Ads Right Header

8th Social Science & Maths 50 + 50 QA.

 


நன்றி Effort Tnpsc Team.

தலைப்பு - 8 வது சமுக அறிவியல் [இரண்டாம் ப௫வம் மட்டும்] மற்றும் 8 வது கணிதம் முழுவதும்


  

           🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀



1. தட்சசீல பல்கலைக்கழகம் எங்குள்ளது?


A. வடகிழக்கு பாகிஸ்தான்

B. வடமேற்கு பாகிஸ்தான்✅

C. தென்கிழக்கு பாகிஸ்தான்

D. தென்மேற்கு பாகிஸ்தான்


2. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது


(1).டெல்லியில் ஒரு மதரசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் பால்பன்

(2).சாஜகானாபாத்தில் கியாசுதின் மதரசா உள்ளது

(3).இடைக்கால இந்தியாவில் பெண்கல்வி மிகக்குறைந்த அளவிலே காணப்பட்டது

(4).மதரசா என்பது இடைநிலைப்பள்ளியையும் மக்தப் என்பது தொடக்கப்பள்ளியையும் குறிக்கும்


A. 2 மற்றும் 4 சரி

B. 1,2 மற்றும் 3 சரி

C. 2 மட்டும் சரி

D. 4 மட்டும் சரி✅

E. அனைத்தும் தவறு


➠விளக்கம்

(1).டெல்லியில் ஒரு மதரசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் பால்பன்(#இல்துமிஷ்)

(2).சாஜகானாபாத்தில் கியாசுதின் மதரசா(#மௌலான சத்ரூதின் மதரசா) உள்ளது

(3).இடைக்கால இந்தியாவில் பெண்கல்வி மிகக்குறைந்த அளவிலே(#பரவலாக) காணப்பட்டது


3.பொருத்துக

(அ). பிரான்சிஸ் சேவியர் - (1).தரங்கம்பாடி 20 பள்ளிகள்

(ஆ). மிடில்டன் -(2).பிசப் கல்லூரி

(இ).கிர்னாண்டர் -(3).கொச்சி பல்கலைக்கழகம்

(ஈ).சி.எஸ்.ஜான் -(4).இவாஞ்சிலிஸ்டிக் அமைப்பு

(உ).புளூட்சோ- (5).திருவிதாங்கூர் பள்ளி


     அ ஆ இ ஈ உ

A.  3   4   5   2  1

B.  3   5   4   1  2

C.  3   2   4   1  5✅

D.  4   5   3   2  1

E.  1   2   3   4  5


4. கீழ்க்கண்டவற்றை கவனி (சார்லஸ் உட் அறிக்கை)

(1).ஆங்கில கல்வியின் மகாசாசனம்(மேக்னகர்ட்டா)

(2).1845 ஆம் ஆண்டு

(3).அனைத்து நிலையிலிலுள்ள மக்களுக்கும் கல்வியை வழங்கும் ஆங்கிலக் கல்விக்கொள்கையின்  முதல் அறிக்கை

(4).இந்தியர்களின் கொள்கை & கலாச்சாரத்தை விலக்கி மாநிலக்கல்வி மீது முழுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது


A. 2 மட்டும் தவறு✅

B. 2, 3 மற்றும் 4 தவறு

C. 3 மற்றும் 4 தவறு

D.அனைத்தும் சரி


➠விளக்கம்

(2).(1854)ஆம் ஆண்டு


5. பாடப்புத்தகங்களின்  தரம், பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளில் முன்னேற்றம் கொண்டுவந்தது எது?


A. சார்ஜண்ட் அறிக்கை(1944)

B. இடைநிலைக் கல்விக்குழு (1952-53)✅

C. முதல் தேசியக் கல்விக்கொள்கை(1968)

D. புதிய தேசியக் கல்விக்கொள்கை (1986)


6. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?


A. நூலகத்தை பற்றிய செய்திகளை திருவாடுதுறைக் கல்வெட்டு கூறுகிறது

B. திருவிடைக்காளை கல்வெட்டு வீரராஜேந்திரன் காலத்தை சேர்ந்தது

C. பாண்டிய மன்னர்கள் சமற்கிருத மொழியை ஆதரிக்கவில்லை

D. இராஜராஜன் சதுர்வேதி மங்கலம்  எனும் ஊர் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் (எண்ணாயிரம்) அமைந்திருந்தது✅


➠விளக்கம்

A.நூலகத்தை பற்றிய செய்திகளை திருவாடுதுறைக் கல்வெட்டு(#திருவிடைக்காளை) கூறுகிறது

B.திருவிடைக்காளை கல்வெட்டு(#திருவாடுதுறை) வீரராஜேந்திரன் காலத்தை சேர்ந்தது

C.பாண்டிய மன்னர்கள் சமற்கிருத மொழியை ஆதரிக்கவில்லை(#ஆதரித்தனர்)


7. கல்வியின் நிலைகுறித்து அறிய மதராஸ் மாகாணத்தில் கணக்கெடுப்பு நடத்த ஒரு குழுவை நியமித்தவர் யார்?


A. வில்லியன் பெண்டிங்

B. தாமஸ் மன்றோ✅

C. மெக்காலே

D. சார்லஸ் உட்


8.பொருத்துக


அ.சத்துணவுத் திட்டம் -(1)1882

ஆ.மதிய உணவுத்திட்டம்-(2) 1937

இ.உள்ளூர் வாரியச் சட்டம்-(3)1956

ஈ.வார்தா கல்விச் சட்டம்-(4) 1982


     அ ஆ இ ஈ

A.   3   4   1   2

B.   4   3   2   1

C.   3   4   2   1

D.   4   3   1   2✅


9.கீழ்க்கண்டவற்றுள் சரியானது  எது?


A. 1938 ஆம் ஆண்டு தமிழ்மொழிப்பாடம் தவிர அனைத்தும் ஆங்கில மொழியிலே கற்பிக்கப்பட்டது.

B. 1929ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைக்கப்பட்டது.

C. சர்வ சிக்ச அபியான் திட்டம் 2000-2001 காலத்தில் தொடங்கப்பட்டது.✅

D. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் பத்தாம் ஐந்தாண்டுத்திட்டத்தில் செயல்படுத்தப்பட்டது


➠விளக்கம்

A.1938 ஆம் ஆண்டு தமிழ்மொழிப்பாடம் (#ஆங்கிலமொழிப்பாடம்)தவிர அனைத்தும் ஆங்கில மொழியிலே(#தமிழ்மொழியில்) கற்பிக்கப்பட்டது.

B.1929ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம்(#அண்ணாமலைப்பல்கழைக்கழகம்) சிதம்பரத்தில் அமைக்கப்பட்டது.

D.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் பத்தாம்(#பதினோறாம்) ஐந்தாண்டுத்திட்டத்தில் செயல்படுத்தப்பட்டது


10. கல்கத்தாவின் முதல் பேராயர்/பேராயர்கள் யார்?


A. பிரான்சிஸ் சேவியர்

B. மிடில்டன்✅

C. எல்பின்ஸ்டன்

D. சீகன்பால்கு &புளூட்சோ


11. கூற்று:1813 பட்டயச்சட்டம் இந்தியக்கல்வியை மேம்படுத்த ஆண்டுக்கு 10 இலட்சம் ரூபாய் தொகையை வழங்கியது.

காரணம்:1813 பட்டயச்சட்டம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக்குறைந்த அளவு ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது.


A. கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது

B. கூற்று தவறு ஆனால் காரணம் சரி✅

C. கூற்று சரி ஆனால் காரணம் தவறு

D. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு


➠விளக்கம்

கூற்று:1813 பட்டயச்சட்டம் இந்தியக்கல்வியை மேம்படுத்த ஆண்டுக்கு 10 இலட்சம் (#1இலட்சம்)ரூபாய் தொகையை வழங்கியது.


12. அகில இந்தியக் கல்விக்கொள்கையின் காலம் எது?


A. ஆங்கிலேயர் ஆட்சி முதல் 1813 வரை

B. 1813 முதல் 1853 வரை

C. 1854 முதல் 1920 வரை✅

D. 1921 முதல் 1947 


13. கீழ்க்கண்டவற்றில் எவை சரில்லாதவை?

அ. எட்வேர்ட் பெயின்ஸ் என்பவர் நெல் உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கியது என்றும் கூறினார்

ஆ. முகலாய பேரரசர் ஷாஜகான் ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்தவர் டவேர்னியார்.

இ. பிரஞ்சு நாட்டு பயணி  பெர்னியர் இந்தியாவிலுள்ள மயிலாசனம் பட்டு மற்றும் தங்கத்திலான தரைவிரிப்புகள் சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தார்.

ஈ. இந்தியாவில் நம்ப முடியாத எண்ணிக்கையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதை கண்டு வியப்படைந்தார் டவேர்னியார்


A. அ, ஆ மட்டும் தவறு

B. அனைத்தும் தவறு✅

C. அ, இ மட்டும் தவறு

D. இ, ஈ மட்டும் தவறு


➠விளக்கம் 

அ. எட்வேர்ட் பெயின்ஸ் என்பவர் (பருத்தி) உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கியது என்றும் கூறினார்

ஆ. முகலாய பேரரசர் ஷாஜகான் ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்தவர் (பெர்னியர்)

இ. பிரஞ்சு நாட்டு பயணி (டவேர்னியார்)  இந்தியாவிலுள்ள மயிலாசனம் பட்டு மற்றும் தங்கத்திலான தரைவிரிப்புகள் சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தார்.

ஈ. இந்தியாவில் நம்ப முடியாத எண்ணிக்கையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதை கண்டு வியப்படைந்தார் 

(பெர்னியர்)


14. கீழ்கண்டவற்றில் எது சரி

அ. மணிகள் தயாரிக்க பயன்படும் உலோகபோலியான வெண்கலத்திற்கு சௌராஷ்ட்ரா பெயர் பெற்றது.

ஆ. தகர தொழிற்சாலைக்கு வங்கதேசம் புகழ் பெற்றது.

இ. புகழ்பெற்றது மஸ்லின் ஆடைக்கு வங்கதேசம் புகழ்பெற்றது.


A. அனைத்தும் சரி

B. ஆ, இ மட்டும் சரி

C. ஆ மட்டும் சரி

D. இ மட்டும் சரி✅


➠விளக்கம் 

அ. மணிகள் தயாரிக்க பயன்படும் [உலோகமான] வெண்கலத்திற்கு சௌராஷ்ட்ரா பெயர் பெற்றது.

ஆ. தகர தொழிற்சாலைக்கு [மேற்கு வங்காளம்] புகழ் பெற்றது.


15. கூற்று: பிரிட்டிஷார் இந்தியாவை தங்கள் தொழில்களுக்கான மூலப்பொருட்களின்  உற்பத்தியாளர்கள் ஆக பயன்படுத்திக்கொண்டனர்

காரணம்:   பிரிட்டிஷார் தாங்கள் தயாரித்த முடிக்கப்பட்ட பொருட்களுக்கு சந்தையாகவும் இந்தியா மாறியது


A. கூற்று சரி காரணம் தவறு

B. காரணம் சரி கூற்று தவறு

C. கூற்று காரணம் இரண்டும் சரி மேலும் சரியான விளக்கம்✅

D. கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கம் அல்ல


16. எவை சரியானவை?


A. இந்தியாவின் பழமையான தொழில் நெசவு தொழில் ஆகும்.

B. சுயஸ் கால்வாய் கட்டுமானத்திற்கு பின்பு இந்தியா தொழிற்சாலை சிக்கலை சந்திக்கவில்லை

C. நவீன தொழில்துறையின் தொடக்கமானது முக்கியமாக பருத்தி ,சணல் மற்றும்  எக்கு தொழில்களின் வளர்ச்சியுடன் தொடர்புடையது

D. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பழங்களையும் சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதே நோக்கமாக இருந்தது அதுவே இந்தியாவின் வறுமை காரணம் என்று 

ஜவஹர்லால்  நேரு குறிப்பிட்டார்


A. A and B

B. B and C

C. A and C✅

D. A, B and C


➠விளக்கம் 

B.சுயஸ் கால்வாய் கட்டுமானத்திற்கு பின்பு இந்தியா தொழிற்சாலை சிக்கலை [சந்தித்தது]

D. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பழங்களையும் சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதே நோக்கமாக இருந்தது அதுவே இந்தியாவின் வறுமை காரணம் என்று 

[தாதாபாய் நௌரோஜி] குறிப்பிட்டார்.


17. அசாம் தேயிலை நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு.


A. 1939

B. 1849

C. 1839✅

D. 1849 


18. பல தொழிற்சாலைகளை உருவாகக் காரணமாக இருந்த தோட்டத் தொழில் எது வழிவகுத்தது

I   . சணல்

II . தேயிலை

III. காபி

IV. ரப்பர்


A. I, II

B. I, III

C. I✅

D. II


19. கீழ்காண்பவைகளில் எவை சரியானவை?

I. இந்தியாவில் 1854 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி நூற்பாலை நிறுவப்பட்டது

II. இந்தியாவில் 1855ஆம் ஆண்டு   மேற்கு வங்கத்தில் சணல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது

III. 1870 ஆம் ஆண்டு முதல் காகித ஆலை மேற்கு வங்க மாநிலத்தில்  துவங்கப்பட்டது

IV. TISCO நிறுவனம் ஜாம்ஷெட்பூரில் உள்ளது


A. IV மட்டும் சரி

B. I, II, III மட்டும் சரி

C. அனைத்தும் சரி✅

D. I,IV மட்டும் சரி

 

20. எவை சரியானவை ?


A. Indian industry of consideration 1985

B. consideration of Indian industry 1985

C. Indian industry of confederation 1985

D. confederation of Indian industry 1985✅

 

21. கீழ்காண்பவைகளில் சரியல்லாதவை ?

 I. பத்தாவது மற்றும் 11-ஆவது ஐந்தாண்டு திட்டங்கள் தொழில் துறையில் உயர் வளர்ச்சி விகிதத்தை கண்டன.

 II. முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் மிகவும் முக்கியமானவை ஏனெனில் அவைகள் நோக்கம் சுதந்திர இந்தியாவில் ஒரு வலுவான தொழில்துறை தளத்தை உருவாக்குவதே ஆகும்.

 III. 1948 ஆம் ஆண்டு தொழில்துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழில்துறை மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டனர்

 IV 1948 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.


A. அனைத்தும் தவறு

B. I,  II தவறானது

C. III , IVமட்டும் தவறு✅

D. IV மட்டும் தவறு


➠விளக்கம் 

 III. [1956] ஆம் ஆண்டு தொழில்துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழில்துறை மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டனர்

IV. [1991] ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.


22. முதல் தொழிற்கொள்கை ?


A. ஏப்ரல் 4 1948

B. ஏப்ரல் 6 1948✅

C. ஏப்ரல் 8 1948

D. ஏப்ரல் 2 1948


23. முதன்முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்ட இடம்


A. குல்டி 1907

B. குல்டி 1974

C. குல்டி 1874✅

D. குல்டி 1807


24. கீழ்காண்பவைகளில் எவை சரி?

I. TISCO 1912 ம் ஆண்டு தேனிரும்பு உற்பத்தி செய்தது

II. TISCO 1911 ஆண்டு உலக வார்ப்பிரும்பு கட்டிகளை உற்பத்தி செய்தது

III. SME என்பது சிறு குறு நடுத்தர நிறுவனமாகும்.

IV. MNC உள்நாட்டு நிறுவனங்கள் ஆகும்


A. IV

B. அனைத்தும் சரி

C. III

D. எதுவும் இல்லை✅


➠விளக்கம் 

I. TISCO [1911] ம் ஆண்டு தேனிரும்பு உற்பத்தி செய்தது

II. TISCO [1912] ஆண்டு உலக வார்ப்பிரும்பு கட்டிகளை உற்பத்தி செய்தது

III. SME என்பது [சிறு நடுத்தர] நிறுவனமாகும்.


25. இடம்பெயர்தலுக்கான காரணிகளை எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தலாம்


A. 3

B. 2

C. 5✅

D. 4


26. நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை_____ எனக் கூறுவர்


A. உலகமயமாதல் 

B. நகரமயமாதல்✅

C. தாராளமயமாதல்

D. ஊரகமயமாதல்


27. பொருத்துக(அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் மாநகரங்கள்)


அ. டோக்கியோ (ஜப்பான்)-1) 29 மில்லியன் 

ஆ. புதுடெல்லி (இந்தியா)- 2) 37 மில்லியன்) 

இ. ஷாங்காய் (சீனா)- 3) 22மில்லியன்

ஈ. மெக்ஸிகோ நகரம் (மெக்சிக்கோ)- 

4) 26 மில்லியன்


    அ ஆ இ ஈ

A. 3   2   1  4

B. 2   4   3  1

C. 2   1   4  3✅

D. 4   3   2  1


28. இடம் பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம்பெயர்தல்


A. குறுகிய கால இடம்பெயர்வு 

B. நீண்டகால இடம்பெயர்வு

C. பருவகால இடம்பெயர்வு

D. அனைத்தும் சரி✅


29. மக்கள் கால்நடையுடன் இடம் பெயர்தல்_____


A. குறுகிய கால இடம்பெயர்வு 

B. நீண்டகால இடம்பெயர்வு 

C. மந்த இடமாற்றம்✅

D. பருவகால இடம்பெயர்வு


30. 1950- இல் உலகின் மக்கள் தொகையில்____ சதவீதம் நகர மக்கள் தொகையாகும்


A. 40%

B. 50%

C. 30%✅

D. 20%


31. எந்த ஆண்டில் இந்தியா (17 மில்லியன்) சர்வதேச இடம்பெயர்வில் மிகப்பெரிய நாடாக உள்ளது


A. 2018

B. 2017✅

C. 2016

D. 2019


32. எந்த ஆண்டில் வரலாற்றில் முதன்முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை ஊரக மக்கள் தொகையை விட அதிகமானது


A. 2007✅

B. 2008

C. 2006

D. 2000


33. கூற்று-அறிவார்ந்த மக்கள் தொகை வெளியேறுதல் என்பது பின்தங்கிய நாடுகளை சார்ந்த தொழில் திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை தேடி வளர்ந்த நாடுகளுக்கு சென்றனர்


காரணம்- இதனால் பூர்விக பகுதிகள் பின்தங்கிய  நிலையை அடைகின்றன. இது அறிவுசார் வெளியேற்ற விளைவு என அழைக்கப்படுகிறது


A. கூற்று சரி, காரணம் தவறு

B. கூற்று தவறு, காரணம் சரி

C. கூற்று, காரணம் இரண்டும் சரி✅

D. கூற்று, காரணம் இரண்டும் தவறு


34. போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ______ஐ சார்ந்தது


A. பொருளாதாரம்

B. அரசியல்✅

C. மக்களியல்

D. சமூகம் மற்றும் கலாச்சாரம்


35. கூற்று 1 -ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, லத்தின் அமெரிக்கா, கரிபியன் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தோரில் பெண்களை விட ஆண்களே அதிகம்

கூற்று 2 -ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா குறிப்பாக மேற்கு ஆசியாவில் ஆண்களை விட பெண்களே அதிகமாக புலம்பெயர்ந்து இருக்கிறார்கள்


A. கூற்று 1,2 சரி

B. கூற்று 1,2 தவறு✅

C. கூற்று 1சரி, கூற்று 2தவறு

D. கூற்று 1 தவறு, கூற்று2 சரி


➠விளக்கம்  

கூற்று 1- ஐரோப்பா,வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா,லத்தின் அமெரிக்கா,கரீபியன் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந் தோரில் [*ஆண்களை விட பெண்களே*]அதிகம்

கூற்று 2- ஆப்ரிக்கா மற்றும் ஆசியா குறிப்பாக மேற்கு ஆசியாவில் [*பெண்களை விட ஆண்களே அதிகமாக*] புலம்பெயர்ந்து இருக்கிறார்கள்


36. இந்தியாவிலேயே_____ மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டது


A. புது டெல்லி✅

B. மும்பை 

C. பெங்களூர் 

D. கொல்கத்தா


37. செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்ட ஆண்டு


A. 1968 ஏப்ரல் 26

B. 1986 மார்ச் 26

C. 1986 ஏப்ரல் 26✅

D. 1968 ஏப்ரல் 28


38. 2016 ஆம் ஆண்டு எந்த நாட்டை கதிரியக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோள பெட்டகம் என அறிவிக்கப்பட்டது.


A. ஈரான்

B. இந்தியா

C. சீனா

D. உக்ரைன்✅


39. பொருத்துக

அ. முதல்நிலை மாசுபடுத்திகள்  -1) தீவிரவாதம்

ஆ. அபாயகர கழிவுகள் -2) சுனாமி

இ. நில அதிர்வு -3) காலாவதியான மருந்துகள்

ஈ. வானிலையியல் வறட்சி -4) சல்பர் ஆக்சைடு

உ. மனிதனால் தூண்டப்பட்ட இடர் -5) மழைப் பொழிவு குறைதல்


       அ       ஆ       இ     ஈ     உ

A.    5         3         2       1      4

B.    4         3         2       5      1✅

C.    4         2         3       5      1

D.    3         4         5       1      2


40. சுனாமி என்ற வார்த்தையை  எச்சொல்லிலிருந்து பெறப்பட்டது.


A. கிரேக்கம்

B. ஜப்பான்✅

C. கிரேக்கம்

D. ஆங்கிலம்


கூடுதல் தகவல்

சு -துறைமுகம்

நாமி -அலை

சுனாமி -துறைமுக அலை


41. கூற்றுகளில் சரியானதற்றதை தேர்ந்தெடு


அ.வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த பகுதிகளில் சுழலும் வலிமையான காற்று சூறாவளி புயல் காற்று எனப்படும்.

ஆ.சூறாவளி புயல் காற்று தென் அரைக்கோளத்தில் கடிகார திசையில் சுழலும்.

இ.சூறாவளி புயல் காற்று தென் அரைக்கோளத்தில் கடிகாரம் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுழலும்.


A. அ

B. ஆ

C. இ ✅

D. ஆ & இ


➠விளக்கம்

இ. சூறாவளி புயல் காற்று வட அரைக்கோளத்தில் கடிகாரம்  சுற்றும் திசைக்கு எதிர் திசையிலும்

👉தென் அரைக்கோளத்தில் கடிகார திசையில் சுழலும்.


42. இந்தியாவில் எத்தனை சதவீத நிலப்பகுதி நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும் பகுதிகளாக உள்ளது.


A. 15%✅

B. 16%

C. 13%

D. 20%


43. தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் இடர்களை எத்தனை வகையாக பிரிக்கலாம் .


A. 3

B. 6

C. 5

D. 8✅


44. பொருத்துக


அ.அஸ்-சஹர்   -1) பனிப்புகை

ஆ.ஹாசர்ட்       - 2) அரபு மொழி

இ.அசார்            -3) கார்பன் டை ஆக்சைடு

ஈ.இரண்டாம் நிலை மாசுபடுத்தி –4) பிரெஞ்ச் மொழி

உ. முதன்மை மாசுபடுத்தி  -5) -ஸ்பானியமொழி


      அ    ஆ    இ     ஈ    உ

A .   2      4     5       1     3✅

B.    2      3     5       1     4

C.    3      2     1       5     4

D.    2      4     1       5     3


45. கீழ்க்கண்ட பகுதிகளில் நில அதிர்வு மண்டலம் 1 இடம் பெறும் பகுதி.


A. ரான் ஆப் கட்ச்

B. வட இந்தியப் பகுதி

C. லட்சத்தீவு

D. எதுவும் இல்லை✅


46. டிசம்பர் 26 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு


A. 6.1

B. 8.9

C. 9.1✅

D. 9.5


47.கீழ்க்கண்டவற்றுள் நீரியல் தொடர்பான இடர்களில் தவறானது.

I). வெள்ளப்பெருக்கு

II) வறட்சி

III) சூறாவளி அலைகள்

Iv) இடியுடன் கூடிய புயல்


A. IV✅

B. III

C. II

D. II&IV


48.தமிழ்நாட்டில் உள்ள கடற்கரை மாவட்டங்களின் எண்ணிக்கை.


A.13

B.14✅

C.15

D.12


கூடுதல் தகவல்

1. திருவள்ளூர் 

2. சென்னை

3. செங்கல்பட்டு

4. விழுப்புரம்

5. கடலூர் 

6. மயிலாடுதுறை

7. நாகப்பட்டினம்

8. திருவாரூர்

9. தஞ்சாவூர்

10. புதுக்கோட்டை

11. ராமநாதபுரம்

12. தூத்துக்குடி

13. திருநெல்வேலி

14. கன்னியாகுமரி


49. இந்தியா பல்வேறு .............. சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே கண்ணோட்டத்தை கொண்டிருக்கும் என நேரு கூறினார்


A. மதத்தை

B. நம்பிக்கையை✅

C. சமயத்தை

D. கலாச்சாரத்தை


50. சரியானது எவை


i) சமய சார்பின்மை என்னும் சொல் செகுலம் என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து பெறப்பட்டது

ii ) ஆங்கில நாவல் ஆசிரியர் ஜார்ஜ் ஜேக்கப் Secularism பதத்தை உருவாக்கினார்

iii) செகுலம் என்பதன் பொருள் உள்ளுணர்வு


A. i, iii சரி✅

B. i, ii  சரி

C. iii, ii சரி

D. i, ii, iii சரி


➠விளக்கம்

ii ) ஆங்கில பத்திரிக்கை ஆசிரியர் ஜார்ஜ் ஜேக்கப் Secularism பதத்தை உருவாக்கினார்


51. அரசையும் மதத்தையும் தனிதனியாக பிரிக்கும் கோட்பாடு


A.  ஆத்திகம்

B. சமயசார்பின்மை✅

C.சுதந்திர கோட்பாடு

D. சமநிலை கோட்பாடு


52. சமயம் நமக்கு பகமையை போதிக்கவில்லை; நாம் அனைவரும் இந்தியர் மற்றும் இந்தியா நமது வீடு-இக்கூற்று குரியவர்


A. நேரு

B. கபீர்

C. இக்பால்✅

D. பாஷ்யம்


53. ஒரு அரசாணை எந்த ஒரு மதத்தை சார்ந்த பிரிவினருக்கும் எதிராக குற்றம் சாற்ற கூடாது என அறிவித்த பேரரசர்


A. அக்பர்

B. அசோகர்✅

C. கனிஷ்கர்

D. ஹர்சர


54.  சரியானது எவை 

i)முகலாய பேரரசர் அக்பர் மத சகிப்புதன்மையை பின்பற்றினார்

ii)அக்பருடைய தீன் - இலாஹி தெய்விக நம்பிக்கை  ஆகும்

iii)அக்பருடைய சுல்- இ - குல் அனைத்து மக்களிடயே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது


A. i ii சரி

B. i iii சரி

C. அனைத்தும் சரி✅

D. அனைத்தும் தவறு


55. சமய சார்பற்ற என்ற சொல் எந்த சட்ட திருத்தம் ( மற்றும் ஆண்டு) மூலம் அரசமைப்பில் ஏற்றுகொள்ளப்பட்டது 


A. 42, 1976✅

B. 44, 1977

C. 50, 1980

D. 56, 1990 


56. பம்பாய் - மாநிலம் ரத்திலால் வழக்கு


A. 1956

B. 1954✅

C. 1952

D. 1950


57. வரிசைப்படுத்துக(முகவுரை)

i) மக்களாட்சி

ii) சமதர்ம

iii) சமய சார்பற்ற

iv) இறையான்மை

v)  குடியரசு

vi) இந்தியா


A.  vi, iv, i, ii, iii, v

B.  vi, iv, ii, iii, i, v✅

C.  iv, ii, iii, i, v, vi

D.  iv, i, ii, iii, v, vi


58. தவறானது


i) கஜீரா கோவில் 19 ஆம் நூற்றாண்டை சார்ந்தது

ii) இக்கோவிலின் கோபுரம் வழக்கத்துக்கு மாறாக அமைந்துள்ளது

iii) இல்லாமிய பாணியிலான சிகரத்தை கொண்டுள்ளது

iv) கடவுள் மீது நம்பிகை யற்றுயிருத்தல் ஆத்திகம்


A. i, iv தவறு

B. ii, iii தவறு✅

C. iii மட்டும்

D. ii மட்டும்


➠விளக்கம்

ii. இக்கோவிலின் சிகரம் வழக்கத்துக்கு மாறாக அமைந்துள்ளது

iii. இல்லாமிய பாணியிலான குவிமாடத்தை கொண்டுள்ளது


59. இந்தியா ஒரு .........கொண்ட நாடு


A. பல சமய நம்பிக்கை

B. கலாச்சாரம்

C. பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை

D. A மற்றும் C மட்டும்

E. அனைத்தும்✅


60. தவறானது எது


i. பிரிவு 14 பொது வேலை வாய்பில் சமமாக வாய்ப்பளிக்கிறது

ii.பிரிவு 26 சமய விவகாரங்களை நிர்வகிப்பதில் சுதந்திரம் தருகிறது

iii.பிரிவு 29 (2) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை

iv. இந்தியாவில் எவ்வித சமய நம்பிக்கை கொண்டிருந்தாலும் அவர் அரசு பணியில் நுழைய தகுதி உடையவர்


A. i மட்டும்✅

B. ii மட்டும் 

C. iii மட்டும்

D.  iv மட்டும்


➠விளக்கம்

i.பிரிவு 16 பொது வேலை வாய்ப்பில் சமமாக வாய்ப்பளிக்கிறது


61. இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமயம் வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள்


A. அடிப்படை உரிமைகள்

B. சட்ட உரிமைகள்

C. மனித உரிமைகள்✅

D. சமூக உரிமைகள்


62. பண்டைய ........  முதல் மன்னர் மகா சைரஸ்


A. கிரேக்க

B. இலத்தீன்

C. பாபிலோனியா 

D. பாரசீக✅


63. பொருத்துக


அ. இந்து வாரிசு சட்டம்- 1)1956

ஆ. வன்கொடுமை தடுப்புச் சட்டம்- 2)2005

இ. தோட்டத் தொழிலாளர் சட்டம்- 3)1951

ஈ. சுரங்க சட்டம் - 4)1952


    அ ஆ இ ஈ

A. 1   2   3  4✅

B. 4   3   1  2

C. 1   2   4  3

D. 4   1   2  3


64. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வழிவகைசெய்யும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு


A. 31 (F)

B. 39 (F)✅

C. 37(F)

D. 21 (F)


65. POCSO.........


A. Protection of Children from Sexual offences✅

B. Produced to Child Scholership offers

C. Protection of Commision Selection organization

D. None this above


66. தவறானவை கூறுக


I. 1979 ஆம் ஆண்டை சர்வதேச குழந்தைகள் ஆண்டாக இந்திய அரசு அறிவித்தது.

II. மாநில மனித உரிமைகள் உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்களைக் உள்ளடக்கியது

III. டிசம்பர் 10 இந்திய மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

IV. மனித உரிமைகள் பிரகடனத்தில் 30 சட்டப்பிரிவுகள் உள்ளன


A. II, IV

B. III

C. I, III✅

D. I, II, III, IV


[ விளக்கம்: 

I. 1979 ம் ஆண்டை ஐநா சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவித்தது.

III. டிசம்பர் 10 உலக மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது ]


67.  மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் உள்ள மாநிலபட்டியல்& பொதுப்பட்டியல் கீழுள்ள துறைகளில் வழக்கினை விசாரிக்கும்


A. 5வது அட்டவணை

B. 7வது அட்டவணை✅

C. 4வது அட்டவணை

D. 9 வது அட்டவணை


68. கூற்று: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான, சட்டப்பூர்வமான அரசியலமைப்பு சாராத ஒரு அமைப்பாகும்


காரணம் : இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பவர் கவர்னர்


A. கூற்று மற்றும் காரணம் சரி

B. கூற்று தவறு, காரணம் பொருந்தவில்லை

C. கூற்று தவறு , காரணம் தவறு

D. கூற்று சரி, காரணம் தவறு✅


[ காரண விளக்கம்: இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பவர் குடியரசு தலைவர்]


69. சரியானவை தேர்ந்தெடுத்து எழுதுக


I. அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா 1791

II. அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களையும் தொகுப்பானது ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில்  வேரூன்றியிருந்தது

III. பிரிவு 24 குழந்தை தொழிலாளர் முறையை தடைசெய்கிறது

IV.  நான்காவது உலக மகளிர் மாநாடு 1995 பெய்ஜிங்கில் நடைபெற்றது


A. I, III, IV

B. I, III

C. அனைத்தும் சரி✅

D. அனைத்தும் தவறு


70. பெண்களின் திருமண வயதை 21 என சட்டப்பூர்வமாக்கியது


A. 1956 இந்து திருமண சட்டம்

B. 1955 இந்து திருமண சட்டம்✅

C. 1860 இந்து திருமண சட்டம்

D.  2018 இந்து திருமண சட்டம்


71. உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம்....


A. திருக்குறள்

B. மனித உரிமைகள் அறிக்கை✅

C. குரான்

D. அடிப்படை உரிமைகள்


72. தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை சீர்த்திருத்த சட்டம் ஆண்டு


A. 1989✅

B. 1999

C. 2009

D. 2019


73. இந்தியாவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் யாரால் ஒருங்கிணைக்கப் படுகிறது?


A. மாநில நெடுஞ்சாலை ஆணையம்

B. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

C. தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

D. இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில்✅


74. சேது பாரதம் திட்டம் எந்த ஆண்டிற்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும், இருப்புப்பாதை

குறுக்கீடு இல்லாமல் உருவாக்குவதை

நோக்கமாக கொண்டுள்ளது. ?


A. 2021

B. 2019✅

C. 2020

D. 2022


75. சாலை ஒழுங்குமுறை சம்பந்தமான விதிகள் எந்த நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.?


A. 1/07/1989✅

B. 1/06/1998

C. 1/06/1989

D. 1/07/1988


76. கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்களுக்கு ஓட்டுநர் மீது காவல் துறை எந்த பிரிவின் கீழ் கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்யநேரிடும்.?


A. 302 B

B. 302 A

C. 304 A✅

D. 304 B


77. எந்த வடிவில் இடம்பெற்ற குறியீடுகளை மீறுவது சாலை மற்றும் போக்குவரத்து  துறையினால் சட்டப்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும் ?


A. செவ்வகம்

B. முக்கோணம்

C. சதுரம் 

D. வட்டம்✅


➠கூடுதல் விளக்கம் 

D.வட்டம் (கட்டாய குறியீடு)


78. மது அருந்தியதைக் கண்டறிய 

எவ்வகை சோதனை செய்யப்படுகின்றது.?


A. சீரான சுவாச பரிசோதனை

B. சீரற்ற சுவாச பரிசோதனை✅

C. அலைவு இயக்க சோதனை

D. சீர்மை சுவாச பரிசோதனை


79. சாலை விபத்தில் சிக்கியவர்கள் பணமில்லாபரிவர்த்தனை மூலம் சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம் எந்த தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது ?


A. NH 8 & NH 33✅

B. NH 7 & NH 33

C. NH 8 & NH 32

D. NH 7 & NH 32


80. செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள் சாலை பாதுகாப்பிற்காக எத்தனை எத்தனை உறுதி மொழிகளைப் பரிந்துரைத்துள்ளது ?


A. 25

B. 15 

C. 12

D. 10✅


81. ABS என்பதனை விரிவாக்கம் செய்க.


A. எதிர் நிறுத்தி ஆரம்பம்

B. வருடாந்திர அடிப்படை அமைப்பு 

C. பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு✅

D. இவற்றுள் எதுவுமில்லை


➠விளக்கம் 

 C) Anti-lock Braking System ( பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு)


82. பின்வரும் கூற்று(களில்) சரியல்லாதது எது?

(i) முன்புற வாகனத்திலிருந்து சரியான 

இடைவெளியில் தொடரவும்.

(ii) வேக கட்டுப்பாட்டு அளவினைக் 

கடைபிடிக்க வேண்டும். ஒருபோதும் 

வேகத்திற்கான எல்லையினைத் 

தாண்டக்கூடாது. 

(iii) வாகனம் ஓட்டும்பொழுது இருக்கை

வார்பட்டை அணியத் தேவையில்லை.

(iv) வளைவுகளிலும் திருப்பங்களிலும் 

வேகத்தினைக் குறைக்க கூடாது.


A. i, iii மட்டும் 

B. ii, iv மட்டும்

C. i, ii மட்டும் 

D. iii, iv மட்டும்✅


➠விளக்கம் 

iii)விமானம் ஓட்டும்பொழுது இருக்கை வார்பட்டையை கட்டாயம் அணிய வேண்டும்.

iv) விளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினை குறைக்க வேண்டும்


83. சாலை பாதுகாப்பினை

மிக முக்கியமானதாக கருதி இந்தியா, 

எந்த பிரகடனத்தில் 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டது ?


A. பிரேசிலியா பிரகடனம்✅

B. வியன்னா பிரகடனம்

C. பாரிஸ் பிரகடனம்

D. பிரிக்ஸ் பிரகடனம்


84. அயல்நாட்டு பிரதிநிதிகள் மற்றும் தூதர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் எந்நிற தகடு பயன்படுத்தப்படுகிறது ?


A. வெள்ளை வண்ணத்தகடு

B. சிவப்பு வண்ணத்தகடு

C. நீல வண்ணத்தகடு✅

D. மஞ்சள் வண்ணத்தகடு


85. B, 86. C, 87. C, 88. B, 89. C, 90. C, 91. C, 92. C, 93. A, 94. C, 95. C, 96. B, 97. C, 98. C, 99. A, 100. A


97. ➠விளக்கம் 

(||) 1.433×10^14 கிமீ^3

(|||) 8.5 × 10^-7 மிமீ








Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY