Ads Right Header

TNPSC important Question and Answer.

 


1. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளை எட்டு பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளவை எது?


இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் 1953.


2. மண் துகள்கள் மொத்தம் எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகிறது அவை யாவை?


3

களிமண், மணல், மண் மண்டி படிவு


3. ஈரத்தன்மையுடன் இலை மக்கைக் கொண்டும், கருமை நிறத்திலும் மற்றும் அதிக கார தன்மையுடனும் உள்ள மணல் எது?


களிமண் மற்றும் சதுப்பு நில மண்


4. இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரற்ற ஆக்சைடு களால் உருவானதுமான மற்றும் வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண்சுவரல் காரணமாக உருவாக்கப்படுகின்ற மண் எது?


- சரளை மண்


5. i) இந்தியாவில் அதிக அளவு காணப்படும் மண் எது அதன் சதவீதம் கூறுக?


ii) இது எந்த பாறைகளிலிருந்து  உருவாகின்றது? 


iii) இதில் வளரும் முக்கிய பயிர்கள்?


- கரிசல் மண் 29.69 சதவீதம்

- தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறையில் இருந்து

- பருத்தி, திணை வகைகள், புகையிலை, கரும்பு


.


6. கிரானைட் மற்றும் நைஸ் போன்ற பாறைகள் சிதவடைவதால் உருவாகும் மண் எது? இதில் எந்த சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன?


- செம்மண்- 28%

- இரும்பு மற்றும் மக்னீசியம்


7. i) ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உடைய மண் எது?


ii) ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் திறன் இல்லாம் இருந்தாலும், அதனுடன் களிமண் கலந்த வண்டல் படிவுகள் கொண்ட சமவெளிகளில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டுள்ளன?


- கரிசல் மண்

- சரளை மண்


8. தங்க இழை பயிர் என்று அழைக்கப்படும் 'சணல்' பயிரிட ஏற்ற ஒரே மண் எது?


வண்டல் மண்


9. வண்டல் மண்ணின் வகைகள் எத்தனை?

அதன் நிறங்களை குறிப்பிடுக?


-  காதர் - புதிய வண்டல் மண் - வெளிர் நிறம் உடையது


- பாங்கர் - பழைய வண்டல் மண் - அடர் நிறம் உடையது


10.  மென்துகள்களை( நுண் துகள்) கொண்டுள்ளதால் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் திறனற்ற மற்றும்

 பழுப்பு முதல் சிவப்பு நிறம் வரை நிற வேறுபாடு கொண்ட வளம் குறைந்த இம்மண்ணில் திணை பயிர்கள்  பயிரிட ஏற்ற மண் எது?


- செம்மண்


11. இந்தியாவின் மிகப் பழமையான பாசன முறை எது? இதில் #எந்த மாநிலம் #எத்தனை லட்சம் ஹெக்டர் பரப்புடன் முதல்நிலை வகிக்கின்றது?


- ஏரிப்பாசனம்

- தமிழ்நாடு 3.78 லட்சம் ஹெக்டர்


12. i) இந்தியாவின் இரண்டாவது மற்றும் முக்கியமான நீர் பாசன ஆதாரம் எது எத்தனை சதவீதம்?


ii) வற்றாத கால்வாய் பாசனத்தில் 60 சதவிகிதம் எங்கு காணப்படுகின்றது?


கால்வாய் பாசனம் - 24%

வட இந்தியா பெரும் சமவெளிகளில்


13. இந்தியாவில் மொத்த பாசனப் பரப்பளவில் 62% எந்த பாசனத்தின் கீழ் நடைபெறுகின்றது? இதில் எந்த மாநிலம் முன்னிலை வகிக்கின்றது?


கிணற்றுப் பாசனம்

உத்திர பிரதேஷ் - 26.6%


14. மைய சுழற்சி நீர் பாசனத்தின் மற்றொரு பெயர் என்ன?


- நீர் சக்கரம் அல்லது வட்ட சுழற்சி நீர்ப்பாசனம்


15. தெளிப்பு பாசனம் குறிப்பாக எந்த எந்த வகை பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது?


சோளம், கரும்பு


16. குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை பெறுதல் மற்றும் தண்ணீர் பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் எது? இது எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?


பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயினி யோஜனா-2015


17. நுண்ணீர் பாசன திட்டத்தில் எந்த ஐந்து மாநிலங்கள் மட்டும் 78 சதவீத நீர் பாசன வசதியை பெற்றுள்ளது?


குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ், தமிழ்நாடு


18. i) உலகின் பெரிய புவியீர்ப்பு அணை எது? இங்கு உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சக்தியின் அளவு எவ்வளவு?


ii) இந்தியாவின் உயரமான அணை எது? அது #எந்த ஆற்றின் குறுக்கே, எந்த மாநிலத்தில் கட்டப்பட்டுள்ளது?


iii) உலகின் மிக நீளமான அணை எது? அது #எந்த மாநிலத்தில் #எவ்வளவு நீர் பாசன பரப்பளவை கொண்டு உள்ளது?


iv) உலகின் மிகப்பெரிய நீர் மின்சக்தி திட்டம் எது அதன் உற்பத்தித் திறன்?


பக்ராநங்கல் திட்டம் - சட்லஜ் ஆறு - 1500 மெகாவாட்


தெகிரி அணை - பகிரதி ஆறு - உத்தரகாண்ட் மாநிலம் - 1000 மெகாவாட்


ஹிராகுட் - மகாநதி - ஒடிசா - 1, 41, 600 sq.km


த்ரிகார்ஜஸ் அணை - சைனா - யாங்ட்ஸி- 22, 500MW


19. தமிழ்நாட்டின் மேட்டூர் அணையில் உற்பத்தி செய்யப்படும் நீர் மின் சக்தியின் திறன் என்ன?


 - 40 MW


20. i) இடம்பெயர்வு வேளாண்மையின் வேறு பெயர்களை கூறுக?


ii) #ஒடிசா மற்றும் #மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த வேளாண்மையை எப்பெயர்களில் அழைக்கப்படுகின்றன?


- வெட்டுதல் மற்றும் எரித்தல் வேளாண்மை


ஒடிசா - பீவார் & மாசன்


மத்திய பிரதேசம் - பென்டா & பீரா


21. i) பாரம்பரிய முறையில் விளைவிக்கப்பட்ட, மொத்த விளைச்சலில் பெரும்பகுதியை குடும்ப உறுப்பினர்களால் நுகரப்பட்டு மீதமுள்ளவை அருகில் உள்ள சந்தையில் விற்கப்படும் வேளாண்மை வகை எது?


ii) இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன உத்திகளை பயன்படுத்தி- அதிகபட்ச விளைச்சலை பெறுவதை நோக்கமாக கொண்ட வேளாண்மை முறை எது?

தன்னிறைவு வேளாண்மை


தீவிர வேளாண்மை


22. இந்தியாவில் சாகுபடி ஆகும் முக்கிய பயிர் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது? அதில் எந்த பயிர்  வகைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது?


4

உணவுப் பயிர்கள்


23. தோட்டக்கலைப் பயிர்களுக்கு எடுத்துக்காட்டு தருக?


பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகள்


24.நெற்பயிரின் பூர்வீகம் எது?

 இது எந்த காலநிலையை பயிரிடப்படுகின்றது?


இந்தியா

- அயனமண்டல காலநிலையில் (~24℃ & 150cm மழைப் பொழிவு)


25. அதிக காலம் பயிரிடும் வேளாண் பருவம் எது? அது எந்த மாதத்திலிருந்து எந்த மாதம் வரை பயிரிடப்படுகின்றது?


ராபி பருவம்- அக்டோபர் முதல் மார்ச் வரை


26. கீழ்க்கண்டவற்றுக்கு உலக அளவில் இந்தியாவின் தரநிலையை கூறுக?


நெல்-2

கோதுமை-2

பருத்தி-2

நிலக்கடலை-2

தேயிலை-2

காபி-7


27. வட மாநிலங்களில் நெல் எந்த வேளாண் பருவத்தில் பயிரிடப்படுகின்றது?


- காரிப் ( ஜூன் முதல் செப்டம்பர் வரை)


28. இந்தியாவில் முதன்முதலில் ரப்பர் தோட்டம் எந்த ஆண்டு எந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்டது?


1902 -  கேரளாவில்


29. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எந்த ஆண்டில் எடுக்கப்பட்டது? 19 - வது கால்நடை கணக்கெடுப்பு இந்தியாவில் எந்த ஆண்டு எடுக்கப்பட்டது?


1919

2012


30. கீழ்கண்டவற்றுள் இந்தியாவின் கால்நடைகளில் மாநிலங்களின் தரவரிசையில்  முதலிடத்தில் உள்ளவைகளை கூறுக?


வெள்ளாடு -Rj

எருமைகள்-up

மாடுகள்-mp

பால் உற்பத்தி-up

இறைச்சி உற்பத்தி-up

தோல் உற்பத்தி-up


31. இந்தியாவில் எத்தனை சதவீதம் மக்கள் சிறிய மற்றும் குறு நில உடைமை விவசாயிகள் ஆவர்?


67 சதவிகிதம்


32. இந்தியாவில் எத்தனை பங்கு வேளாண் நிலப்பகுதியை பாசன வசதியை பெற்றுள்ளது?


மூன்றில் ஒரு பங்கு


33. தமிழ்நாட்டு உள்நாட்டு மீன் பிடித்தல் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?


வேலூர்


34. i)உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியாவின் தர நிலை என்ன?


ii) இந்தியாவில் கடல் மீன்பிடிப்பில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?


iii) இந்தியாவில் உள்நாட்டு  மீன்பிடிப்பில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?


iv) இந்தியாவின் ஒட்டுமொத்த அளவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?


2

கேரளா

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY