

மாக்ஸ்முல்லர்

90) மக்கள் இலக்கியம் என்றும் அழைக்கப்படுவது?

சங்க இலக்கியங்கள்

91) தமிழ்மொழியின் இலக்கண அமைப்பு எப்படிப்பட்டது?

தனிச்சிறப்பு உடையது, நுண்ணிய அறிவை உண்டாக்கவல்லது

92) தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது – என்றவர்?

கெல்லட்

93) நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழைமையனது?

தொல்காப்பியம்

94) தொல்காப்பியம் எவற்றிற்கு இலக்கணம் கூறுகிறது?

எழுத்து, சொல், பொருள்

95) தொல்காப்பியத்தின் ஆசிரியர்?

தொல்காப்பியர்

96) தொல்காப்பியரின் ஆசிரியர்?

அகத்தியர்

97) அகத்தியர் எழுதிய ஐந்து இலக்கணங்கள் எவை?

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

98) அகத்தியர் எழுதிய ஐந்திலக்கண நூலின் பெயர்?

அகத்தியம்

99) தமிழ் இலக்கியங்கள் கூறும் பொதுமை அறங்கள் எவை?

1) ஒன்றே குலம் ஒருவனே தேவன்

2) தீதும் நன்றும் விளைவது அவரவர் செயலால்

3) செம்புலப் பெயல்நீர்போல் அன்புள்ளம்

100) இனம், மொழி, மதம் கடந்த நூல்கள் எவை?

சங்க இலக்கியங்கள்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY