Effort Tnpsc Test 8 - 50 + 50 QA
நன்றி ★★★Effort Tnpsc Team.
TEST - 8
1. எந்த ஆட்சியாளர்களிடமிருந்து டார்ஜிலிங் பகுதியானது கைப்பற்றப்பட்டது ?
A. காஷ்மீர்
B. அருணாசலப் பிரதேசம்
C. மேகாலயா
D. சிக்கிம்✅
2. மதராஸ் அதிகாரபூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்ட ஆண்டு , நாள் ?
A. ஜூன் 17,1996
B. ஜனவரி 14,1969
C. ஜூலை 17,1996✅
D. ஜூன் 14, 1969
3. புனித ஜார்ஜ் கோட்டை எந்த ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது ?
A. 1774✅
B. 1922
C. 1747
D. 1874
4. டல்ஹௌசி சதுக்கம் எங்குள்ளது ?
A. மசூலிப்பட்டினம்
B. கல்கத்தா✅
C. மும்பை
D. கோவா
5. கூற்று 1: ஆங்கிலேய வணிகர்கள் சுதநூதி, கல்கத்தா மற்றும் கோவிந்தபூர் மீது ஜமீன்தாரி உரிமைகளைப்
1689ஆம் ஆண்டில் பெற்றனர்.
கூற்று 2: ஆங்கில வணிகர்கள் சுதநூதியில்
1690ஆம் ஆண்டு ஒரு குடியேற்றத்தை
நிறுவினர்.
A. கூற்று 1 மற்றும் 2 தவறு.
B. கூற்று1 சரி ,2 தவறு .
C. கூற்று 1 தவறு, 2 சரி✅.
D. கூற்று 1 மற்றும் 2 சரி.
➠விளக்கம்
ஆங்கிலேய வணிகர்கள் சுதநூதி, கல்கத்தா மற்றும் கோவிந்தபூர் மீது ஜமீன்தாரி உரிமைகளைப்
1698 ஆம் ஆண்டில் பெற்றனர்.
6. கிழக்கிந்திய கம்பெனியின்
இயக்குநர்களில் ஒருவரான யார் மாநகராட்சி உருவானதற்கு
காரணமாக இருந்தார் ?
A. பெரி திம்மப்பா
B. ஆண்ட்ரு கோகன்
C. பிரான்சிஸ் டே
D. சர் ஜோசியா சைல்டு✅
7. வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலும், அயோத்தியிலும் நகராட்சிகள் எந்த ஆண்டு
சட்டப்படி அமைக்கப்பட்டன.?
A. 1688
B. 1793
C. 1870
D. 1850✅
8. இந்தியாவில் நகராட்சி அரசாங்கம்
எங்கு ஒரு மேயர் பதவியுடன்
உருவானது ?
A. கல்கத்தா 1774
B. சென்னை 1688✅
C. கல்கத்தா 1793
D. சென்னை 1668
9. கல்கத்தா நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு ?
A. 1689
B. 1639
C. 1690✅
D. 1661
10. கூற்றை ஆராய்க ;
அ) மசூலிப்பட்டின தொழிற்சாலையின் தலைவர் மற்றும் ஆர்மகான் கழக உறுப்பினரான பிரான்சிஸ் டே
1637ஆம் ஆண்டு ஒரு புதிய குடியேற்றத்திற்கான தளத்தை தேர்ந்தெடுக்கும் நோக்கில் ஒரு ஆய்வு
பயணத்தை மேற்கொண்டார்.
ஆ) இறுதியில்
மதராசப்பட்டினத்தைத் தேர்ந்தெடுத்து, பிரான்சிஸ் டே அந்த
இடத்தை ஆய்வு செய்து, அது தொழிற்சாலை அமைப்பிற்கு ஏற்ற இடம் என்பதைக் கண்டறிந்தார்.
இ) ஸ்ரீரங்கராயலு அவரது தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால்
ஆங்கிலேயர்களின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றங்கள் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார்.
ஈ) புனித ஜார்ஜின் தினமான ஏப்ரல் 23, 1639 அன்று இதன் முதல்
தொழிற்சாலை கட்டிமுடிக்கப்பட்டு அதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
A. அ மற்றும் இ தவறு
B. அனைத்தும் சரி
C. அ மற்றும் ஈ தவறு
D. அ,இ மற்றும் ஈ தவறு✅
➠விளக்கம்
அ) மசூலிப்பட்டின
கழக உறுப்பினர் மற்றும் ஆர்மகான்
தொழிற்சாலையின் தலைவரான பிரான்சிஸ் டே
1637ஆம் ஆண்டு ஒரு புதிய குடியேற்றத்திற்கான தளத்தை தேர்ந்தெடுக்கும் நோக்கில் ஒரு ஆய்வு
பயணத்தை மேற்கொண்டார்.
இ) வெங்கடபதி அவரது தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால்
ஆங்கிலேயர்களின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றங்கள் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார்.
ஈ) புனித ஜார்ஜின் தினமான ஏப்ரல் 23, 1640 அன்று இதன் முதல்
தொழிற்சாலை கட்டிமுடிக்கப்பட்டு அதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
11.சரியானவற்றை தேர்ந்தெடு
அ. சிந்துவெளி நாகரிகம் மக்களிடையே தாய் கடவுள் வழிபாடு இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
ஆ. ரிக்வேத காலத்தில் மதச்சடங்குகளில் பெண்கள் பங்கேற்பது ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இ. ரிக்வேத காலத்தில் தந்தை வழி முறை கடுமையாக பின்பற்றப்பட்டது.
ஈ. முகலாய ஆட்சியில் அக்பர் காலத்தில் சதி ஒழிப்பு முறை கொண்டு வர முயற்சித்தார்.
A. அனைத்தும் சரி
B. அ ஆ இ சரி
C. அ ஆ ஈ சரி✅
D. அ ஈ சரி
12. வில்லியம் பெண்டிங் பிரபவால் அறிமுகப்படுத்தப்பட்ட சதி ஒழிப்பு கீழ்க்கண்ட எந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
A.விதிமுறை XVIII
B.விதிமுறை VIII
C.விதிமுறை XVI
D.விதிமுறை XVII✅
13. இந்து திருமண சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
A.1955✅
B.1956
C.1860
D.1986
14. மதராஸ் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள்
A.அக்டோபர் 7,1949
B.அக்டோபர் 9, 1947✅
C.செப்டம்பர் 9, 1947
D.செப்டம்பர்,1930
15. பொருத்துக
அ. பிரம்ம சமாஜம் -1) 1889
ஆ. ஆரிய சமாஜம். -2) 1828
இ. கற்றல் இல்லம். -3)1867
ஈ. பிரார்த்தனை சமாஜம் - 4)1875
அ ஆ இ ஈ
A. 2 4 1 3
B. 2 1 4 3
C. 2 3 1 4
D. 2 4 1 3✅
16. விவேகவர்த்தனி என்ற பத்திரிகையை நடத்தியவர்.
A.பி எம் மலபாரி
B.ரானடே
C. கந்துகூரி வீரேசலிங்கம்✅
D. கோபால கிருஷ்ண கோகலே
17. பெண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட வருடம்
A.1993
B.1992✅
C.1995
D.1997
18.தவறானதை காண்க
A. சாரதா சட்டம் -1930
B. இந்து விதவைகள் மறுமணச் சட்டம் -1856
C. தேவதாசி ஒழிப்புச் சட்டம் -1930✅
D. உள்நாட்டு திருமண சட்டம் – 1872
19. தவறானது காண்க
A. பெதுன் பள்ளி -1819✅
B. ஹண்டர் கல்வி குழு -1882
C. தேவதாசி - கடவுளின் சேவகர்
D. இந்திய மகளிர் பல்கலைக்கழகம் -1916
20. சரியான விடையைத் தேர்ந்தெடு
அ.1846ல் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 10 ஆகும்.
ஆ.1872 உள்நாட்டு திருமணச் சட்டத்தின்படி பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 14ஆகவும், ஆண்களின் திருமண வயது 18ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இ.அக்பர் ஆட்சி காலத்தில் பெண்களின் திருமண வயது 14 எனவும் ஆண்களின் திருமண வயது 16 என நிர்ணிக்கப்பட்டது.
ஈ.கிபி 1420 விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி நிக்கோலஸ் கேண்டி ஆவார்.
A.அ இ ஈ சரி
B.அ ஆ ஈ சரி
C. அ இ சரி
D. அனைத்தும் சரி ✅
21.ஆர்ட்டீசியன் நீர் ஊற்று எந்த நாட்டில் காணப்படுகிறது?
A. குயின்ஸ்லாந்து ஆஸ்திரேலியா ✅
B. சவுத்வேல்ஸ் ஆஸ்திரேலியா
C. விக்டோரியா ஆஸ்திரேலியா
D. கான்பெரா ஆஸ்திரேலியா
22.நீல நைல் நதி எங்கு உற்பத்தி ஆகிறது?
A. புரூண்டி
B. கார்ட்டும்
C. எத்தியோப்பியா ✅
D. இவை எதுவுமில்லை
கூடுதல் தகவல்
வெள்ளை நைல் உற்பத்தி புரூண்டி
நீல நைல் உற்பத்தி எத்தியோப்பியா
இரண்டும் சூடானின் கார்ட்டும் எனுமிடத்தில் இணைந்து நைல் நதியை உருவாக்குகிறது
23.மெல்லுக்கா என்பது என்ன?
A. வெப்ப மண்டலக் காடுகள்
B. அயன மண்டலக்காடுகள்
C. சதுப்பு நிலக்காடுகள் ✅
D. பருவக்காற்று காடுகள்
24. சகாரா பாலைவனத்திலிருந்தது மத்திய தரைக்கடல் நோக்கி வீசும் வெப்ப தலக் காற்றின் பெயர் என்ன?
A. ஹாரமாட்டான்
B. சின்னூக்
C. லூ
D. சிராக்கோ ✅
25.சரியானதைக் காண்?
(|) ஆப்பிரிக்காவின் சராசரி மக்களடர்த்தி 45 பேர்
(||) ஆஸ்திரேலியாவின் சராசரி மக்களடர்த்தி 3 பேர்
(|||) அண்டார்டிக்காவின் லாம்பார்ட் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும்
(|V) ஆஸ்திரேலியாவில் 8 பாலைவனங்கள் காணப்படுகிறது
A. | || ||| |V சரி
B. | || ||| சரி
C. || ||| |V சரி
D. | || |V சரி ✅
➠விளக்கம்
(|||) லாம்பார்ட் ஒரு பனியாறு
26. ஆஸ்திரேலியாவின் கால் கூர்லி மற்றும் கூல் கார்லி எங்கு காணப்படுகிறது?
A. கிழக்கு பாலைவனம்
B. வடக்கு பாலைவனம்
C. தெற்கு பாலைவணம்
D. மேற்கு பாலைவனம் ✅
27. பொருத்துக(தலைநகரங்கள்)
1) ஜாம்பியா - கம்பாலா
2) தான்சானியா - லூசாகா
3) மாலி - ராபாட்
4) மொராக்கோ - டாடோமா
5) உகாண்டா - பமாகோ
A. 5, 4, 3, 2, 1
B. 2, 4, 5, 3, 1 ✅
C. 4, 3, 2, 1, 5
D. 1, 2, 3, 4, 5
28.கூற்றைக் காண்
(|) அட்லஸ் மலையின் உயர்ந்த சிகரம் டோப்கல் 4167மீ
(||) திறந்தவெளி மிருகக்காட்சி சாலை என்பது செரன் கேட்டி
(|||) கிளிமாஞ்சாரோவின் உயரம் 5895 மீ
(|V) ஆல்ப்ஸ் மலையின் (ஆஸ்திரேலியா) உயர்ந்த சிகரம் கோசியாஸ்கோ 2230 மீ
A. | ||| |V சரி
B. || |V சரி
C. | || |V சரி
D. | || ||| |V சரி ✅
29.கூற்றைக் காண்
(|) தென் அமெரிக்காவின் வாழ்வாதார நதி ஜாம்பசி
(||) செங்கடலானது அட்லாண்டிக் பெருங்கடலை சகாரா பாலைவனத்தில் இருந்து பிரிக்கிறது
(|||) சகாராவின் மிகவும் ஆழமான பகுதி மௌண்ட் கௌசி
(|V) சாஹேல் என்பது எல்லை அல்லது விளிம்பு எனப் பொருள்படும்
A. |V சரி ✅
B. | ||| சரி
C. || சரி
D. | || ||| |V சரி
➠விளக்கம்
(|) தென் ஆப்பிரிக்காவின் வாழ்வாதார நதி ஜாம்பசி
(||) அட்லஸ் மலை பிரிக்கிறது
(|||) சகாராவின் ஆழமான பகுதி கட்டாரா ஊதுபள்ளம்
30. கூற்றைக் கவனி
(|) ஆஸ்திரேலியாவின் முதன்மை தானியப்பயிர் நெல்
(||) யுரேனியம் உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடு ஆஸ்திரேலியா
(|||) அண்டார்டிக்காவில் உள்ள பறவை, விலங்குகள் குளிரைத் தாங்க பிலிப்பர் எனும் அடர்த்தியான கொழுப்பு அடுக்கினை கொண்டுள்ளது
(|V) தென் ஆப்பிரிக்காவின் கிம்பர்லி முக்கியமான தங்க உற்பத்தி மையமாகும்
A. ||| சரி
B. |V சரி
C. || |V தவறு
D. | || ||| |V தவறு ✅
➠விளக்கம்
(|) கோதுமை
(||) ஆஸ்திரேலியா 3 வது இடம்
(|||) புளூபர்
(|V) வைரம்
31. இந்திய உச்சநீதிமன்றத்தின் அமைப்பும் மற்றும் அதிகார வரம்பின் அணிவகுப்பு கூறும் சட்டப்பிரிவு_______
A. Art 124-147 வரை✅
B. Art 148-151 வரை
C. Art 12-35 வரை
D. Art 36-51 வரை
32. உரிமையியல் மற்றும் குடிமையியல் நீதி முறைகளை மறுசீரமைத்தவர் யார்?
A. டல்ஹவுசி
B. காரன்வாலிஸ் பிரபு✅
C. கர்சன் பிரபு
D. கானிங் பிரபு
33. NALSA (தேசிய சட்ட சேவைகள் அதிகாரம்) சட்ட சேவைகள் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆண்டு?
A. 1980
B. 1970
C. 1990
D. 1987*
34. கூற்று 1 - நாட்டின் பழமையான உயர்நீதிமன்றம் அலகாபாத்தில் உள்ளது
கூற்று 2- நாட்டின் மிக பெரிய உயர்நீதிமன்றம் கல்கத்தாவில் உள்ளது
கூற்று 3 - நாட்டின் முதல் உச்சநீதிமன்றம் மதராஸ் ஆகும்
A. கூற்று1,2,3 உம் சரி
B. கூற்று 1,2,3 உம் தவறு✅
C. கூற்று 1,2மட்டும் சரி
D. கூற்று 3 மட்டும் சரி
➠விளக்கம்
1)நாட்டின் பழமையான உயர்நீதிமன்றம் கல்கத்தாவில் உள்ளது
2) நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்றம் அலகாபாத்தில் உள்ளது
3) நாட்டின் முதல் உச்சநீதிமன்றம் கல்கத்தா ஆகும்
35. பொருத்துக
A. இந்திய தண்டனைச் சட்டம்-1861
B. குற்றவியல் நடைமுறைச் சட்டம் -1860
C. உரிமையியல் நடைமுறை சட்டம்-1935
D. இந்திய அரசு சட்டம்-1859
A. 3421
B. 2341
C. 2143✅
D. 4321
36. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றம் அமைய வழி வகுத்த ஒழுங்குமுறை சட்டம் எது)
A. 1773✅
B. 1775
C. 1778
D. 1777
37. காலத்தை பொறுத்து வரிசை படுத்துக
1)பம்பாய் உச்சநீதிமன்றம்
2)மதராஸ் உச்சநீதிமன்றம்
3)கல்கத்தா உச்சநீதிமன்றம்
4)கல்கத்தா உயர் நீதிமன்றம்
A. 4321
B. 2143
C. 3214✅
D. 1234
➠விளக்கம்
1)கல்கத்தா உச்ச நீதிமன்றம் -1774
2)மதராஸ் உச்சநீதிமன்றம் - 1801
3)பம்பாய் உச்சநீதிமன்றம் -1824
4) கல்கத்தா உயர் நீதி மன்றம் -1862
38. "ஒரு சுதந்திரமான நீதித்துறை" என்ற கருத்தை முன்மொழிந்த முதல் பிரெஞ்ச் அரசியல் தத்துவஞானி யார்?
A. மெக்காலே பிரபு
B. மாண்டெஸ்கியூ✅
C. ஆடம் ஸ்மித்
D. அரிஸ்டாட்டில்
39. மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எது?
A. பஞ்சாயத்து நீதிமன்றம்
B. அமர்வு நீதிமன்றம்
C. மாவட்ட நீதிமன்றம்✅
D. துணை நீதிமன்றம்
40. முதல் லோக் அதாலத் எங்கு நடைபெற்றது?
A. குஜராத்✅
B. மும்பாய்
C. கல்கத்தா
D. டெல்லி
41. சரியானதை தேர்ந்தெடுக்கவும்
i. இந்திய ஆயுதப் படையை கெளரவிப்பதற்காக இந்திய அரசால் தேசிய போர் சின்னம் கட்டபட்டுள்ளது
ii. இந்த நினைவு சின்னம் புதுடெல்லியில் அமைந்துள்ளது
iii. 40 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது
iv. நினைவு சின்னத்தின் சுவர்களின் கல்வெட்டில் உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது
A. i ii iv சரி
B. ii iii iv சரி
C. i ii iii சரி✅
D. அனைத்தும் சரி
➠விளக்கம்
iv) நினைவு சின்னத்தின் சுவர்களின் கல்வெட்டில் உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் [பெயர்] பொறிக்கப்பட்டுள்ளது
42. BSF எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
A. மத்திய பாதுகாப்பு துறை
B. மத்திய உள்துறை✅
C. மத்திய வெளியுறவு துறை
D. திட்ட மேலாண்மை நிறுவனம
43. சரியானதை தேர்ந்தெடுக்கவும்
i ) கி.பி 1025ல் சோழ மன்னன் முதலாம் இராஜேந்திரன் ஸ்ரீ விஜயம் மீது தன் கடற்படையெடுப்பை தொடங்கினர்
ii) கேதா பகுதியை வெற்றிகொண்டார்
iii) இந்த கடல் கடந்த படையெடுப்பு இந்திய வரலாற்றில் ஒ௫ சிறப்பு நிகழ்வு ஆகும்
iv )இவ் வெற்றியின் நினைவாக இந்திய அரசு 1995ல் ரூ.5 மதிப்பு கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டது
A. அனைத்தும் சரி
B. i ii iv சரி
C. ii iii iv சரி
D. i ii iii சரி✅
➠விளக்கம்
iv )இவ் வெற்றியின் நினைவாக இந்திய அரசு [2015ல்] ரூ.5 மதிப்பு கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டது
44. அதிகாரிகள் பயிற்சி பள்ளி எந்த ஆண்டு அதிகாரிகள் பயிற்சி அகாடமி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
A. 1998✅
B. 2008
C. 2018
D. எதுவுமில்லை
45. பஞ்சசீல கொள்கையில் தவறானது
A. ஒவ்வொரு நாடுகளின் இறையான்மையை மதித்தல்
B. அமைதியாக இணைந்திருத்தல்
C. நட்பு நாடுகளின் எண்ணிகையை அதிகரித்தல்✅
D. பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை
➠விளக்கம்
நட்பு நாடுகளின் எண்ணிகையை அதிகரித்தல் வெளியுறவு கொள்கை கோட்பாட்டில் வரும்
46. அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர்
A. மானக்ஷா
B. P.K கிருஷ்ண மேனன்
C. V.K கிருஷ்ண மேனன்✅
D. மேனுகோபாலகிருஷ்ணன்
47. இந்திய நில எல்லையை பகிர்வதில் வேறுபாடான நாடு
A. பாகிஸ்தான்
B. மியான்மர்
C. இலங்கை✅
D. வங்காளதேசம்
➠விளக்கம்
[இலங்கை மட்டும் கடல் எல்லையை பகிர்கிறது. மற்றவை இந்தியாவுடன் நில எல்லையை பகிர்கிறது.]
48. கடலோர காவல் படை சட்டம் ஆண்டு
A. 1976
B. 1978✅
C. 1974
D. 1972
49. தவறானது எது
A. இராணுவத்தின் மிக பழமையான காலட் படை பிரிவில் ஒன்று மெட்ராஸ் ரெஜிமண்ட்
B. இது வெல்லிங்டன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது✅
C. 1758 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது
D. இந்த அமைப்பின் நினைவாக 2009 ஆம் ஆண்டு இந்திய அரசு ரூ.5 மதிப்புள்ள அஞ்சல்தலையை வெளியிட்டது
➠விளக்கம்
B. இது வெல்லிங்டன் என்னுமிடத்தில் தோற்றுவிக்கப்பட்டது
50. ஊர்க்காவல் படையில் சேரும் உறுப்பினர்களின் பதவிக்காலம் என்ன
A. 3 to 5 ஆண்டுகள்✅
B. 3 ஆண்டுகள்
C. 5 ஆண்டுகள்
D. 5 to 8 ஆண்டுகள்
51.இந்தியாவில் கொள்ளை நோய்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A. 1897✅
B. 1876
C. 1935
D. 1902
52.பிராண வாயு என்ற பெயரில் குறைந்த விலை கையடக்க வெண்டிலேட்டர் கருவியை உருவாக்கியுள்ள IIT?
A. IIT சென்னை
B. IIT காரக்பூர்
C. IIT ரூர்கே✅
D. IIT மும்பை
53. ஐ. நா.க்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழர்?
A. சண்முகம்
B. மகேந்திரன்
C. திருமூர்த்தி✅
D. ராஜவேலு
54.உலக அறிவுசார் சொத்துரிமை தினம்?
A. ஏப்ரல் 27
B. ஏப்ரல் 24
C. ஏப்ரல் 26✅
D. ஏப்ரல் 25
55.தன்வந்திரி என்ற பெயரில் மருந்துகளை நோயாளிகளின் வீட்டிற்கு சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம்?
A. கேரளா
B. ஒடிசா
C. குஜராத்
D. அசாம்✅
56.ஆப்ரேஷன் ஷில்டு என்ற பெயரில் கோவிட் 19 தடுப்பு திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?
A. கேரளா
B. பஞ்சாப்
C. குஜராத்
D. டெல்லி✅
57.2019ல் உலகளவில் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம்?
A. 3✅
B. 4
C. 5
D. 6
58.நூர் என்பது எந்த நாட்டின் முதல் செயற்கை கோள்?
A. ஈராக்
B. ஈரான்✅
C. சௌதி அரேபியா
D. ஆப்கானிஸ்தான்
59.The art of her deal: The untold story of Melania trump ஆசிரியர்?
A. மேரி ஜோர்டான்✅
B. சுதா சத்ய மூர்த்தி
C. சுரேஷ் படேல்
D. மாலினி சங்கர்
60.ஜம்மு காஷ்மீர் உயர்நிதிமன்ற நீதிபதி?
A. விஸ்வநாத் சோமதார்
B. முஹம்மது ரபிக்
C. ராஜனேஸ் ஆஸ்வால்✅
D. தீபாங்கார் தத்தா
61. முகமது ரூபாய் 300 அடக்க விலை கொண்ட சட்டையை 20% நஷ்டத்திற்கு சலீமிற்கு விற்றார் சலீம் அதை 10% லாபத்திற்கு விற்றால் சலீம் என்ன விலைக்கு சட்டையை விற்றார்?
A. ரூபாய் 270
B. ரூபாய் 260
C. ரூபாய் 264✅
D. ரூபாய் 280
62. ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூபாய் 1200 க்கு வாங்கினார் பின்பு அதன் அடக்க விலைக்கு மேல் 30% உயர்த்தி குறித்து விலை ஆக்கினார் இதற்கு 20% தள்ளுபடி கொடுத்து பெற்றார் எனில் விற்பனை விலை மற்றும் லாப சதவீதம் காண்க
A. 1560,6%
B. 1428,4%
C. 1248,4%✅
D. 1650,6%
63. 20% தள்ளுபடி க்கு பின்னரும் வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கிறது குறித்த விலை ரூபாய் 2200 எனில் அடக்க விலை என்ன?
A. 1600✅
B. 1760
C. 1800
D. 2080
64. ஒரு பொருளின் அடக்க விலையை விட குறித்த விலை 20% அதிகம் 10% தள்ளுபடி தரப்படுகிறது தள்ளுபடிக்கு பின் பொருளின் விலை ரூபாய் 518.40 பொருளின் அடக்க விலை என்ன?
A. 480✅
B. 576
C. 596
D. 598
65. 20 பொருட்களின் வாங்கிய விலையும் x பொருட்களின் விற்ற விலையும் சமம் இதில் லாப சதவீதம் 25% எனில் விற்ற பொருட்களின் எண்ணிக்கையானது
A. 25
B. 18
C. 16✅
D. 15
66. 5 வரைகோல் மற்றும் 4 அழிப்பானின் விலை ரூபாய் 13 அதேபோல் 9 வரைகோல் மற்றும் 5 அழிப்பானின் விலை ரூபாய் 19 எனில் 6 வரைகோல் மற்றும் 3 அழிப்பானின் விலை என்ன?
A. 9
B. 12✅
C. 15
D. 18
67. 16 நோட்டு புத்தகங்களின் அடக்க விலை 12 நோட்டு புத்தகங்களின் விற்பனை விலைக்கு சமம் இதன் இலாப சதவீதம் காண்க
A. 24%
B. 33(1/3)%✅
C. 16%
D. 12(2/3)%
68. ஒரு நபர் ஒரு பழைய மிதிவண்டியை ரூபாய் 1250க்கு வாங்கினார் அதனை சீர்படுத்த ரூபாய் 250 செலவு செய்தார் அவர் அதனை ரூபாய் 1400 க்கு விற்றார் அவருடைய லாபம் அல்லது நஷ்டத்தை காண்க
A. 6.67 % நஷ்டம்✅
B. 6.67% லாபம்
C. 6 % லாபம்
D. 6% நஷ்டம்
69. ஒரு கடைக்காரர் தனது லாபத்தில் ஐந்தில் ஒரு பங்கை தன் மேலாளருக்கு கொடுக்கிறார் மேலாளர் தனக்கு கிடைத்ததில் மூன்றில் ஒரு பங்கை தன் உதவியாளருக்கு தருகிறார் உதவியாளர் பெற்ற தொகையில் பாதி ரூபாய் 100 எனில் கடைக்காரரின் லாபம் என்ன?
A. 1500
B. 4500
C. 3000✅
D. 6000
70. குறித்த விலையிலிருந்து 20% தள்ளுபடியும் இந்த புது விலையில் இருந்து மேலும் 5% தள்ளுபடியும் கொடுக்கப்பட்டால் மொத்தத்தில் தள்ளுபடி?
A. 22%
B. 23.5%
C. 24%✅
D. 25%
71.ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
______ _______ _______
A.மாணா செய்யாமை தலை
B.தந்நோய்போல் போற்றாக் கடை
C.போற்றலுள் எல்லாம் தலை✅
D.தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
72.ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை
இக்குறளில் "கண்ணோடாது" என்பதன் பொருள் யாது?
A.தீயவற்றை பார்க்காது
B.ஒருபக்கமாக சாயாது✅
C.கண் சென்ற போக்கில் செல்லாது
C.பார்வையற்றவர்
73.இனியனும் கணியனும் மிக நெருங்கிய நண்பர்கள் .அவர்களின் நட்பு காலத்தில் மகிழ்ச்சிக்கும் சிரிப்புக்கும் பஞ்சமே இல்லை.சிலநாட்களாக கணியனின் செயல்களில் மாறுபாடுகள் கண்டான் இனியன்.அவ்வப்பொழுது எச்சில் துப்பிக்கொண்டே இருந்தான்.ஒருநாள் கணியன் நுணுக்கு புகையிலை மெல்வதை பார்த்த இனியன் அவனை திட்டிவிட்டு ஓங்கி அடித்தான்..இத்தனை நாட்களாக பாசமாக இருந்த நண்பன் தன்னை அடித்துவிட்டானே என மனவேதனை கொண்டு அப்பழக்கத்தை சிறிது சிறிதாக கைவிட்டான் கணியன்.
இந்த கதைக்கு பொருத்தமான குறளை தேர்வுசெய்க...
Aஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தானாசாம் துயரம் தரும்
B.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
C.கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
D.நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு✅
74.தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்
A.வாய்மை✅
B.புறங்கூறாமை
C.இன்னா செய்யாமை
D.இனியவை கூறல்
75.எத்தனைமுறை உறை ஊற்றிப்பார்த்தாலும் புளிக்காத பால்..
தந்தை ஊட்டிய தாய்ப்பால்..முப்பால்..
என திருக்குறளை பாடிய கவிஞர்?
A.அழகுமதி
B.அறிவுமதி✅
C.அன்புமதி
D.வெண்மதி
76.________ ஆல் தீமை உண்டாகும் என வள்ளுவர் கூறுகிறார்?
A.செய்யத்தகுந்த செயல்களை செய்தல்
B.செய்யத்தகுந்த செயல்களை செய்யாமல் இருத்தல்✅
C.செய்யத்தகாத செயல்களை செய்யாமல் இருத்தல்
D. B மற்றும் C
77.பொருத்துக
அ. இன்பம் தருவது - (1).பண்பிலாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
ஆ.நட்பு என்பது - (2).குன்றிமணியளவு தவறு
இ.பெருமையை அழிப்பது - (3).செல்வம் மிகுந்த காலம்
ஈ.பணிவுகொள்ளும் காலம் - (4).சிரித்து மகிழமட்டுமன்று
உ.பயனின்றி அழிவது - (5)பண்புடையவர் நட்பு
அ ஆ இ ஈ உ
A. 1 2 3 4 5
B. 1 2 4 3 5
C. 5 3 4 2 1
D. 5 4 2 3 1✅
78.______ ______ ______ அணிநிழல்
காடும் உடையது அரண்
A.மண்ணும் மணிநீரும் மலையும்
B.மலைநீரும் மண்ணும் மணியும்
C.மணிநீரும் மண்ணும் மலையும்✅
D.மணிநீரும் மலையும் மண்ணும்
79.குமரி திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் திருக்குறளில் உள்ள எந்த பிரிவின் அதிகாரங்களின் எண்ணிக்கைக்குச் சமம்?
A.அறத்துப்பால்✅
B.பொருட்பால்
C.காமத்துப்பால்
D.A மற்றும் B
80.அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள
இக்குறளில் "பூரியார்" என்பதன் பொருள்
A.இழிந்தவர்✅
B.மேன்மையானவர்
C.செல்வந்தர்
D.வறுமையினர்
81.காந்தியடிகள் அரிச்சந்திர நாடகத்தை பார்த்து தன் வாழ்நாளில் பொய்யுரைத்தல் கூடாது எனஉறுதிபூண்டார்.இதனால் அறவழி(அகிம்சை) என்றாலே நம் நினைவிற்கு வருவது இவரே..
இதற்கான குறள்?
A.ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு
B.இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய்கவர்ந்த் தற்று
C.வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
D.உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்✅
82.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யில்திரிந்து அற்று
இக்குறளில் பயின்றுவரும் அணி?
A.உவமையணி✅
B.இல்பொருள் உவமையணி
C.பிறிதுமொழிதல் அணி
D.ஏகதேச உருவக அணி
83. ஊக்கமது கைவிடேல் என்பது யார் கூற்று
A.திருவள்ளுவர்
B.பொய்யில்புலவர்
C.ஔவையார்✅
D.A மற்றும் B
84.உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். இதன் அதிகாரம்?
A.அருளுடைமை
B.பொருளுடைமை
C.ஊக்கமுடைமை✅
D.உள்ளமுடைமை
85.தினமும் காலையில் எழுந்து திருக்குறள் படிக்கும் பழக்கம் இருந்தவர்?
A.எலிசபத் மாகாராணி
B.விக்டோரியா மகாராணி✅
C.கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
D.காலடுவெல்
E.ஜி.யு.போப்
86. இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை யார்?.
A. டல்ஹௌசி பிரபு
B. மகலனோபிஸ்
C. கிருஷ்ணமூர்த்தி ✅
D. அமர்த்தியா சென்
87. தவறானதை சுட்டுக
A. வேளாண்துறை - 15.87%
B. பணிகள் துறை - 54.40%
C. தொழிற்துறை - 27.93%✅
D. ஆண்கள் வயது - 65. 80%
E. பெண்கள் வயது - 68.33%
[விளக்கம்: தொழிற்துறை 29.73%]
88. இந்தியாவில் அதிக அளவு பணியாளர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனம்
A. அஞ்சல்துறை
B. இரயில்வே✅
C. BHEL
D. மேற்கண்ட எதுவும் இல்லை
89. இந்தியாவில் முதல் தொழில் கொள்கை எப்போது அறிவிக்கப்பட்டது
A. 1948 ஏப்ரல் 6✅
B. 1948 ஏப்ரல் 8
C. 1948 ஏப்ரல் 3
D. 1946 மார்ச் 14
90. சரியானைவை கூறுக
1) 1950 மார்ச் அமைச்சரவை தீர்மானத்தால் திட்டக்குழு அமைக்கப்பட்டது
2) 1951 தொழிற்துறை சட்டம் இயற்றப்பட்டது
3) 2011ம் ஆண்டில் பொதுத்துறையில் வேலைவாய்ப்பில் பணியமர்த்திய நபர்களின் எண்ணிக்கை 150 லட்சம்
4) நிதி அயோக் அடிப்படையில் ஒர் மதியுரைகக் குழுவாகவும் உள்ளது
A. 1, 2, 4
B. 1, 2
C. 1,4
D. 1, 2, 3, 4✅
91. பொருந்தாதவை எது
A. ஐசிஐசிஐ வங்கி
B. விப்ரோ நிறுவனம்
C. இந்திய ரிசர்வ் வங்கி ✅
D. ஆதித்யா பிர்லா நிறுவனம்
[விளக்கம்: இந்திய ரிசர்வ் வங்கி பொதுத்துறை நிறுவனம் மற்றவை தனியார்துறையை சார்ந்தவை]
92. நவரத்னா என்ற ஒன்பது ரத்தினங்கள் யாருடைய அவையில் காணப்பட்டனர்
A. குப்தர்
B. முகலாயர்
C. டெல்லி சுல்தான்
D. A மற்றும் B✅
E. A மற்றும் C
93. தவறானதை கூறுக (பொதுத்துறை)
A. சேவை நோக்கத்துடன் செயல்படுகிறது
B. தொழிலாளர்களுக்கு முறையான ஊதியத்தை உறுதி செய்கிறது
C. SAIL, BSNL போன்றவை சில பொதுத்துறை நிறுவனங்கள்
D. வரி ஏய்ப்பு உண்டு ✅
[விளக்கம் : பொதுத்துறையில் வரி ஏய்ப்பு இல்லை ]
94. தமிழகத்தில் BHEL நிறுவனம் கீழ்கண்டவற்றில் எங்கு உள்ளது
A. ராணிப்பேட்டை✅
B. கோயம்புத்தூர்
C. தூத்துக்குடி
D. ஈரோடு
95. நிதி ஆயோக் என்றிலிருந்து செயல்பட துவங்கியது
A. 2018 ஜனவரி 1
B. 2013 ஜனவரி 1
C. 2015 ஜனவரி 1✅
D. 2016 ஜனவரி 1
96.காணிப் புவிப்படங்களை குறிக்கும் "கெடஸ்ட்ரல்" எனும் வார்த்தை எம்மொழிச் சொல்
A.இலத்தீன்
B.கிரேக்கம்
C.பிரெஞ்சு✅
D.பிரித்தானிய மொழி
97.நிலத்தோற்றம்/இயற்கையமைப்பு புவிப்படங்களில் குறைந்த உயரமுள்ள பகுதியிலிருந்து அதிக உயரமுள்ள பகுதிகளைக் குறிப்பிடும் முறையில் கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு
A.வெளிர்பச்சை-வெளிர்பழுப்பு-அடர்பழுப்பு-வெளிர்சிவப்பு-சிவப்பு✅
B.அடர்பழுப்பு -வெளிர்பழுப்பு-அடர்சிவப்பு-சிவப்பு-வெளிர்பச்சை
C.வெளிர்பச்சை -அடர்பழுப்பு- அடர்சிவப்பு-வெளிர்பழுப்பு -சிவப்பு
D.சிவப்பு-அடர்சிவப்பு-அடர்பழுப்பு-வெளிர்பழுப்பு-வெளிர்பச்சை
98.புவிப்பட தயாரிப்புமுறை குறித்து கையாளும் பாடப்பிரிவு எது?
A.சீஸ்மோகிராஃபி
B.கார்டோகிராஃபி✅
C.கார்டியோகிராஃபி
D.கெடஸ்ட்ரோகிராஃபி
99. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு எது?
A.வேளாண்துறை
B.தொழில்துறை
C.சார்புதுறை✅
D.முதன்மைத்துறை
100.2018-2019 ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு?
A.53%
B.53.30%
C.54%
D.54.40%✅
Leave Comments
Post a Comment