Ads Right Header

விஜயநகர பேரரசு: =கி.பி. 1336 முதல் 1672 வரை...

 


விஜயநகர பேரரசு:


 =கி.பி. 1336 முதல் 1672 வரை


= கிருஷ்ணதேவராயரின் ஆமுக்த மால்யதம், கங்காதேவி எழுதிய மதுராவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம் போன்றவை விஜயநகர சமகால நூல்களாகும்.


= மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த இபன்பதூதா,வெனிஸ் பயணி நிக்கோலோ டி  கோண்டி,பாரசீக பயணி அப்துல் ரசாக், போர்ச்சுகீசிய பயணி, தோமிங்கோபயஸ்  போன்ற பயணிகள் விஜயநகர கால சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி தங்களது பயணக் குறிப்புகளில் விவரித்துள்ளனர்.


=சங்கம மரபைச் சேர்ந்த ஹரிஹரரும் புக்கரும் 1336ஆம் ஆண்டு விஜயநகரத்தை நிறுவினார்.


==இரண்டாம் தேவராயரின் *ஸ்ரீரங்கம் செப்பேடு* விஜயநகர அரச வழித்தோன்றல்கள் மற்றும் அவரது சாதனைகளைப் பற்றி கூறுகிறது.


= ஹம்பி இடிபாடுகள் விஜயநகர ஆட்சியாளர்களின்  பண்பாட்டுப்  பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன.


= குமார காம்பணரின் மதுரை படையெடுப்பு குறித்து *மதுரா விஜயம்* என்ற நூலில் விவரமாக கூறப்பட்டுள்ளது.


= சங்கம மரபின் சிறந்த அரசர் இரண்டாம் தேவராயர்.


*சாளுவநரசிம்மர்* சாளுவ மரபை தோற்றுவித்தவர்.


*வீரநரசிம்மராவ்* துளுவ மரபு தோற்றுவிக்கப்பட்டது.விஜயநகரத்தின் மிகச்சிறந்த பேரரசரான *கிருஷ்ணதேவராயர்* துளுவ மரபைச் சேர்ந்தவர்.


*திவானி* என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கிருஷ்ணதேவராயர் முஸ்லிம் படைகளை இறுதியாக முறியடித்தார்.


= கிருஷ்ணதேவராயர் தாம் வைணவராக இருந்த போதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார்.கலை,

இலக்கியப் புரவலராகவும்  திகழ்ந்தார். எனவே அவர் *ஆந்திரபோஜர்* என்றும் அவர் அழைக்கப்பட்டார்.


=-அல்லசானி பெத்தண்ணா

*ஆந்திர கவிதாபிதாமகர்* என்று புகழப்படுகிறார்.


=அல்லசானி பெத்தண்ணாவின் முக்கிய படைப்புகள்: *மனுசரிதம், ஹரிகதா சாரம்*


= கிருஷ்ணதேவராயர் இயற்றியுள்ள நூல்கள்:


1.ஆமுக்தமால்யதம் (தெலுங்கு)

2.ஜாம்பவதி கல்யாணம்,

3.உஷாபரிணயம்  என்ற வடமொழி நூல்களையும் இயற்றியுள்ளார்.


= விஜயநகரத்தில் விட்டலசுவாமி  மற்றும் ஹசரராமசுவாமி ஆலயங்களையும்,

தனது பட்டத்தரசி நாகலாதேவி நினைவாக நாகலாபுரம் என்ற புதிய நகரை நிர்மாணித்தார்.


= தலைக்கோட்டை போர்-1565.இப்போர் *ராக்ஸதாங்கடி* என்றும் அழைக்கப்படுகிறது.


= விஜயநகர அரசின் கடைசி அரசர் *இரண்டாம் ஸ்ரீரங்கர்*


ஆட்சிமுறை:

===============


 பேரரசு=>மண்டலம்=>

நாடு=>ஸ்தலம்(கிராமம்)


- மண்டலத்தின் ஆளுநர் *மண்டலேஸ்வரர்* அல்லது *நாயக்* என்று அழைக்கப்பட்டார்.


- விஜயநகர ஆட்சியாளர்கள் *உள்ளாட்சி அமைப்புகளுக்கு* ஆட்சியில்  முழு அதிகாரங்களை வழங்கி இருந்தனர்.

=-விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நில வழியாக வசூலிக்கப்பட்டது.


- நீதித்துறையை பொறுத்தவரை உடல் உறுப்புகளைச் சிதைத்தல், யானைக்காலால் இடறுதல்  போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டன.


- ராணுவத்தின் உயர் அதிகாரிகள் நாயக் அல்லது பாளையக்காரர் என்றழைக்கப்பட்டனர்.அவர்கள் ஆற்றும் பணிக்கு ஈடாக நிலங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலங்கள் *அமரம்* என்றழைக்கப்பட்டது.


= *படை வீரர்களுக்கு ஊதியம் பணமாகவே வழங்கப்பட்டது*.


சமூக வாழ்க்கை:


- பிராமணர், சத்திரியர்,வைசியர்,

சூத்திரர் என்ற நான்குவகை பிரிவுகள் விஜயநகர சமூகத்தில் இருந்ததாக *அல்லசானி பெத்தண்ணா* தனது மனு சரிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.


- செல்வந்தர்களின் அழகான வீடுகள் அவற்றில் பணிபுரிந்த ஏராளமான பணியாளர்கள் பற்றிய விவரங்களை *பயஸ்* குறிப்பிட்டுள்ளார்.


- அடிமைகள் பற்றி  *நிக்கோலோடிகோண்டி*  தனது குறிப்புகளில் கூறியுள்ளார்.


-பொழுதுபோக்குகள்: 

*நடனம், இசை, சூதாட்டம், சேவல் சண்டை, மல்யுத்தம்* போன்றவை.


=- சங்கமா மரபினர் சைவர்களாகத் திகழ்ந்தனர். *விருப்பாட்ஸர்* அவர்களின் குலதெய்வம். மற்ற மரபினர் வைணவர்கள்.


- ராமானுஜரின் ஸ்ரீ வைஷ்ணவம் மக்களிடையே புகழ்பெற்று விளங்கியது.


- மக்கள் அனைவரும் சமய சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற்று செக்ஸ்வீடியோ திகழ்ந்தனர் என

 *போர்போசா* குறிப்பிட்டுள்ளார்.


-மகளிர்நிலை:

============


- மகளிர் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை.


- குமார கம்பணரின் மனைவி கங்காதேவி மதுரா விஜயம் என்ற நூலை எழுதினார்.


*ஹன்னம்மா, திருமலம்மா* இருவரும் அக்காலத்தில் புகழ்வாய்ந்த பெண்புலவர்கள்.


- பெண்கள் அரண்மனைகளில் பணிப்பெண்களாகவும்,நாட்டிய மகளிராகவும்,பல்லக்கு சுமப்பவர்களாகவும் இருந்தனர் என்று *நூனிஸ்* கூறுகிறார்.


- தேவதாசி முறை வழக்கத்தில் இருந்ததாக *பயஸ்* குறிப்பிட்டுள்ளார்.


-பலதாரமணம் அரச குடும்பங்களில் வழக்கத்தில் இருந்தது.


- 'சதி' வழக்கம் பெருமையாகக் கருதப்பட்டது.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY