Ads Right Header

History 6th to 12th all boxes pdf...

 


வீரமங்கை வேலுநாச்சியார்

வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார் . அவர் ஆங்கிலேயரின் வெடிமருந்துக் கிடங்குகளைக் கண்டுபிடிப்பதற்குத் தன் உளவாளிகளைப் பயன்படுத்தினார் . நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு , ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார் . நாச்சியாரின் படையிலிருந்த இன்னொரு உளவாளி அவரால் தத்தெடுக்கப்பட்ட உடையாள் ஆவார் . இவர் ஆங்கிலேயரின் ஓர் ஆயுதக்கிடங்கை வெடிக்கச் செய்வதற்காகத் தன்னையே அழித்துக்கொண்டார் .

டாக்டர் சன் யாட் சென் ( 1866-1925 ) 

ஒரு ஏழ்மையான குடும்பத்தில் காண்டன் நகரத்தின் அருகே பிறந்த டாக்டர் சன்யாட் சென் , நவின சீனாவின் தந்தை ஒரு கிறித்தவப் பள்ளியில் கல்வி பெற்றதோடு கிறித்தவராகவும் மாறினார் . ஹாங்காங் நகரில் மருத்துவப் பயிற்சி பெற்றார் . அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த அவர் 1895 இல் மஞ்சுக்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார் . அவ்வெழுச்சி தோற்றதால் அடுத்த பதினாறு ஆண்டுகளுக்கு அவர் நாடுதுறந்து வாழும் நிலை ஏற்பட்டது . இக்காலத்தை சீனாவிற்கு வெளியே கல்வி பயின்று கொண்டிருந்த சீன மாணவர்களிடையேயும் அயல்நாட்டில் வசித்தோரிடமும் தேசியச் சிந்தனையை வளர்த்தெடுக்கப் பயன்படுத்திக் கொண்டார் . அவர் 1905 ஆம் ஆண்டு டோக்கியோவில் வைத்து ஒரு அரசியல் கட்சியைத் துவக்கினார் . அதுவே 1912 இல் கோமிங்டாங் என்றும் தேசிய மக்கள் கட்சி என்றும் உருவெடுத்தது . தேசியம் , ஜனநாயகம் , மக்களின் வாழ்க்கை முறை ஆகிய மூன்று கூறுகளைக் கொண்ட அவர்தம் கொள்கை சோஷியலிஸச் சிந்தனையையே உச்சமாகக் கருத்தில் கொண்டது . 


மார்ஷல்

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஏற்பட்ட வறுமை , வேலையில்லாத் திண்டாட்டம் , இடம்பெயர்வு போன்ற பிரச்சனைகளே மேற்கு ஐரோப்பாவிற்குள் பொதுவுடைமைக் கருத்து வளரக் காரணமாய் மார்ஷல் அமையும் என்று அமெரிக்க ஐக்கிய நாடு கருதியது . அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயலர் ஜார்ஜ் சிமார்ஷல் ஐரோப்பாவின் சுய முன்னேற்ற முயற்சிக்குத் தம் நாடு பணஉதவி செய்யுமென்று அறிவித்தார் , பதினாறு நாடுகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தன . நிர்வாக மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் அமெரிக்க ஐக்கியப் பொருளாதார ஒத்துழைப்பு நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்டன . ஐரோப்பிய நாடுகள் 13 பில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு உணவுப் பொருள்கள் , எரிசக்தி மற்றும் எந்திரங்களைப் பெற்றுக் கொண்டதோடு இதுவே ஐரோப்பாவின் தொழில் முன்னேற்றத்திற்கான முதலீடாகவும் அமையப்பெற்றது . நிதியுதவி வழங்கும் மார்ஷலின் திட்டமானது 1951 இல் முடிவுக்கு வந்தது .

முழுமையாக காண

இங்கே சொடுக்கவும்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY